வியாழன், 17 நவம்பர், 2011

சொல்லுங்கய்யா… சொல்லுங்க….


விடிஞ்சதும் வியாபரத்துக்கு
மீன் வாங்கனுமே… இருக்குற காசுல!

உவரிப் பக்கம் போகனும்
இல்லனா
முட்டம் பக்கம் போகனும்,

கூடையில மீனுகள அள்ளிப்போட்டு
திசையன்விளை சந்தையில்
வித்துப்புடனும்…

எப்பாடுபட்டாச்சும் கொஞ்சம் காச சேத்துடனும்..
மூனுவேளைச் சோத்த ஒருவேளையாக்கியாவது…

நவலடி பக்கம் போற மினிபஸ் ,
எனக்கு வேணாம்யா….
என்னோட சேத்து மீனுக்கும் டிக்கெட் கிழிப்பானுக!

கால்நடையா வீடு போயி சேந்திடுவேன்,
இளப்பாத்தும் நேத்துமீந்த சோத்துத் தண்ணி,

உழைப்பால உயர்ந்த தமிழனுகனு சொல்ல
மீன் வித்த காசுலயும் ,
நடந்து மிச்சம் புடிச்ச காசயும்

பட்டினியால வாடி இருக்கும் என்மக்க
போராடும் போராட்டத்துக்கு குடுப்போம்யா!

வெளிநாட்டுக்காரனுக்கு லட்டு திங்க ஆசையாம்
எங்க ஊர்காரனுக்கு ஒரு சக்கரையா
கரண்ட் ட காட்டி ஏமாத்றாய்ங்க

இத தட்டிக்கேட்டா நம்ம அதிகாரிகளே
எங்கள வெளிநாட்டுக்கூலிங்கராயிங்க…

பத்துபேரு வாழ நான் சாகறேன் ஆனா
பாழாப்போன வெளிநாட்டு முதலாளிகளும்
பாழாக்குற நம்ம நாட்டு அரசியல்வாதிகளும் வாழ
எங்க ஊரெல்லாம் சாகனுமா?
சொல்லுங்கய்யா…
சொல்லுங்க….

1 கருத்து: