வியாழன், 24 நவம்பர், 2011

துப்புகெட்ட தினமலர்…நடுநிலை என்ற பெயரில் அரசியல்வாதிகளின் ஊடகத்தைவிட கேடுகட்டத்தனமான ஒரு கட்டுரையை தினமலர் வெளியிட்டுள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்தை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தலாம் மக்களின் நம்பகத்தோடு என்பதனை தினமலரைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கூடங்குளம் அணு உலைக்கு என்ன தீர்வு எடுக்கலாம் , அந்த பிரச்சனை யாரை பாதிக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், மேலாதிக்கத்திற்காகவும் தனக்கு விருப்பு இல்லாத பட்சத்தில் வெறுப்பாக தனது சுய கருத்தை நடுநிலை என்ற பெயரில் மக்களுக்கு திணிக்கவும் செய்யும் தினமலருக்கு சிறப்புக் கட்டுரை எழுதிய நண்பரையும் மரியாதைக்குரிய ஆசிரியரையும் இடிந்தகரையில் குடிபெயர தைரியம் இருக்கிறதா?

போராட்டம் நடத்தும் 3பேரின்  எண்களை கொடுத்ததோடு அவர்களை இழிவு படுத்திய தங்களால், அணு உலைக்கு ஆதரவு கொடுக்கும் நண்பர்களின் உண்மை நிலவரத்தை சொல்ல தைரியம் இல்லாதது ஏன்? அப்துல்கலாம் அவர்களின் எண் கொடுக்கலாமே தெளிவு படுத்த…. ?

அரசியல் அராஜகத்தை தட்டிக்கேட்க்க தைரியம் இல்லாத பா…. ஊடகம் தானே தினமலர் செய்தி ஊடகம்.

தினமலரைச்சார்ந்த யாருக்காவது தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள் நண்பர்களே….உங்கள் ஜால்ரா நியாம் என்று !


அமெரிக்கபோரினால், ஆட்டோமிக் ஊரானியும் பதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் குழைந்தைகளை பாருங்கள். www.rense.com/​general70/deathmde.htm இந்த நிலைமை வருங்கால சந்ததிக்கு தேவையா என்று சிந்தித்து எழுதுங்கள் 

ஞாயிறு, 20 நவம்பர், 2011

இப்போதுதான் வெடித்ததா கூடங்குளம் போராட்டம்?

சரியான தொலை நோக்கு பார்வை வேண்டும் என்பதை நாம் மறந்த காலம் இது… இன்றைக்கு தொலைத்துவிட்ட பிறகே எதையும் நோக்குகின்றோம். மக்களின் வாழ்வாதாரத்தை தொலைக்கும் முன்பே காக்க வேண்டிய பொறுப்பில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
மக்களுக்கான போராட்டம் என்றாலே முதலில் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட் தோழர்கள் மவுனம் சாதிப்பதை கேள்வி கேட்ட ஒரு கட்டுரையை படித்தேன்…

நீங்களும் நண்பர் முத்துக்குமாரின் கட்டுரையை படியுங்கள்..

வெள்ளி, 18 நவம்பர், 2011

வருக… வருக…!உருவ பொம்மையை எரிக்கும் 
உதவாக்கரை தலைவர்
அவர்களே… வருக வருக!


ஒரு லட்சம் கையெழுத்தை 
தானே போட்ட 
தானே தருதலைவன் அவர்களே 
வருக வருக!


நவ.20ல் போராட்டம் என்று 
போலி வார்த்தையால் 
வாய்ஜாலம் போடும் குள்ள நரியே
வருக.. வருக..!


எங்கள் மண்ணை வீர நிலமாக்குவோம்
வீணான நிலமாக்கி வீழமாட்டோம்!


அட்ரஸ் இல்லாத  கட்சியின் தலைவரே..!


கத்தி போராடும் என் மண்ணின் மைந்தர்களை 
கத்தி சண்டை போட வைக்காதே…!


இது அறப்போர் மட்டும் அல்ல…
உன் போன்ற அயலவனுக்காக ஆடுபவர்களை 
அறுத்தெரியும் போர்…!


பல்லாயிரம் குடும்பத்தின் உலையை அணைத்து,
நவ.20ல் அணு உலையை திறக்க திறமை இருக்கிறதா…
மா(ங்கா) வீரரே.. வாரும் வாரும்… 

வியாழன், 17 நவம்பர், 2011

சொல்லுங்கய்யா… சொல்லுங்க….


விடிஞ்சதும் வியாபரத்துக்கு
மீன் வாங்கனுமே… இருக்குற காசுல!

உவரிப் பக்கம் போகனும்
இல்லனா
முட்டம் பக்கம் போகனும்,

கூடையில மீனுகள அள்ளிப்போட்டு
திசையன்விளை சந்தையில்
வித்துப்புடனும்…

எப்பாடுபட்டாச்சும் கொஞ்சம் காச சேத்துடனும்..
மூனுவேளைச் சோத்த ஒருவேளையாக்கியாவது…

நவலடி பக்கம் போற மினிபஸ் ,
எனக்கு வேணாம்யா….
என்னோட சேத்து மீனுக்கும் டிக்கெட் கிழிப்பானுக!

கால்நடையா வீடு போயி சேந்திடுவேன்,
இளப்பாத்தும் நேத்துமீந்த சோத்துத் தண்ணி,

உழைப்பால உயர்ந்த தமிழனுகனு சொல்ல
மீன் வித்த காசுலயும் ,
நடந்து மிச்சம் புடிச்ச காசயும்

பட்டினியால வாடி இருக்கும் என்மக்க
போராடும் போராட்டத்துக்கு குடுப்போம்யா!

வெளிநாட்டுக்காரனுக்கு லட்டு திங்க ஆசையாம்
எங்க ஊர்காரனுக்கு ஒரு சக்கரையா
கரண்ட் ட காட்டி ஏமாத்றாய்ங்க

இத தட்டிக்கேட்டா நம்ம அதிகாரிகளே
எங்கள வெளிநாட்டுக்கூலிங்கராயிங்க…

பத்துபேரு வாழ நான் சாகறேன் ஆனா
பாழாப்போன வெளிநாட்டு முதலாளிகளும்
பாழாக்குற நம்ம நாட்டு அரசியல்வாதிகளும் வாழ
எங்க ஊரெல்லாம் சாகனுமா?
சொல்லுங்கய்யா…
சொல்லுங்க….

செவ்வாய், 8 நவம்பர், 2011

திட்டம்…
மூங்கில் காடுகளையே

அழிக்கத் திட்டமிட்டேன்

மூன்றாம் வகுப்பில்,

மூங்கில் பிரம்போடு நுழையும்

வாத்தியாரைக்

காணும்போதெல்லாம்.

ஒரு பரிட்சை எழுதினேன்...

ஒவ்வொரு முறையும்
பரிட்சை என்பது
பரிட்சையம் இல்லாதது!

யாரோ எழுதியதை நான் படித்து
... அதையே ஏன் எழுதவேண்டும்?

எவனோ கண்டறிந்ததை , படத்துடன்
நான் விவரிக்க வேண்டுமா?

வெற்றுத்தாளில்
கற்பனை தாண்டவமாடியது!

காத்தாடி விடும் வயதிலும்… சரி
காதலிக்கும் வயதிலும் .. சரி –
மனப்பாடம் மட்டுமே மதிப்பெண்கள்

எனது விடைத்தாளை விட - வினாத்தாள்
அதிக மதிப்பெண் பெற்றுவிடும் போல..!

திருத்தவே முடியாது,
என்னையும், எனது விடைத்தாளையும்

இரண்டிலுமே….
திருத்த ஏதும் இல்லை!!!

அதனால்

திருத்துங்கள் முதலில்
வினாத்தாளை!

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தமிழுக்காக என்று அரசியல் செய்யும் திருடர்களில்...
நட்பின் உள்ளங்களுக்கு இனிய வணக்கம்….!

திராவிட மொழிகளில் முதன்மையானதாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் 
துளு போன்ற மொழிகள் கருதப்படுகின்றன.
இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது.  திராவிட என்ற சொல் தமிழ என்ற சொல்லில் இருந்துதான் வந்திருக்க முடியும் என்பதை இனவியல் கட்டுரை (இயல்06) சுட்டிக்காட்டியுள்ளது.
திராவிடர் என்றால் தென்னாட்டு பிராமணர் என்று பொருள் என காஷ்மீர வரலாற்று நூலான இராஜதரங்கினி சொல்வதாக போராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். 
மு. வரதராசனார் கூறுவதை இனிபார்ப்போம். இந்திய நாடு முழுவதும் பழங்காலத்தில் ஒரே மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட மொழி ((Proto Dravidian) என்று கூறுவர். பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் தோன்றின. அந்த நிலையிலும் சிற்சில பகுதிகளில் பழைய திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழி பலவகை மாறுதல்கள் பெற்றது.
அந்த நிலையிலும் சிற்சில பகுதிகளில் பழைய திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்தன. அந்த மொழிகளைப் பேசிய மக்கள் மற்றவர்களோடு கலக்காமல் தனித்து வாழ்ந்த காரணத்தால் அவை திராவிட மொழிகளாகவே ஆங்காங்கே நின்று விட்டன. கோமி, பார்ஜி, நாய்கி, மால்டா, ஓரொவன், கட்பா, குருக், பிராகூய் முதலான மொழிகள் இன்றும் திராவிட மொழி இனத்தைச் சார்ந்த வைகளாக இருப்பதற்குக் காரணம் அதுவே 
இப்படி என்னதான் திராவிடம் பற்றி இருந்தாலும் தமிழின் பெயரால் திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கு அடுத்ததாக தமிழுக்காக என்று அரசியல் செய்யும் பா.ம.க கட்சியின் நிறுவனர் செய்தியாளரிடம்
திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம் என பா.. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திருடர்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்து, மரங்களை வெட்டினாலும் பசுமைத்தமிழகமாக மாற்றுவோம் என்று வெட்கமில்லாமல் கூறிவரும் இவர்களுக்கு கெட்ட வார்த்தையுடன் சகவாசம் ஏன்?
தி.மு.க வில் இருந்து அதே குடும்ப அரசியலினை கையாளும் இவரும் அவர்களுடன் சேர்ந்தவர் தானே… என்ன அங்க குடும்பம் பெருசு இங்க சிறுசு… ! வெக்கம் கெட்ட அரசியல்வாதியாகத்தானே எல்லோரும் இருக்கீங்க. மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சேனு பீபீபீ…த்திக்கிறாங்க வெளக்கெண்ணைங்க. ஆட்டோ க்கு தானி நு கண்டுபிடிச்ச உங்க தமிழ் நுட்பம் தெரியாதா எங்களுக்கு? (ஆட்டோமேட்டிக் அப்படினா தானியங்கி – ஆட்டோ வ தானினு சொல்றாங்க தமிழோசையில்) இப்ப திராவிடம் என்பதை கெட்ட வார்த்தைங்கிறீங்க, அட எதுவா இருந்தாலும் நீங்க கருதுங்க... காரி துப்புங்க , மக்களிடம் தப்பா கொண்டுபோகாதீங்க நண்பரே…!

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

             அரசியலுக்கும் திரைப்படத்துறைக்கும் இணைபிரியா உறவு உண்டு.    அதனால் தான் முதல் அமைச்சராக அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் வந்தார்கள், வென்றார்கள் , மக்கள் பணத்தை தின்றார்கள்… தின்றுகொண்டே இருக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் நம் ரசிக சிகாமணிக்கள் திரைப்படத்தைப்பார்த்து ரசிப்பதைவிட , அந்த நடிக்கருக்காக தீக்குளிப்பதையும் , நடிகைக்காக கோவில் கட்டுவதையும் அதிக கவனத்துடன் செலுத்தினார்கள். தனக்கு ஒரு தலைவன் வேண்டும் என்றும் தன் கோபத்தை ஒருவர் திரையில் தணிக்கிறார், தவறு செய்தவனை ஓங்கி அரைய வேண்டும் என்று நினைத்த போது தன் தலைவன் அவனைத்தூக்கி பந்தாடுகின்றானென்றும் நினைத்து பெருமிதப்படுகிறான்.
        இதனைப்போன்ற நிகழ்வுகளே ரசிகனை பித்தனாக்கி ரசிகர் மன்றம் வைத்து, போஸ்டர் அடித்து , முதல்காட்சிக்காக பணம் செலவழித்து, திரையில் தோன்றியதும் மலர் தூவி ஆரவாரம் செய்துகொண்டும் இருக்க காரணமாகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் உடல் நலம் பெறவேண்டும் என்ற ரசிகர்களின் வெளிப்பாடாக இருந்த யாகம், அன்னதானம் , வேண்டுதல் போன்றவையும் பார்த்துகொண்டு இருக்கிறோம். சிலர் ரசிகர்மன்றம் என்பதனை மாற்றி நற்பணிமன்றம் என்ற பெயரில் பெயரளவில் மாற்றம் கொண்டு செயலளவில் துற்நாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

தனது பிள்ளைகளுக்கு புத்தகம் வழங்கவில்லை, ஆனால் தேர்வு நடக்கிறதே எப்படி என்று சிந்திக்க நேரம் இருக்குமா ரசிகர்களுக்கு?

முதல்நாள் பேனர் வைத்தும், அதிக விலைகொடுத்தும் படம் பார்க்கும் ரசிகர்கள் தங்களது சொந்த சகோதர சகோதரிகளுக்கு
குறைந்த விலையிலாவது ஏதாவது செய்திருப்பார்களா?

பாலாபிஷேகம், திரையில் வந்ததும் மலர்தூவுவது , படப்பெட்டியை மேளதாளத்துடன் கொண்டுவரும் ரசிகர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் முதியோர்களையும் ஆதரவற்ற பிள்ளைகளையும் நினைத்துப்பார்த்திருப்பார்களா?

இளைஞர்களின் சக்தியானது அணு போன்றது, இந்த சக்தியைக் கொண்டு ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் நம் சமுதாயத்தை.

சமீபத்தில் அஜீத் தனது ரசிகர்மன்றத்தை கலைத்தார். காரணம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் தற்போது ஒரு காரணம் சொன்னார்….

ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!

இவரின் இந்த பதிலை மற்ற தலைவர்கள் விஜய், ரஜினி, கமல், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லை ஏற்காமல் ரசிகர்களைக் கொல்வார்களா?
- சித்ரவேல்