வியாழன், 24 நவம்பர், 2011

துப்புகெட்ட தினமலர்…



நடுநிலை என்ற பெயரில் அரசியல்வாதிகளின் ஊடகத்தைவிட கேடுகட்டத்தனமான ஒரு கட்டுரையை தினமலர் வெளியிட்டுள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்தை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தலாம் மக்களின் நம்பகத்தோடு என்பதனை தினமலரைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கூடங்குளம் அணு உலைக்கு என்ன தீர்வு எடுக்கலாம் , அந்த பிரச்சனை யாரை பாதிக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், மேலாதிக்கத்திற்காகவும் தனக்கு விருப்பு இல்லாத பட்சத்தில் வெறுப்பாக தனது சுய கருத்தை நடுநிலை என்ற பெயரில் மக்களுக்கு திணிக்கவும் செய்யும் தினமலருக்கு சிறப்புக் கட்டுரை எழுதிய நண்பரையும் மரியாதைக்குரிய ஆசிரியரையும் இடிந்தகரையில் குடிபெயர தைரியம் இருக்கிறதா?

போராட்டம் நடத்தும் 3பேரின்  எண்களை கொடுத்ததோடு அவர்களை இழிவு படுத்திய தங்களால், அணு உலைக்கு ஆதரவு கொடுக்கும் நண்பர்களின் உண்மை நிலவரத்தை சொல்ல தைரியம் இல்லாதது ஏன்? அப்துல்கலாம் அவர்களின் எண் கொடுக்கலாமே தெளிவு படுத்த…. ?

அரசியல் அராஜகத்தை தட்டிக்கேட்க்க தைரியம் இல்லாத பா…. ஊடகம் தானே தினமலர் செய்தி ஊடகம்.

தினமலரைச்சார்ந்த யாருக்காவது தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள் நண்பர்களே….உங்கள் ஜால்ரா நியாம் என்று !


அமெரிக்கபோரினால், ஆட்டோமிக் ஊரானியும் பதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் குழைந்தைகளை பாருங்கள். www.rense.com/​general70/deathmde.htm இந்த நிலைமை வருங்கால சந்ததிக்கு தேவையா என்று சிந்தித்து எழுதுங்கள் 

ஞாயிறு, 20 நவம்பர், 2011

இப்போதுதான் வெடித்ததா கூடங்குளம் போராட்டம்?





சரியான தொலை நோக்கு பார்வை வேண்டும் என்பதை நாம் மறந்த காலம் இது… இன்றைக்கு தொலைத்துவிட்ட பிறகே எதையும் நோக்குகின்றோம். மக்களின் வாழ்வாதாரத்தை தொலைக்கும் முன்பே காக்க வேண்டிய பொறுப்பில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
மக்களுக்கான போராட்டம் என்றாலே முதலில் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட் தோழர்கள் மவுனம் சாதிப்பதை கேள்வி கேட்ட ஒரு கட்டுரையை படித்தேன்…

நீங்களும் நண்பர் முத்துக்குமாரின் கட்டுரையை படியுங்கள்..

வெள்ளி, 18 நவம்பர், 2011

வருக… வருக…!







உருவ பொம்மையை எரிக்கும் 
உதவாக்கரை தலைவர்
அவர்களே… வருக வருக!


ஒரு லட்சம் கையெழுத்தை 
தானே போட்ட 
தானே தருதலைவன் அவர்களே 
வருக வருக!


நவ.20ல் போராட்டம் என்று 
போலி வார்த்தையால் 
வாய்ஜாலம் போடும் குள்ள நரியே
வருக.. வருக..!


எங்கள் மண்ணை வீர நிலமாக்குவோம்
வீணான நிலமாக்கி வீழமாட்டோம்!


அட்ரஸ் இல்லாத  கட்சியின் தலைவரே..!


கத்தி போராடும் என் மண்ணின் மைந்தர்களை 
கத்தி சண்டை போட வைக்காதே…!


இது அறப்போர் மட்டும் அல்ல…
உன் போன்ற அயலவனுக்காக ஆடுபவர்களை 
அறுத்தெரியும் போர்…!


பல்லாயிரம் குடும்பத்தின் உலையை அணைத்து,
நவ.20ல் அணு உலையை திறக்க திறமை இருக்கிறதா…
மா(ங்கா) வீரரே.. வாரும் வாரும்… 

வியாழன், 17 நவம்பர், 2011

சொல்லுங்கய்யா… சொல்லுங்க….


விடிஞ்சதும் வியாபரத்துக்கு
மீன் வாங்கனுமே… இருக்குற காசுல!

உவரிப் பக்கம் போகனும்
இல்லனா
முட்டம் பக்கம் போகனும்,

கூடையில மீனுகள அள்ளிப்போட்டு
திசையன்விளை சந்தையில்
வித்துப்புடனும்…

எப்பாடுபட்டாச்சும் கொஞ்சம் காச சேத்துடனும்..
மூனுவேளைச் சோத்த ஒருவேளையாக்கியாவது…

நவலடி பக்கம் போற மினிபஸ் ,
எனக்கு வேணாம்யா….
என்னோட சேத்து மீனுக்கும் டிக்கெட் கிழிப்பானுக!

கால்நடையா வீடு போயி சேந்திடுவேன்,
இளப்பாத்தும் நேத்துமீந்த சோத்துத் தண்ணி,

உழைப்பால உயர்ந்த தமிழனுகனு சொல்ல
மீன் வித்த காசுலயும் ,
நடந்து மிச்சம் புடிச்ச காசயும்

பட்டினியால வாடி இருக்கும் என்மக்க
போராடும் போராட்டத்துக்கு குடுப்போம்யா!

வெளிநாட்டுக்காரனுக்கு லட்டு திங்க ஆசையாம்
எங்க ஊர்காரனுக்கு ஒரு சக்கரையா
கரண்ட் ட காட்டி ஏமாத்றாய்ங்க

இத தட்டிக்கேட்டா நம்ம அதிகாரிகளே
எங்கள வெளிநாட்டுக்கூலிங்கராயிங்க…

பத்துபேரு வாழ நான் சாகறேன் ஆனா
பாழாப்போன வெளிநாட்டு முதலாளிகளும்
பாழாக்குற நம்ம நாட்டு அரசியல்வாதிகளும் வாழ
எங்க ஊரெல்லாம் சாகனுமா?
சொல்லுங்கய்யா…
சொல்லுங்க….

செவ்வாய், 8 நவம்பர், 2011

திட்டம்…




மூங்கில் காடுகளையே

அழிக்கத் திட்டமிட்டேன்

மூன்றாம் வகுப்பில்,

மூங்கில் பிரம்போடு நுழையும்

வாத்தியாரைக்

காணும்போதெல்லாம்.

ஒரு பரிட்சை எழுதினேன்...

ஒவ்வொரு முறையும்
பரிட்சை என்பது
பரிட்சையம் இல்லாதது!

யாரோ எழுதியதை நான் படித்து
... அதையே ஏன் எழுதவேண்டும்?

எவனோ கண்டறிந்ததை , படத்துடன்
நான் விவரிக்க வேண்டுமா?

வெற்றுத்தாளில்
கற்பனை தாண்டவமாடியது!

காத்தாடி விடும் வயதிலும்… சரி
காதலிக்கும் வயதிலும் .. சரி –
மனப்பாடம் மட்டுமே மதிப்பெண்கள்

எனது விடைத்தாளை விட - வினாத்தாள்
அதிக மதிப்பெண் பெற்றுவிடும் போல..!

திருத்தவே முடியாது,
என்னையும், எனது விடைத்தாளையும்

இரண்டிலுமே….
திருத்த ஏதும் இல்லை!!!

அதனால்

திருத்துங்கள் முதலில்
வினாத்தாளை!