ஞாயிறு, 28 ஜூலை, 2013

திரைக்கதையின் பிதாமகன்

பாலா இயக்கிய பிதாமகன் உங்களுக்கு தெரியும், விக்ரம் – சூர்யா இணைந்து நடித்த படம்னு. ஆனால் திரைக்கதையின் பிதாமகன் யார் தெரியுமா? தெரிஞ்சா நாங்களாம் ஏண்டா உன் வலைப்பக்கம் வரப்போறோம்னு கேக்குறது கேக்குது...

திரைக்கதையின் பிதாமகன் "சிட் ஃபீல்டு"  என்பவர்தான். 
இவர் போட்ட ரோட்டுலதான் உலக அளவில் பல படங்களின் திரைக்கதை இருக்குதுங்க. கல்லூரியில் படிக்கும் போது  களப்பயிற்சியில், திரைக்கதையின் பிரம்மாவா இந்தியாவில் இருக்கும் இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் மூலமாதான் இவரை தெரிஞ்சுக்கிட்டேன். அப்படி என்ன ரோடு போட்டார்னா, ஒரு திரைப்பட்த்தில் "மூன்று அங்க அமைப்பு" (Three Act Structure)  என்ற முறையில் திரைக்கதை பாணியை வகுத்து ரோடு போட்டாருங்க.
முதல் அமைப்பு: கதையின் ஆரம்பம்
இரண்டாம் அமைப்பு: கதையின் திருப்பம்.எகா(அருணாச்சலத்தில் ரஜினி வீட்டைவிட்டு             .                                                        வெளியேறுதல்)
மூன்றாம் அமைப்பு: கதையின் முடிவு 

ஏய் என்னப்பா இவ்ளோதானா , இதுக்கா அவரா பிதாமகன் ரேஞ்சுக்கு சொல்றனு அவசரப்படாதீஙக,
இந்த மூன்று அங்க அமைப்பின் இடையில் இரண்டு "சம்பவங்கள்" (plot points) இருக்க வேண்டும். முதல் அங்கத்திலிருந்து, இரண்டாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'முதல் சம்பவம்' உதவுகிறது. அதே போல இரண்டாம் அங்கத்திலிருந்து, மூன்றாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'இரண்டாம் சம்பவம்' உதவுகிறது.


நீங்க ஏதாவதுஒரு  பட்த்தை எடுத்து இந்த மூன்றங்க அமைப்போடு ஒப்பிட்டு பாருங்க அதான் சிறந்த பயிற்சியா இருக்கும்.

     நன்றி

சனி, 20 ஜூலை, 2013

கதை - தயார் செய்வது எப்படி?

கதை: புனைவின் உரைநடை அப்படினு சொல்லலாம். அதாவது கற்பனையா நாம நினைக்கிறது எழுதறதுனு அர்த்தம். இந்த கதையானது ஒரு சின்ன மையக்கருவை அல்லது நிகழ்வை வைத்துதான் பெரும்பாலும் எழுதப்படுகிறது, எழுதிட்டு இருக்காங்க, நீங்களும் இனி எழுதுவீங்க…!
பொதுவா ஒரு கதை தயார் பண்ணனும்னா, முதல்ல நாம நம்மள சுத்தி நடக்குறத சரியா கவனிக்கனும் அப்பதான் கதைக்கான களம், பாத்திரப்படைப்புனு எல்லாத்தயும் முழுசா கொண்டுவர உதவியா இருக்கும்.

கதை  சொல்றதுங்றது நமக்கெல்லாம் புதுசா , சொல்லுங்க. எத்தனை இடத்துல கதைய சொல்லிருப்போம். 

பஸ்ல நல்லா தூங்கிட்டு வந்திருப்போம், அப்படியே கண் முழிச்சி பார்த்தால்  அங்க ஒரே கூட்டம், அத என்னனு எட்டிப்பாத்தா ஒரு மாடு குறுக்க வந்து ஒரு கார் விபத்துக்குள்ளாயிருக்கும். அத நம்ம நண்பர்ட சொல்றப்ப அப்படியேவா சொல்வோம்..?

”நான் பஸ்ல வந்துட்டே இருந்தேன், அப்ப ஒரு மாடு வேகமா ரோட்டத் தாண்டி ஓடி வந்துச்சு அந்த நேரம் பாத்து ஒரு கார் வேகமா வந்து ப்ரேக் போட, அந்த பிரேக்கயும் மீறி மாடு மேல கார் மோத,,, சே…” இப்படி சொல்வோம்ல, இந்த உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுதான் நம் எழுத்திலயும் வரணும்.

ஒவ்வொருவரும் கதை சொல்பவர்கள் தான். ஒரு அனுபவத்தை, ஒரு சம்பவத்தை அல்லது ஒரு செய்தியை விவரிக்க ஆரம்பிக்கும் பொழுதே இது அவர்களிடம் வெளிப்படுகிறது. டெலிவிஷன், ரேடியோ அல்லது குடும்ப நபர்கள் பேசுவதைக் கேட்கும் பொழுது, கதை சொல்லும் இவர்களும் பார்வையாளர்களாகிறார்கள். உலகத்திலுள்ள அத்தனை தகவல் பரிமாற்றங்களும் கதைசொல்வதைச் சுற்றியே உருவாகிச் சுழல்கிறது. கதைகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. அறிவுப்புப் பலகைகளிலிருந்து, பஸ் நிற்குமிடங்கள், ரயில் நிலையங்கள், சினிமா அரங்குகள், வீடுகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நடைபாதைகள், வீதிகள், விளம்பரங்கள், குடும்பங்கள், வேலைசெய்யும் இடங்கள், ஏன், விண்வெளியிலும் கூட கதைகளின் ஆக்கிரமிப்புத்தான். குடும்ப உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நமது அனுபவங்களையும், கடந்த கால நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் பொழுது, அந்த உரையாடல்கள் அத்தனையும் பல கதைகளாகும்

சரி ஒரு நல்ல கதைய எழுதுங்க, அத எப்படி திரைக்கதையாக்குறதுனு பாக்கலாம் அப்பறம்…!
நன்றி
 

வெள்ளி, 19 ஜூலை, 2013

குறும்படம் – கால அளவு

குறும்படம் - கால அளவு
மச்சி நான் ஒரு குறும்படம் எடுக்கலாம்னு இருக்கேன் , அதாவது...னு ஆரம்பிச்சி அவன் கதைய சொல்லி முடிக்கும் போது 2மணி நேரம் முடிஞ்சிருக்கும்.

குறும்படம்னா ஒரு நிமிட்த்தில் இருந்து அதிகபட்சமாக 30 நிமிடம் வரை இருக்கலாம்னு வரையறுத்துருக்காங்க. அதுக்காக 30 நிமிஷம் வரை முட்டிக்கிட்டு எடுக்கனும்னு அவசியம் இல்லங்க. 
முயன்றால் முடியாத்தேது 

பொதுவா குறும்படங்கள் 5நிமிடம் முதல் 10 நிமிடம் வரை சுவாரஸ்யமா எடுக்கலாம்.


ஒரு நிமிட்த்தில் கூட குறும்படங்கள் எடுத்திருக்காங்க கீழ இருக்குற குறும்படம் ஒரே ஒரு நிமிட்த்தில் எடுக்கப்பட்ட்துதான். 


குறும்படம் எடுக்க முக்கிய தேவை என்ன்ங்க... கண்டிப்பா காசுதான்.. ஆனாலும் முக்கியமானது ஒரு சின்ன கதை... அந்த கதைய எப்படி உருவாக்கலாம்... அடுத்த பதிவில் 

நன்றி


வியாழன், 18 ஜூலை, 2013

குறும்படம்- அப்படீனா?

போனவாரம் ஞாயிற்றுக்கிழமை, என் நண்பன் ராஜா என்னைப் பாக்க வந்தான்.  அது ரொம்ப சந்தோஷமான விஷயம்தான். அவன் மனைவிக்கு வளைக்காப்புனு பத்திரிக்கை வைக்க வந்துட்டு , மத்தவங்களோட தொடர்பு எண் எல்லாம் சரிபாத்துட்டு , கொஞ்சம் கதை பேசிட்டு கிளம்பிட்டான். அவன் கிளம்பினதும் பாக்குறேன், அவன் தலைக்கவசம் (ஹெல்மெட்) எங்க வீட்டுல விட்டுட்டு போயிட்டான். அவன் விட்டுட்டு போனத நான் மறுநாள் காலைலதான் பாக்குறேன். அப்ப அவனுக்க்கு போன் பண்ணி சொல்லலாம்னு போன் பண்றேன் அவங்க அப்பா போன எடுத்து பேசுறார். நேத்து ஒரு விபத்துல ராஜாக்கு தலைல அடிபட்ருச்சுனு… எனக்கு மனசே கஷ்டமாயிடுச்சு”
இந்த மாதிரி பல சம்பவங்கள் நடந்திருக்கும் எல்லோர் வாழ்க்கையிலும் அது சோகமா தான் இருக்கனும்னு இல்ல, ஒரு அழுத்தமான பதிவா இருந்தாலே போதும் , அத காட்சிப்படுத்துதலின் மூலமா பதிவு பண்றதுதான் குறும்படம்.
பொதுவா குறும்படம் அப்படினாலே குறும்பாடமா பாக்குறவங்க மனசில் இருக்கும். அதுக்கு முக்கிய காரணமே குறைந்த நேரத்தில் மிக அழுத்தமா பதிய வைக்கிறதுதான் காரணம்.
குறும்படம்- யாரும் எப்பவும் எடுக்கலாம். குறும்படத்தைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிக அளவில் வந்திருக்கிறது. அதுக்கு ஒருவகையில் தனியார் தொலைக்காட்சிகள் இதனை வைத்து பணம் செய்ததும் ஒன்னு. அதே நேரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியும் முக்கிய பங்களிக்குது. பதிவில் குறும்படத்திற்கான எனது அனுபவத்தையும் , கற்றலையும் உங்களிடம் பகிர ஒரு சிறு ஆரம்பம்தான் இந்த பதிவு
அடுத்ததா ஒரு கேள்வி தானா மனசில் எழும் , ஒரு குறும்படம்னா அது எவ்ளோ மணி நேரம் எடுக்கலாம்னு…. அத பத்தி அடுத்த பதிவில் விரிவா சொல்றேன் !

நன்றி