சனி, 29 ஜனவரி, 2011

உலகின் முதல் பேசும் படம் "ஜாஸ் சிங்கர்



உலகின் முதல் பேசும் படம் "ஜாஸ் சிங்கர்"

 
இருபதாம் நூற்றாண்டில் மனிதன் கண்டுபிடித்த உன்னத சாதனங்களில் முக்கியமான ஒன்று, சினிமா. இன்று, உலகில் சினிமாக் காட்சிகள் நடைபெறாத நாடுகள் இல்லை; சினிமா பார்க்காத நபர்கள் அபூர்வம். இந்தியாவில், சினிமாதான் இரண்டாவது பெரிய தொழில்.  
 
தமிழ்த் திரைப்பட வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு முன், சினிமா எப்போது கண்டு பிடிக்கப்பட்டது, முதல் சினிமா படம் எது என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்.
 
பொருள்கள் அசைவதைப் படமாக்கும் முயற்சியில் 1826_ம் ஆண்டு முதலே பல்வேறு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1872_ல் குதிரைகளின் கால்கள் அசைவதைச் சிலர் வெற்றிகரமாகப் படம் பிடித்தனர்.
 
அதற்காக 24 காமிராக்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு, 1889_ல் தாமஸ் ஆல்வா எடிசன் "35 எம் எம்" பிலிமில் சினிமாப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார். எடிசன் 1894 வரை பல ஆராய்ச்சிகள் செய்து, அசையும் சினிமாப்படத்தைக் காட்டும் கருவியைத் தயாரித்தார்.
 
1895_ல் லூமிரே சகோதரர்கள், ஒரு ரெயில் ஓடுவதையும், அது ரெயில் நிலையத்தில் போய் நிற்பதையும் படமாக்கி, ரசிகர்களிடம் கட்டணம் வசூலித்து திரையிட்டுக் காட்டினார்கள். அக்காட்சியைப் பார்த்த சில ரசிகர்கள், பயந்து ஓட்டம் பிடித்தார்கள்.
 
இதன்பின், சினிமாப்படத்துடன் ஒலியையும் பதிவு செய்யும் முறையை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்தார்.   ஜெர்மனி விஞ்ஞானிகள் சிலரும் சினிமாப்படம் தயாரிப்பதில் சில முன்னேற்றங்களைக் கண்டுபிடித்தனர். ஊமைப் படங்கள் இதைத்தொடர்ந்து மவுனப் படங்கள் தயாரிக்கப்பட்டன.
 
பேச்சு இல்லாவிட்டாலும், பின்னணி இசை உண்டு. இந்தக் காலக் கட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் சார்லி சாப்ளின். பேசாமல் சைகைகள் மூலமாகவே நகைச்சுவையை வெளிப்படுத்தி, அகில உலகப் புகழ் பெற்றார். 1926_ல் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், முதல் பேசும் படத்தைத் தயாரித்தது.
 
இது சிறிய படம். பெயர் "டான்டுவான்". பரீட்சார்த்தமாகத் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும் படம் வெற்றி பெற்றதால், அடுத்த ஆண்டே "தி ஜாஸ் சிங்கர்" என்ற படத்தை வார்னர் பிரதர்சார் தயாரித்தனர். முதல் முழு நீளப் பேசும் படமான "தி ஜாஸ் சிங்கர்", 1927 அக்டோபர் 6_ந்தேதி திரையிடப்பட்டது.
 
திரையில் நட்சத்திரங்கள் ஆடுவதையும், பாடுவதையும், பேசுவதையும் கண்டு ரசிகர்கள் பிரமித்துப் போனார்கள். முதல் பேசும் படத்தை உலகுக்கு அளித்த ஹாலிவுட், தொடர்ந்து உலகின் புகழ் பெற்ற திரைப்படக் கேந்திரமாக விஸ்வரூபம் எடுத்தது.  
 
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது ஹாலிவுட். 1883_ல் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 7 மைல் தூரத்தில், சுமார் 120 ஏக்கர் நிலத்தை ஒருவர் வாங்கி, வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கத் திட்டமிட்டார்.
 
பத்திரப் பதிவின்போது, அந்தப் பகுதியின் பெயர் "ஹாலிவுட்" என்று குறிப்பிடப்பட்டது. 1907_ம் ஆண்டில், இந்தப் பகுதியில் ஸ்டூடியோக்களை அமைக்க, நியுயார்க் பிலிம் டிரஸ்ட் ஊக்கமளித்தது. அதன்பின், கொலம்பியா, பாரமவுண்ட் ஆகிய நிறுவனங்கள் அங்கே பிரமாண்டமான ஸ்டூடியோக்களை அமைத்தன.
 
பிறகு, மேலும் பல ஸ்டூடியோக்கள் உருவாயின.   1930_ம் ஆண்டிலிருந்து, ஹாலிவுட்டில் சினிமாப்படத் தயாரிப்பு சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆண்டுக்கு சராசரியாக 750 படங்கள் தயாரிக்கப்பட்டன. எம்.ஜி.எம்., ட்வண்டியத் சென்சுரி பாக்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற ஸ்டூடியோக்கள், மிகவும் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டன.
 
ஹாலிவுட் விரிவடைந்து கொண்டே போயிற்று. எம்.ஜி.எம். ஸ்டூடியோ மட்டும் 117 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 23 அரங்கங்களைக் கொண்ட இந்த ஸ்டூடியோவில் கிரீடா கார்போ, கிளார்க் கேபிள், ஸ்பென்சர் டிரேசி, எலிசபெத் டெய்லர் முதலிய புகழ் பெற்ற நட்சத்திரங்களை உருவாக்கியது "எம்.ஜி.எம்."  

செவ்வாய், 25 ஜனவரி, 2011

தமிழ் திரைப்பட வரலாறு எஸ். தியடோர் பாஸ்கரன்


இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில நிமிடங்களே ஓடக்கூடிய துண்டு, சலனப்படங்களே அன்று திரையிடப்பட்டன. இது நடந்த இடம் போட்டோப்பன் கட்டிடத்திற்கு அடுத்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில்தான். சினிமாஸ்கோப் என்று விளம்பரப்பட்டிருந்த அந்த காட்சி, ஒரு மாபெரும் கலாச்சார தாக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பல சலனப்படக் காட்சிகள் சென்னை போட்டோன் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இக்காட்சிகளுக்கு நாளடைவில் ஆதரவு கூடியது. இதைத் தொடர்ந்து 1900இத்தில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, அன்றைய மௌன்ட் ரோடில் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர். மின் விளக்கு மூலம் ஒளியெறியப்படும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அந்தப் பெயர்.
1905இல் திருச்சி இரயில்வேயில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப் பார்த்து வந்த சுவாமிக்கண்ணு வின்சென்ட், எடிசன் சினிமாட்டோகிராப் எனும் திரைப்படம் காட்டும் நிறுவனத்தை துவக்கினார். தென்னிந்தியாவின் முதல் போட்டோங் டாக்கீஸ் இதுவே. பல ஊர்களுக்குச் சென்று இயேசுவின் வாழ்க்கை போன்ற குறும்படங்களைத் திரையிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸை கட்டி, வள்ளி திருமணம் போன்ற படங்களைத் தயாரிக்கவும் செய்தார். 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் கட்டப்பட்ட கெயிட்டியே, இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு (இது இன்றளவும் செயல்பட்டு வருகிறது). இதையடுத்து சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன.
கதைப் படங்கள் வெளிவர ஆரம்பித்த பின், திரைப்படக் காட்சிகளுக்கு வரவேற்பு கூடியது. ஆனால் இங்கு திரையிடப்பட்ட படங்கள் பெரும்பாலும் மேலை நாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான ஹரிஷ் சந்திரா போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இப்படங்கள் பெற்ற வரவேற்பைக் கண்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில், இந்தியா பிலிம் கம்பெனி என்பதை நிறுவி, 1916இல் கீசக வதம் என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.
1916 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கிய மௌனப்படத் தயாரிப்பைத் தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் ஏ.நாராயணன். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியை நிறுவி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, தென்னிந்தியாவின் திரைப்படத் தொழிலுக்குப் பலமான அஸ்திவாரமிட்டவர் இவர்தான். சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட மௌனப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விவரண அட்டைகளுடன் தென்னிந்தியாவின் பல நகரங்களிலும் திரையிடப்பட்டன. ஆனால் நாகர்கோயிலில் தயாரான மார்த்தாண்டவர்மன் என்ற ஒரு படத்தைத் தவிர, மற்ற எதுவும் மிஞ்சவில்லை.
திரைப்படக் காட்சிகள் நிலைக்கொள்ள ஆரம்பித்ததைக் கண்ட பிரிட்டிஷ் அரசு இந்த வெகுஜனத் தொடர்பு சாதனத்தைத் தன் கட்டுபாட்டுக்குள் வைக்க தீர்மானித்தது. தொடர்ந்து இந்திய சினிமாட்டோகிராப் சட்டத்தின் மூலம் தணிக்கை துறையை 1918 ஆம் ஆண்டில் செயல்படுத்தியது. 1927 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் முன்னோடியான தி மெட்ராஸ் பிலிம் லீக் நிறுவப்பட்டது. 1939 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி.
1931 ஆம் வருடம் முதல் தமிழ் பேசும் படம் திரையிடப்பட்டதுடன் ஒரு புதிய சகாப்தம் துவங்கியது. தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி மும்பாயிலிலுள்ள சாகர் மூவிடோன் என்னும் கம்பெனியால் 1931இல் மேற்கொள்ளப்பட்டது. குறத்திப் பாட்டும் டான்ஸ§ம் என்ற நான்கு ரீல் கொண்ட குறும்படமே முதன்முதலில் வெளி வந்த தமிழ் பேசும் படம். அதே வருடம் எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீள தமிழ்ப் படமான காளிதாஸ் வெளிவந்தது. காளிதாஸ் படத்தைத் தொடர்ந்துப் பல தமிழ் படங்கள் வெளிவந்து திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவை கூட்டின. தமிழ் பேசும் படத்தின் வரவால் தமிழ் படங்களுக்கு ஒரு தனித் தளம் கிடைத்தது. மேற்கத்திய சலனப்படங்களுடன் ஒரே தளத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் ஆனது. படத்தயாரிப்பு சீராக பெருகியது. 1931இல் ஆரம்பித்த தமிழ்படத் தயாரிப்பு வேகமாக வளர்ந்தது. 1935 ஆம் ஆண்டில் மட்டும் 34 தமிழ்படங்கள் தயாரிக்கப்பட்டன. திரைப்படம் புதிய ஒரு வெகுஜன கேளிக்கை சாதனமாக மக்களிடையே நிலைப்பெற்றது.
முதல் நான்கு ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்கள் மும்பையிலும், கல்கத்தாவிலுமே தயாரிக்கப்பட்டன. அக்காலத்தில் சென்னையில் ஒலிப்பதிவு தொழில் நுட்ப வசதிகள் ஏதும் கிடையாது. 1934 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் முதல் டாக்கி ஸ்டுடியோ நிறுவப்பட்டது. 1934இல் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம் சீனிவாசக் கல்யாணம் ஏ.நாராயணனால் இயக்கப்பட்டது. அதன் பின் பல ஸ்டுடியோக்கள் சென்னையில் நிறுவப்பட்டன. திரைப்படத் துறையில் அவ்வப்போது தோன்றிய தொழில்நுட்ப முன்னேற்றம், திரைப்படங்களின் சாத்தியக்கூறுகளை விரிவாக்கியது. ஒரே காட்சியில் இருவர் தோன்றும் துருவா (1935) படத்தில் நவீனத் தொழில்நுட்பம் முதல் முதலாக கையாளப்பட்டது. அந்தப்படத்தில் சிவபாக்கியம், ஒரு ராணியாகவும், அவரின் கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றினார்.
முதல் ஐந்து ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்ப்படங்கள் யாவும் புராணக்கதைகளே. அதிலும், கம்பெனி நாடகங்கள் மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே. இக்காலக்கட்டத்தில்தான் முதல் சமகாலக் கதையன்று தயாரிக்கப்பட்டது. 1935ல் சோஷியல் என்று அழைக்கப்பட்ட, சமகாலக் கதைகளை கொண்ட மூன்று படங்கள் வெளிவந்தன. முதலில் கௌசல்யா என்ற திகில் படம். இதையடுத்து, வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான மேனகா, டம்பாச்சாரி ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் பிறகு, சில சமகாலத்து கதைப் படங்கள் தயாரிக்கப்பட்டாலும் பெருவாரியான திரைப்படங்கள் புராணக் கதை கொண்டவையாகவே இருந்தன. நாடகப் பாணியிலேயே திரைப்படங்கள் அமைக்கப்பட்டன. சமகாலக் கதைகளைப் படமாக்கிய போதும்கூட இதே பாணி கடைப்பிடிக்கப்பட்டது.
முப்பதுகளில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைபடங்கள் பெரும்பாலும் கம்பெனி நாடகங்களின் நகல்களாகவே அமைந்தன. நாடகத்தை அப்படியே படமாக்குவதுதான் வழக்கம். ஆகவே திரைப்படத்தின் பண்புகள் வளராமல் நாடகத்தன்மையே மேலோங்கியிருந்தது. திரைப்படம் எனும் புதிய கட்புல ஊடகத்தின் சாத்தியக்கூறுகளை ஆரம்பகால பட இயக்குநர்கள் கண்டு கொள்ளவேயில்லை. பாட்டும், இசையும் திரைப்படத்தின் முக்கிய அம்சங்களாக விளங்கின. (தமிழ் திரைப்படத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து இன்று வரை அந்த பாணி மாறாமலிருக்கிறது). புராணக்கதைகளும் ராஜா ராணிக் கதைகளுமே மிகுதியாகப் படமாக்கப்பட்டன. 1937 இல் வெளியான சிந்தாமணி ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்ற புதிய சாதனை படைத்தது. 1939 ஆம் ஆண்டு வாக்ஷினி, ஜெமினி ஸ்டுடியோக்கள் சென்னையில் அமைக்கப்பட்டன.;; தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர்.
பிரிட்டிஷ் அரசு காலத்தில், தணிக்கை வாரியம் போலீஸ் கமிஷனரின் கீழ் செயல்பட்டது. 1918இல் ஆரம்பித்த தணிக்கை, சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டிய ஒத்துழையாமை இயக்க ஆண்டுகளில் கடுமையானது. சில படங்கள் தயாரிப்பு நிலையிலேயே கைவிடப்பட்டது. தேசியக் கருத்துக்களையோ, காந்தீய சமூக சீர்திருத்தங்களையோ ஆதரிக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன. ஆகவே, சச்சரவிற்கு உள்ளாக முடியாத புராணக் கதைகளையும், மாயாஜாலக் கதைகளையுமே தயாரிப்பாளர்கள் விரும்பினர்.
சென்னை ராஜதானியில், 1937 முதல் 1939 வரை காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அப்போது தணிக்கை முறை விலக்கி வைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் தியாக பூமி, மாத்ருபூமி போன்ற நாட்டுபற்றைப் போற்றும் தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. இப்படங்களில் தேசியக் கருத்துகளும் அரசியல் பிரச்சாரமும் போட்டோடையாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கை நடைமுறையில் இல்லாததால் அந்தப் படங்களுக்கு வெளியே வந்தபோது பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போட்டோல், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அரசுகள் விலகியபோது பிரிட்டிஷ் அரசு தியாகபூமி போன்ற படங்களுக்கு தடை விதித்தது. போர்காலத்தில் கச்சாபிலிம் தட்டுபாடு காரணமாகத் திரைப்படங்கள் எடுப்பது வெகுவாகக் குறைந்தது. தென்னகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திப்படம் பிரேம்சாகர் கே.சுப்ரமணியன் இயக்கி, 1939இல் வெளிவந்தது.
திரைப்படத்தை அதன் ஆரம்ப வருடங்களில் பத்திரிக்கைகள் கண்டு கொள்ளவே இல்லை. (1927 இல் மூவி மிரர் என்ற ஆங்கில மாத இதழை எஸ்.கே.வாசகம் சென்னையில் துவக்கினார். இதுவே தென்னிந்தியாவில் திரைப்படத்திற்கான முதல் பிரத்தியேகமான பத்திரிக்கை. (பின்னர் இதன் பெயர் அம்யூஸ்மென்ட் வீக்லி என்று மாற்றப்பட்டு வார இதழாக வெளிவந்தது) முதல் தமிழ் படம் வந்த நான்கு ஆண்டுகள் கழித்து 1935இல் தான் முதல் தமிழ் திரைப்படப் பத்திரிக்கை சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவர ஆரம்பித்தது. பின்னர் சில்வர் ஸ்கிரீன் என்ற வார இதழும், ஆடல்-பாடல் இதழும் தோன்றின. பல சினிமா இதழ்களுக்கிடையே குண்டூசி, பேசும் படம் போன்ற இதழ்கள் சிறப்புற்று விளங்கின.
அன்றைய திரைப்படங்களில் பாட்டே முக்கிய அம்சமாக விளங்கியது. இரவல் குரல் கொடுக்கும் தொழில் நுட்ப வசதி அறிமுகமாகாத அந்தக் காலத்தில், பாடும் திறமை பெற்றவர்களே நடிகர்களாக சோபிக்க முடிந்தது. பி,யு,சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என அன்று கோலாச்சிய நடிகர்கள் யாவரும் வாய்ப்பாட்டில் வல்லவர்கள், கர்நாடக சங்கீத விற்பன்னர்கள். திரைப்படத்தையும், திரை இசையையும் இகழ்ந்து பேசினாலும் திரையுலகில் வருமானமும் புகழும் அதிகம் என்பதை உணர்ந்த பல செவ்வியல் இசை வல்லுநர்களும்- எம்.எம்.தண்டபாணி தேசிகர், ஜி.என்.பால சுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோரும் தமிழ்த் திரையுலகில் பிரகாசித்தனர். இரவல் குரல் கொடுக்கும் தொழில்நுட்பம் வந்தபின், பின்னனி பாடகர்கள் வர, இசை வல்லுனர்கள் நடிகர்களாக ஜொலித்த காலம் முடிவுற்றது. இப்போது பல கர்நாடக இசை வல்லுநர்கள் வெற்றிகரமான பின்னனி பாடகர்களாக இயங்குவது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. ஏ.ஏ.சோமயாஜுலுவும் , இளங்கோவன் ஆகியோர் சில படங்களுக்கு வசனம் எழுதி, தமிழ்த் திரைப்படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர். 1940இல் வந்த மணிமேகலைக்கு சோமையாஜுலுவும், 1943இல் வந்த சிவகவிக்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படங்களில் இலக்கியத் தமிழ்க் கொண்ட சொல்லாடல் முக்கிய இடம் பெற்று, வசனகர்த்தாக்கள் நட்சத்திர அந்தஸ்த்துப் பெற்றனர். திரைப்படத்தில் வார்த்தை ஜாலங்களின் ஆதிக்கத்தை இது மேலும் வலுப்படுத்தியது. மாறாக பிம்பங்கள் மூலம் கதையை நகர்த்தும் திறமை வளரவில்லை. இன்றளவும் பாத்திரப் பேச்சு தமிழ் திரைப்படங்களில் ஓங்கியிருப்பது திரைப்படத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றது. தமிழின் தொன்மை, இனிமை, தமிழ்ப் பண்பாட்டின் உயர்வு ஆகியன, உரையாடல் மற்றும் பாடல்களாக தமிழ் திரைப்படங்களில் முக்கிய இடம் பெற்றன. 1953இல் வெளிவந்த ஒளவையார் படத்தில் இந்த போக்கு முழு வீச்சுடன் இருப்பதைக் காணலாம்.
இந்திய திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற விவரணைப் படம் (டாக்குமென்டரி) ஏ.கே.செட்டியார் தயாரித்து 1940இல் வெளிவந்த மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பியா மற்;றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான அடிகள் கொண்ட இந்தப் படத்தைத் தயாரித்தார். ஆனால் இந்த அரிய தயாரிப்பு தற்போது எங்கே இருக்கிறது என்ற கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் விவரணைப் படம் எடுப்பது, மௌனப்படக் காலத்திலேயே தோன்றிவிட்டிருந்தாலும், அந்த போட்டோயம் வளரவேயில்லை. விவரணைப் படங்களுக்கென்றே உருவான 16 மில்லி மீட்டர் காமிராவும், புரஜக்டரும் தமிழ்நாட்டில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்திய அரசின் திரைப்படப் பிரிவு பல சீறிய விவரணைப் படங்களை தயாரித்தது. இவை மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழக திரையரங்குகளில் காட்டப்பட்;டன. ஆனால் திரையரங்கு போட்டோமையாளர்களின் பொறுப்;பின்மையாலும், விளம்பரப் படங்களின் ஆக்கிரமிப்பாலும், டாக்குமென்டரிகளைக் கதைப் படங்களுடன் திரையரங்குகளில் திரையிடும் வழக்கம் தற்போது மறைந்து விட்டது. இந்த நிலையில், அண்மையில் விவரணைப் படங்கள் திரையரங்குகளில் கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. விவரணைப் பட இயக்கம் தமிழ்நாட்டில் குன்றிபோனதற்கு ஒரு முக்கிய காரணம் மக்களிடையே திரைப்பட ரசனை வளராமல் போனதும், டாக்குமென்டரி என்ற திரைப்பட வகைக்கான ஆர்வலர்கள் உருவாகாததும்தான். திரைப்படம் என்றவுடன் கேளிக்கைத் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எண்ணும் நோக்குதான் இந்த வளர்ச்சியை தடுத்து விட்டது. ஆயினும் ஒரு கண் ஒரு பார்வை (1998) விவரணைப் படமெடுத்த ஞான.ராஜசேகரன், அதிசயம் அற்புதம் (1997) எடுத்த சிவக்குமார் போன்றோரை விவரணைப்பட இயக்குநர்களாக குறிப்பிட வேண்டும். 1990இல் சலம் பென்னுர்கர் எடுத்த குட்டி ஜப்பானின் குழந்தைகள் விருதுகள் பெற்ற ஒரு விவரணைப்படம்.
உலகப்போர் ஓய்ந்து இந்தியா சுதந்திரம் பெற்றபின், திரைப்படத்துறை மீண்டும் தொழில் ரீதியாக வளர ஆரம்பித்தது, திரைப்படத் தயாரிப்பு அதிகரித்தது. படங்களுக்கு வரவேற்பும் கூடியது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டவுடன், போட்டோங் திரையரங்குகள் பெருகி, திரைப்படம் கிராமவாசிகளையும் எட்டியது. இந்த ஆண்டுகளில் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கிய சில படங்கள் வெளிவந்த அதே சமயத்தில் பாதாள பைரவி (1951), கணவனே கண் கண்ட தெய்வம் (1955) போன்ற மாயாஜாலப் படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தின. எஸ்.எஸ்.வாசன் இயக்கிய சந்திரலேகா (1948) பொழுது போக்கு படங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, வியாபார ரீதியில் பெரும் வெற்றியைக் கண்டது. மாயாஜாலம், பக்தி, தமிழ்ப்பற்று இவை மூன்றும் கலந்த படைப்பாக வந்த முக்கிய படைப்புகளில் ஒன்று ஒளவையார். நாடக ஆசிரியர்களாகப் புகழ்ப் பெற்ற சில திராவிட இயக்கத் தலைவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபாடுக் கொண்டனர். 1949 இல் நல்லதம்பி படத்திற்கு கதைவசனம் எழுதி சி.என்.அண்ணாதுரை திரையுலகில் பிரவேசித்தார். வேலைக்காரி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. அவரைத் தொடர்ந்து மு.கருணாநிதி மந்திரி குமாரி (1950) படத்திற்கு வசனம் எழுதினார். சினிமா வரலாற்றாசிரியர்களால், திராவிட இயக்கத் திரைப்படங்கள் என்றழைக்கப்படும் திரைப்படங்கள் பலவும் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன.
மு.கருணாநிதி வசனம் எழுதி வெளியான பராசக்தி (1952)யின் வெற்றிக்குப் பாத்திரப் பேச்சு முக்கிய காரணமானது. இந்த படத்தின் அடுக்குமொழி வசனம், ஒலிநாடாவில் இன்றளவும் விற்பனையாகிறது. சிவாஜி கணேசனின் முதல் படம் என்றும், இந்த படத்திற்குத் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. கருணாநிதி திரும்பி பார் (1953), மனோகரா (1954) உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதிப் புகழ் ஈட்டினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முரசொலிமாறன், ஏ.வி.பி.ஆசைதம்பி, கண்ணதாசன் போன்றோரும் திரைப்பட உலகில் வசனகர்த்தாக்களாக பிரவேசனம் செய்தனர். இந்தக் காலகட்டத்தில் வசனமே திரைப்படங்களில் மேலோங்கியிருந்தது. காட்சி பிம்பங்களுக்கு முக்கியத்துவம் குறைந்தது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் திரையுலகில் பிரவேசித்தது தமிழ்த் திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. திரைப்பட வசனங்கள் மூலம் அரசியல் பிரச்சாரம் செய்யும் பாணி ஆரம்பம் ஆனது.
1951இல் தென்னகத்தில் முதல் முதலாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற கே.பி.சுந்தராம்பாள், தமிழ்நாட்டு மேல்சபையில் உறுப்பினராக்கப்பட்டு, சட்ட சபையில் நுழைந்த முதல் திரைப்படக் கலைஞர் என்ற சிறப்பையும் பெற்றார். 1952இல் இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழா நடைப்பெற்றது. சென்னை உட்பட மும்பை, கல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் பன்னாட்டுத் திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்திய திரைப்பட வரலாற்றில் இது ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.
1918இல் அமுல்படுத்தப்பட்ட இந்தியன் சினிமாட்டோகிராப் சட்டம் 1952ல் மறுவடிவில் தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை. இதே வருடம், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கில திரைப்படமான காடு (கூ£ந தரபேடந) சேலம் மாடர்ன் தியேட்டர்சாரின் கூட்டுடன் தயாரானது. 1955ல் திரைபடத்திற்கான தேசிய விருதுகள் அளிக்கும் மரபு உருவானது. அந்த வருடம் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கதையான மலைக் கள்ளன் (எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்தது) தேசிய விருது பெற்றது. 1956ல் தென்னிந்தியாவின் முதல் பிலிம் சொசைட்டியான தி மெட்ராஸ் பிலிம் சொசைட்டி, திருமதி அம்மு சுவாமிநாதனால் அமைக்கப்பட்டது.
1959ஆம் ஆண்டு, திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு, தமிழ் நடிகர் சங்கம் இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது. எனினும் தொழிற்சங்க இயக்கம் திரையுலகில் வேரூன்ற பல ஆண்டுகள் ஆயின. (ஏற்கனவே 1940ல் சினி டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன்ஸ் என்ற அமைப்பை இயக்குனர் கே.ராம்நாத் நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது).
ஐம்பதுகளின் துவக்கத்தில், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனியிடம் பெற்ற எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன் போட்டோன் நட்சத்திர ஆதிக்கம் துவங்கியது. அதன் ஆரம்ப அறிகுறிகளை அப்போது வந்த மதுரை வீரன், ரங்கோன் ராதா (1956) போன்ற படங்களில் காணலாம். இவ்விரு நடிகர்களும் தமிழ்த் திரைப்பட உலகில் ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலம் புகழின் உச்சியில் இருந்தனர். அவர்கள் நடிக்கும் படங்களின் இயக்குநரின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறைந்தது. ஆண் நட்சத்திரங்களை சுற்றியே கதைகள் அமைக்கப்பட்டன. ஐம்பதுகளில் திரைப்பட உலகில் தாக்கம் ஏற்படுத்திய மற்றொருவர் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம். 1954இல் தொடங்கி 1959 வரை பதிபக்தி, பாசவலை போன்ற பல படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றன. இன்றளவும் அந்த பாடல்கள் விரும்பிக் கேட்கப்படுகின்றன. இவரது மறைவுக்குப் பின் கண்ணதாசன் பாடலாசிரியர் வரிசையில் முதலிடம் பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் நிகரற்று விளங்கினார்.
1956ல் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமான மாடர்ன் தியேட்டர்சாரின் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய எம்.ஜி.ஆர். பானுமதி நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் வெளிவந்தது. ஆயினும் கருப்பு வெள்ளைப் படங்கள் அரிதாக, முற்றிலும் வண்ணப்படங்கள் மட்டுமே வர ஏறக்குறைய இருபதாண்டுகளாயின. வண்ணத்திற்கு மாற்றம், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சியை வெகுவாக பாதித்தது. வண்ணப்படங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிகர்கள் பல உடைகளை மாற்றுவதும், பல இடங்களில் ஒரு பாடலை படமாக்குவதும் வழக்கமாயிற்று. இத்துடன் இசையின் தாக்கமும் சேர்ந்தமை, திரைப்படப்பாடல் காட்சிகளுக்கு ஒரு புதிய வடிவை ஏற்படுத்தியது. பின்னர், இசை விழாவின் வரவு இந்த பாடல் காட்சிகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1960ல் சென்னை அடையாறில் திரைப்படக் கல்லூரி நிறுவப்பட்டது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இந்தக் கல்லூரியில் பயின்றவர்களின் தாக்கத்தை காண முடிந்தது. அறுபதுகளின் ஆரம்ப வருடங்களில் சில புதிய இயக்குநர்கள் தோன்றி தமிழ் திரைப்படத்திற்கு வலுவூட்டினார்கள். இதில் நினைவுக் கூறத்தக்கவர் ஸ்ரீதர். 1959ல் வெளியான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் புகழ் பெற்ற இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), காதலிக்க நேரமில்லை (1964) போன்ற வெற்றிப் படங்களையும் தந்தார். முக்கோணக் காதல் கதை இவர் படங்களின் அடிப்படை. இதே காலக்கட்டத்தில் தான் பீம்சிங்கும் படங்களை இயக்கினார். பாவ மன்னிப்பு (1961), பார்த்தால் பசி தீரும் (1962) ஆகிய இவரது படைப்புகள் இன்றும் மங்காத புகழுடன் விளங்குகின்றன.. கம்பெனி நாடக போட்டோயத்தில் வளர்ந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கற்பகம் (1963) படத்தின் மூலம் இயக்குநரானார். உணர்ச்சி மிக்க குடும்பக்கதைகள் பல எடுத்து சில ஆண்டுகள் புகழோச்சினார், மேடை நாடக ஆசிரியராக திகழ்ந்த கே.பாலசந்தர், நீர்க்குமிழி (1965) படத்தின் மூலம் இயக்குனராக போட்டோணமித்தார். பல புதிய நடிகர்களை- கமலஹாசன், ரஜினிகாந்த் உட்பட- இவர் அறிமுகப்படுத்தினார். இயக்குநரை குறிப்பிட்டு ஒரு படத்தை அடையாளம் காட்டும் சாத்தியம் பாலசந்தர் காலத்தில்தான் துவங்கியது. ஜெயகாந்தனின் குறுநாவலான உன்னைப்போல் ஒருவன் அவராலேயே இயக்கப்பட்டு, 1964ல் படமாக வெளிவந்து, தேச அளவில் விருதைப் பெற்றது. இது யதார்த்த திரைப்படத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. நீர்க்குமிழி மூலம் திரையுலகில் பிரவேசித்த கே.பாலசந்தர், பல படங்களைத் தயாரித்து புகழீட்டினார். தொழில் சாரா நாடக மேடையிலிருந்து வந்த இவரது படைப்புகளின் முக்கிய அம்சங்கள் புதிய முகங்கள், நகர்ப்புற, மத்தியதர மக்களின் பிரச்சனைகள், கண்ணதாசன் பாடல்கள், மக்களிடம் முன்னமே வெற்றி பெற்றிருந்த நாடகங்கள் போன்றவையே, இதே சமயம் பாவமன்னிப்பு (1961) போன்ற அகில இந்திய விருது பெற்ற படங்களை பீம்சிங் அளித்தார். இவரது படங்கள் வெற்றிப்பெற சிவாஜிகணேசன் போன்ற நட்சத்திரக் கூட்டமைப்பு, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை, குடும்ப உறவுகளைச் சார்ந்த கதைகள் போன்றனவே, ஏ.பி.நாகராஜன் சரஸ்வதி சபதம் (1966) போன்ற சில புராணப்படங்களை தயாரித்து கடவுளர்களையும், தேவர்களையும் வண்ணத்தில் காட்டினார். புராணப் படங்களுக்கு தமிழ் திரைப்படத்தில் சிறிது காலம் மறுவாழ்வு கிடைத்தது. 1963ல் மாநில அளவில் திரைப்பட விருதுகள் அமைக்கப்பட்டன. காவல்காரன் இவ்விருதைப் பெற்ற முதல் படம்.
அறுபதுகளின் மற்றொரு முக்கிய சிறப்பு, நட்சத்திரங்கள் அரசியலில் போட்டோடையாக ஈடுபட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது எஸ்.சத்தியமூர்த்தியின் உந்துதலினால் கே.பி.சுந்தராம்பாள், வி.நாகையா உட்பட பல திரைப்படக் கலைஞர்கள் போட்டோடையாக அரசியலில் ஈடுபட்டனர். இந்த ஈடுபாடு பிற்காலத்திலும் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் திரைப்படமும், அரசியலும் பிண்ணி பினைந்திருக்கும் சமீபகால வரலாறு, உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திராவிட இயக்கங்களுடன் இணைந்திருந்த என்.எஸ்கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமியிலிருந்து பின்னர் எம்.ஜி.ராமசந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் நேரடி அரசியலில் இறங்கினர். 1967ல் தேனி பகுதியிலிருந்து எஸ்.எஸ்.ஆரும், பரங்கி மலை தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆரும் தேர்தலில் வெற்றிப் பெற்று சட்டசபையில் நுழைந்தனர். எம்.ஜி.ஆரின் படங்களில் போட்டோடையாகவும், குறியீடுகள் மூலமாகவும் கட்சிப் பிரச்சாரம் வெளிப்படுத்தப் பட்டது. வண்ணப்படங்களில் அரசியல் கட்சிகளின் கொடியின் நிறங்கள்; குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டன. இத்துடன் ரசிகர் மன்றத்தின் ஆதரவும் சேர்ந்து, நட்சத்திர அரசியல்வாதிகளின் கைகளைப் பலப்படுத்தியது.
1972இல் தி.மு.கவிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனிக் கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் ஆதரவுடனும், நட்சத்திர ஆளுமையின் துணையுடனும் அவரது அரசியல் வாழ்வு உயர்ந்தது. 1977 இல் எம்.ஜி.ராமசந்திரன் தமிழக முதல்வரான பின், திரைப்படத்துறைக்குப் பயனளிக்கும் திட்டங்கள் சிலவற்றை அமுலாக்கினார். மூப்படைந்த திரைப்படக் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ரூ.75ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தினார். சிறந்த படங்களுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் இவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.
தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் (1973), வர்த்தக ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் பெறவில்லை. எழுபதுகளில் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சிலரின் தாக்கம் தமிழ்த் திரைப்படத்தில் வெளிப்பட ஆரம்பித்தது. 1972 இல் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்ற சிலர் சேர்ந்து தயாரித்த தாகம், யதார்த்த திரைப்பட பாணியில் அமைந்திருந்தது. பல புதிய, இளைஞர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் பிரவேசித்து அதன் எல்லைகளை விரிவாக்கினர். இந்த ஆண்டுகளில் தான் தமிழ்த் திரைப்படத்தில் மூன்று ராஜாக்களின் வரவு பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜா, பாக்கியராஜ், இளையராஜா ஆகியோரே இம்மூவர். பாரதிராஜாவின் முதல் படம் பதினாறு வயதினிலே 1977.ல் வெளிவந்தது. புதிய நடிகர்கள், இளையராஜாவின் இசை, கிராமியப் பின்னணி, யதார்த்தத்தில் அழுத்தம் இவைகளே பாரதிராஜா படைப்புகளின்; முக்கிய அம்சங்கள். மோழத்தனமான (ளுவலடளைநன) நடிப்பை விட்டு இயல்பு நடிப்பை பின்பற்ற இவர் முயற்சி செய்தார். 1979இல் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் பாக்கியராஜ் இயக்குநரானார். நகைச்சுவை கலந்த கதையோட்டம், பாலியல் அழுத்தம் இவை பாக்கியராஜ் படங்களின் வெற்றிக்கு காரணமாயிருந்தது. இந்த ஆண்டுகளில் மற்றொரு முக்கிய நிகழ்வு இளையராஜாவின் வளர்ச்சி. 1976ல் அன்னக்கிளி படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த இளையராஜா, வெகு விரைவிலேயே நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தார். இவர் இதுவரை நான்கு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 600 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
ஜே.மகேந்திரன் இயக்குநராக முள்ளும் மலரும் (1978) படத்தில் அறிமுகமானதும் இவ்வேளையில்தான். அவரது அடுத்த படமான உதிரிப்பூக்கள் யதார்த்த பாணியில் அமைந்து தமிழின் முக்கியத் திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. 1975ல் அவளும் ஒரு பெண்தானே படத்தின் மூலம் துணை இயக்குநராக அறிமுகமானார். பசி (1979) இவருக்கு தமிழ் தி[ரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொடுத்தது, அப்படத்தில் நடித்த ஷோபா அகில இந்தியாவின் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். (விருது பெற்ற சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்துக் கொண்டார். நடிகைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது தமிழ்த் திரையிலகிற்கு புதிதல்ல. விஜயஸ்ரீ, படாபட் லட்சுமி, கல்பனா, லட்சுமிஸ்ரீ, சில்க் ஸ்மிதா என பட்டியல் நீள்கிறது).
புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை முறையாகப் பயின்ற பாலு மகேந்திராவின் முதல் படம் அழியாத கோலங்கள் (1979) வெளிவந்தது. இக்காலக்கட்டங்களில் பாரதிராஜா, மகேந்திரன், துரை, பாலு மகேந்திரா போட்டோன் வரவால் தமிழ்த் திரைப்படத்; துறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருந்தது. ஆனால் பெருவாரியான படங்கள் துரத்தல், பாட்டு, கோஷ்டி நடனம், வன்முறைக் காட்சிகள், பாலியல் கிளுகிளுப்பு என்ற பழைய பாதையிலேயே சென்றன. தமிழ்த் திரைப்படத்தின் போக்கை திசை திருப்ப இவர்களால் இயலவில்லை. ஒரு தலை ராகம் (1980) மூலம் திரைப்பட உலகிற்குள் அடியெடுத்து வைத்த டி.ராஜேந்தர், இன்றளவும் மக்களிடையே வரவேற்பு பெரும் படங்களை இயக்கி வருகிறார். கதை வசனம், ஒளிப்பதிவு, இசை ஆகிய சகல பணிகளையும் தானே செய்து டிநே அய« ஜீசடினரஉயவ¬டி« ர«வை என்ற பெயர் வாங்கினார். இவரது தனித்துவம் ஆடம்பர செட்டுகள், அடுக்கு மொழி வசனங்கள் இவையே.
எண்பதுகளின் ஆரம்ப வருடங்களில் தமிழ்ப் பட தயாரிப்பு முன் காணாத அளவு அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் 129 படங்கள் வெளியாயின. இந்தியாவில் வர்த்தகரீதியில் இந்தி திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருப்பது தமிழ் திரைப்படங்கள்தான். ஆனால் தயாரிப்பு உயர்ந்த அளவிற்கு தரம் உயரவில்லை. கோமல் சுவாமிநாதனின் நாடகம் தண்ணீர் தண்ணீர் 1981 இல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்தது. இதுபோன்றதுதான் இவரது அச்சமில்லை அச்சமில்லையும். அரசியல் அங்கதம் நிறைந்த படம். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ராஜபார்வையும் அதே ஆண்டுதான் வெளிவந்தது. நட்சத்திர ஆளுமையில் கமலஹாசன் புகழ் ஓங்கியதும் இந்த ஆண்டுகளில்தான்.
அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ருத்தரையாவின் அவள் அப்படிதான் (1980) இந்த ஆண்டுகளில் வந்த ஒரு முக்கியமான படைப்பு. பெண்ணிய சித்தாந்தத்தை, சீரிய திரைப்படப் பண்பு நிறைந்த ஒரு படத்தின் மூலம் தமிழர்களுக்கு தந்தார் இவர். எண்பதுகளில் மற்றுமொரு முக்கிய படைப்பாளியான மணிரத்தினம், பல்லவி, அனுபல்லவியுடன் திரையுலகில் பிரவேசித்தார். தமிழ்த்திரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய அவரது மௌன ராகம் (1986) சிறந்த தமிழ்படத்திற்கான விருதைப் பெற்றது. தேசிய அளவில் புகழ் ஈட்டியது 1987 இல் வந்த இவரின் நாயகன், ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் இவருக்கு அகில இந்திய அளவில் புகழீட்டி தந்தது. 1980 ஆம் ஆண்டில் மற்றொரு அம்சம் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா தனது காந்த நடிப்பால் தமிழத்;திரையுலகில் கோலோச்சியதும் இந்த ஆண்டுகளில்தான். 1987இல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவரது மனைவியும் நடிகையுமான வி.என். ஜானகி தமிழக முதல்வரானார். பின்னர் 1991இல் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஜெயலலிதா முதலமைச்சரானது நிகழ்கால வரலாறு.
1990 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக உருவெடுத்தது. மணிரத்தினத்தின் சகோதரரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஸ்வரன் ஜி.வி.பிலிம்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை துவங்கினார்.
1990 ஆம் ஆண்டு கே.எஸ் சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம் இந்தியாவின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்வாண்டில் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய புதிய இயக்குநர்கள் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தனர். விக்கிரமனின் புது வசந்தம், ரவிக்குமாரின் போட்டோயாத புதிர் போன்ற படங்கள் வெளிவந்தன. தொடர்ந்த வருடங்களில், கிராமப்புறக் கதைகளைக் கொண்ட சின்ன கவுண்டர் (1992) உள்ளிட்ட பல வெற்றி படங்கள் வர, பல தயாரிப்பாளர்கள் அதே மாதிரி கதைகளை நாடிப் போயினர். ஜாதிப் பெயரைக் கொண்ட படங்களும், நிலப் பிரபுத்துவத்தை போற்றும் வகையில் அமைந்த கதைகளும் (நாட்டாமை-1994) வர ஆரம்பித்தன. இந்த ஆண்டுகளில் வந்த ஜெயபாரதி இயக்கிய உச்சி வெய்யில் (1990) இந்த கலாச்சார சூழலிலும் சீரிய திரைப்படம் மலர முடியும் என்பதை நிரூபித்தது. இது கல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும், கனடா நாட்டில் டோரோன்டோ போட்டோல் நடந்த திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விமர்சன ரீதியில் புகழ்ப்பெற்றது. மணிரத்தினத்தின் செல்வாக்கு அகில இந்திய அளவில் பரவ ஆரம்பித்ததும் இந்த ஆண்டுகளில்தான். ரோஜா (1992) காஷ்மீர் தீவிரவாதிகள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதை. இதைத் தொடர்ந்து இந்து-முஸ்லீம் உறவு பற்றிய கதையைக் கொண்ட பம்பாய் (1995) பல தடைகளையும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டாலும், வெற்றிபடமாக அமைந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசை இதன் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ரகுமானின் புகழ் அகில இந்திய அளவில் வெளிப்பட துவங்கியது.
இந்த ஆண்டுகளின் முக்கிய அம்சம் ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்தும் அவரது படங்களின் வர்த்தக வெற்றியும்தான். அவரது நட்சத்திர அந்தஸ்த்து பாட்ஷா (1995) போன்ற படங்கள் மூலம் பன்மடங்கு உயர்ந்தது. அவரது ரசிகர் மன்றங்களுக்கு அரசியல் பலம் உண்டு என்று தலைவர்கள் பலர் நம்பினார்கள். 1996ம் ஆண்டு தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பல தேசிய விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்தன. சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருதும், அகத்தியனுக்கு சிறந்த இயக்குநர் விருதும், சிறந்த நடிகராக கமலஹாசனுக்கு வெள்ளித் தாமரை விருதும், எஸ்பி.பாலசுப்பிரமணியனுக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதும், சித்ராவிற்கு சிறந்த பின்னணி பாடகி விருதும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்திற்கான விருது காதல் கோட்டைக்கும், திரைப்படம் குறித்த சிறந்த நூல் எழுதியமைக்காக தியடோர் பாஸ்கரனுக்கு தங்கத் தாமரை விருது என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
ஆயினும், தமிழ் திரைப்படத்தின் உள்ளடக்கம், ஆரம்ப வருடங்களில் இருந்த அளவிலேயேதான் உள்ளது. சித்தாந்தம் மற்றும் தர ரீதியில் வளர்ச்சியில்லை. இயக்குநர்கள் அனைவரும் பாட்டு, குழு நடனம், துரத்தல் சண்டை, பாலியல் கிளுகிளுப்பு இவைகளையே ஒரு ஜனரஞ்சகமான கேளிக்கை சாதனமாக செயல்படுத்தினர். வியாபாரத்தனமே முக்கிய அம்சமாக நிலைத்தது. இந்த நூற்றாண்டின் இறுதியில் விரிந்து பரவிய தொலைக்காட்சி தமிழ் திரைப்படத்துறையின் மற்றொரு விரிவாக்கமாக உறைந்து விட்டது. படமாக்கப்பட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் போல தமிழ் திரைப்படங்கள் உருவெடுத்தன. இன்றும் அதே பாணியில் தொடருகின்றன. திரைப்படத்தின் பிற போட்டோணாமங்களான விவரணப்படங்கள், கார்டூன் படங்கள், செய்திப் படங்கள் போன்றவை உருவாகவில்லை.
ஐயாயிரம் படங்களுக்கு மேல் தயாரித்தும், அகில அளவில், திரைப்பட விழாக்களில் தமிழ் திரைப்படங்கள் கவனிக்கப்படுவதில்லை. விமர்சன ரீதியில் வெகு சில படங்களே விவாதிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் திரைப்பட ரசனை மக்களிடையே வளராததுதான். சங்கீதத்தைப்பற்றி விமர்சிக்கவோ, நடனத்தைப் பற்றி எழுதவோ அந்தக் கலை வடிவத்தின் குணாதிசயங்கள் பற்றி போட்டோச்சயம் தேவை என்பது நமக்குத் தெரிகிறது. இந்த மரியாதையை நாம் திரைப்படத்திற்கு தருவதில்லை.
தமிழ்த் திரைப்படம் பற்றிய ஆய்வில் இங்குள்ள பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. (சில தமிழ் துறைகளில் திரைப்படம் குறித்த ஆய்வு நடக்கிறது). திரைப்படத்தின் தனிப்பண்புகள் மற்றும் குணாதிசயங்கள் பற்றிய போட்டோச்சயம் மக்களிடையே ஏற்படவில்லை. எந்தக் கலைவடிவமும், கேளிக்கை சாதனமும் மக்கள் வாழ்விற்கு செறிவும், வளமும் ஊட்டுவதாக அமைய வேண்டும். தமிழ் திரைப்படம் அவ்வாறு உருவாவதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை.
- தகவல்கள்- மனோரமா இயர்புக் 2000
- நன்றி - ராமன் - துணையாசிரியர்

நான் சினிமா டைரக்டரானபோது....


திரு.ஜெயகாந்நான் சினிமா டைரக்டரானபோது....
தன்
''என்னுடைய ஸ்கிரிப்ட்டை எக்ஸிகியூட் செய்வதற்கான திறமை எனக்கு போதாது. அதற்கான பொறுமையும் கிடையாது என்பது டைரக்ஷன் செய்து நான் பெற்ற அனுபவம். சினிமாவில் நானும் காலடி வைத்தேன். னீஹ் யீவீக்ஷீst stமீஜீ! இதை தமிழில் மொழிப்பெயர்த்தால் முதல் அடி என்றும் மொழி பெயர்க்கலாம். அந்தத் துறையிலே அடி நானும் வாங்கினேன், கொடுத்தேன். அதைப் பற்றியெல்லாம் இப்போது நினைத்து பார்த்தால் சந்தோஷப்படவும் பகிர்ந்து கொள்ளவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சிறு வயதிலே கூட நான் சராசரியான சினிமா ரசிகனாக இருந்ததில்லை. படங்களைத் தேர்ந்தெடுத்துதான் பார்ப்பேன், ரசிப்பேன். கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைமை அலுவவலகம் அன்று தரமான ஆங்கிலப் படங்களைத் திரையிடும் ஒரு தியேட்டரின் அருகில் இருந்தது. நல்ல நல்ல படங்கள் வரும். அதைப் பார்க்க வரும் ரசிகர்களும் தரமானவர்களாக இருப்பார்கள். நிஷீஸீமீ ஷ்வீtலீ tலீமீ ஷ்வீஸீபீ படத்தை அங்குதான் பார்த்தேன். அதுபோல் எத்தனையோ நல்ல படங்களை பார்க்கும் வாய்ப்பு அங்கே எனக்குக் கிடைத்தது. அவை எல்லாம் மேனாட்டுப் படங்கள். பிரிட்டிஷ் படங்கள், அமெரிக்கப் படங்கள், எப்போதேனும் இத்தாலியப் படங்கள் வரும். அப்படி ஒரு அன்னிய சினிமா மோகம் ஒரு காலத்திலே எனக்கு ஏற்பட்டது. அதுபோல அவற்றுடன் தமிழ் சினிமாவை ஒப்பிட்டுப் பார்த்தபோது எனக்கு வெட்க உணர்ச்சியே மேலோங்கியது.
''நான் அறிந்த வரையில் அந்தக் கால ரசிகர்கள் எல்லாம் பெரிய மனிதர்களாக இருந்தார்கள். நடிகர்களும் அதுபோலவே பெரிய மனிதர்களாக இருந்தார்கள். என்னதான் நமக்கு அபிமானம் உள்ள ரசிகர்கள் இருந்தாலும் நம் அளவு என்ன என்று போட்டோந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். ரசிகன் நமக்குக் கைதட்டி விடுவதாலேயே அவன் நம்மைவிட குறைந்தவன் அல்ல என்று அறிந்து வைத்திருந்த பண்பு அக்கால சினிமா மனிதர்களிடம் இருந்தது.''
''நல்ல சினிமா என்பது நல்ல புத்தகம் போல என்பது என் கருத்து! நல்ல படங்களைப் பார்த்து தான் படம் சம்பந்தப்பட்ட என் அறிவை வளர்த்துக் கொண்டேன். எனது அறிவு புத்தகங்கள் படித்து வந்தது இல்லை. ஷேக்ஸ்பியரையும் சார்லஸ் டிக்கன்ஸையும், ஆஸ்கார் ஏயில்டையும், டென்னசி வில்லியம்ஸையும், ஆர்தர் மில்லனையும் நான் படங்கள் வழியேதான் பயின்றேன். ஏனென்றால் எனது இளமைக்காலம் படங்களின் யுகமாக இருந்தது. ஆனால் தமிழ் சினிமா அன்றும் இன்றும் அதே கீழ்நிலையிலேயே இருக்கிறது. நமது சரித்திரப் பெருமையையோ நமது மண்ணின் கலாச்சாரப் பெருமையையோ அவை எடுத்துச் சொல்ல முன்வந்ததில்லை. அதைப்பற்றி நமது தமிழ் சினிமா ஏதாவது பேசியிருக்குமேயானாலும் அவை வெற்றுப் பம்மாத்துக்களாகவே இருக்கின்றன.'' 
''தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு விமர்சகனாகத் தான் இருந்தேனே தவிர, அதன்மீது மோகம் கொண்டவனாகவோ அதனோடு சம்பந்தப்பட வேண்டும் என்ற உந்துதல் உணர்ச்சி உடையவனாகவோ நான் என்றும் இருந்ததில்லை. ஆனால் ஒரு வேலையில்லாத இளைஞன் எதற்கும் ஆசைப்படுவான் அல்லது அவனை எதற்கு வேண்டுமானாலும் அனுப்புவதற்கு யாரேனும் உந்தித் தள்ளிக் கொண்டே இருப்பார்கள். அப்படி என்னைத் தள்ளியபோது ஒரு பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது வயதில் நாடகம் சினிமா என்ற அரங்கங்களுக்குள் நான் திரிந்ததுண்டு. நாடகத்தில் வேஷம் போட்டதுண்டு, நடிக்கவில்லை, நடிக்க வரவில்லை. நடிப்பு ஒரு விசித்திரமான கலை என்று நான் கண்டு கொண்டேன். மற்ற கலைகளை போல அதற்கொன்றும் இலக்கணம் இல்லை. அவனவன் விதித்தது தான் இலக்கணம் இங்கே. மேனாடுகளில் எல்லாம் அதற்கும் இலக்கணம் வைத்திருக்கிறார்கள். இந்தப் பள்ளிக் கூடத்திலேயிருந்து இவர்கள் வந்தவர்கள் என்று கூட ஒரு படத்தைப் பார்த்து சொல்லி விட முடியும்''
''உதாரணமாக ஸ்டானிலாவ்ஸ்கி ஸ்கூலிலிருந்து வந்தவர்கள், ஷேக்ஸ்பியரின் ஸ்கூலிலிருந்து வந்தவர்கள், இந்த நாட்டின் இந்தப் பள்ளியிலிருந்து வந்தவர்கள் இவர்கள் என்று கூடச் சொல்லிவிட முடியும். நடிப்பதை ஒரு கலையாக்கி, அதற்கு இலக்கணம் வகுத்து பயிற்சி தந்து என்று பல துறைகளிலும் விஞ்ஞான பூர்வமாகச் சினிமா இப்படியெல்லாம் அங்கு வந்திருப்பது அங்கே நேர்ந்த வளர்ச்சியின் பயன்கள். அப்பொழுது முன்னணியிலிருந்த ஒரு டைரக்டர், நீங்கள் அற்புதமாகக் கதை எழுதுகிறீர்கள். அதுபோல அல்ல சினிமா. வெள்ளைக் காகிதத்தில் பேனா பிடித்து கறுப்பு ஆக்குவதுபோல அல்ல சினிமா! உங்கள் கதையையே நீங்கள் சினிமா எடுத்துப் பார்த்தால் தெரியும் அந்த அனுபவம் என்றார். அப்படியா செய்யலாமே! என்று யோசித்தேன். எனக்கு நண்பர்கள் உண்டு. எனது நண்பர்கள் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆறேழு நண்பர்கள் சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் வசூலிப்பது என்று தீர்மானித்தோம். என் நண்பர்களில் பண வசதி உள்ளவர்கள் அதிகம் கிடையாது. அப்படியரு பெரிய தொகை திரட்டுவது சிரமம்தான். படம் எடுக்க வேண்டும் என்கிற தாகம் எப்போது பார்த்தாலும் என்னிடம் பல்லை இளித்து கொண்டே இருந்தது- என்னுடைய நண்பர்கள் மூலம். அப்போது ஒரு பெரிய புரொடியூசர். என்னைப் பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார். நீங்க மட்டும் டைரக்ட் பண்றதுக்கு முடிவு பண்ணிங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்''.
''ஐயையோ, டைரக்ஷன் பத்தியெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாதே கதை வேணும்னா எழுதித் தரேன் என்று நான் சொன்னேன். அந்த நம்பிக்கை எனக்கு பிறிதொரு சமயம் வந்தது. ஒரு நாள் அந்தப் புரொடியூசருக்குப் போன் பண்ணினேன். உன்னைப் போல் ஒருவன் என்ற ஒரு கதை எழுதினேன். ஆனந்த விகடனிலே ஏற்கனவே ஒருவர் சினிமா எடுத்துப் பார் என்று எனக்கு சவால் விட்டதும், டைரக்ட் செய் என்று இந்த புரொடியூசர் நம்பிக்கை தந்ததும் சினிமாவை மனதில் கொண்டே அந்தக் கதையை எழுதி வைத்தேன். எல்லாக் கதையையும் நான் அப்படி எழுதுவதில்லை. அந்தக் கதையை அந்தப் பெரிய புரொடியூசரிடம் போய் சொன்னேன். ஆகா, அற்புதமான கதையாச்சே! செய்ய வேண்டியதுதான் என்றார். ஒரு வேலை என்றால் நான் ராட்சசன் மாதிரி செய்வேன். இரவு பகலாக உட்கார்ந்து ஸ்கிரிப்ட் எழுதினேன். அதைப் படித்துக் காட்டும்படி சொன்னார்கள். படித்துக் கொள்ள வேண்டியது தானே? படித்துக் காண்பிப்பதென்ன? சரி அப்படித்தான் பழக்கம் என்றால் என்ன செய்வது? வேறொருவரை படிக்கச் சொன்னேன். படித்தால் கேட்டால்தா«னு? இட்லி சாப்பிடுவதென்ன? காப்பி குடிப்பதென்ன? சிகரெட் பிடிப்பதென்ன? இந்த கூத்தில் ஸ்கிரிப்ட் படிப்பது வேறு! மிt வீs ணீஸீ வீஸீsuறீt! இது ஒரு அவமதிப்பே! அந்த பெரிய புரொடியூசர் சாப்பிட்டுக் கொண்டே கதை கேட்டதுமல்லாமல், படம் பூராவும் சமைப்தும் சாப்பிடுவதுமாக இருக்கிறதே என்று வேறு சொன்னார். அடடே, அப்படியா? இந்த வாழ்க்கையின் லட்சியமே அதுதான்!'' என்றேன்.
''இந்த கதையை நம்பி நான் பணம் போட்டா, அதை நான் திருப்பி எடுக்கணுமில்லை? என்று கேட்டார். ரொம்ப அர்த்தமுள்ள கேள்வி. ''சந்தோஷம் வருகிறேன்'' என்று பெரிய கும்பிடு போட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன். உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் தயாரிப்பதற்காக நண்பர்கள் துணையுடன் எண்பதினாயிரம் ரூபாய்தான் திரட்ட முடிந்தது. செலவு பண்ணினால் இடிக்கும் போலிருந்தது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் நான் யாருக்கும் கொடுக்கவில்லை. நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லோருக்கும் தலா ஆயிரம் ரூபாய்தான். அதுவும் இரண்டே மாதத்தில் கொடுத்தேன். யாருக்கும் பாக்கியெல்லாம் கிடையாது. சேரிக்கு சென்று படம் எடுப்பதற்கு பதிலாக நான் ஸ்டுடியோவிற்குள்ளேயே ஒரு சேரியை உருவாக்கினேன். பிறகு போட்டோந்தது அது அவசியம் இல்லையென்று. உண்மை மாதிரித்தான் இருக்க வேண்டுமே ஒழிய உண்மையே கலை அல்ல. முதல் ஷ§ட்டிங்கின் போது எல்லாம் ரெடி, உங்களுடைய ஆர்டருக்காகக் காத்திருக்கிறோம் என்றார்கள். எப்படி ஆர்டர் செய்வது என்ன ஆர்டர் செய்வது என்று எனக்குப் போட்டோயவில்லை. டைரக்டராக நடிக்க அரம்பித்தேன். என்னுடைய உதவியாளரைக் கூப்பிட்டு tணீளீமீ tலீமீ sலீஷீt என்று ஆர்டர் கொடுத்தேன். ''லைட்ஸ் ஆன்......... கிளாப்- இன்........ ஸ்டார்ட் கேமிரா....... ஆக்ஷன்.... கட்.......''. என்றார் முடிந்தது. டைரக்ஷன் என்பது இவ்வளவுதானா? இவ்வளவு மட்டும் இல்லை. இவ்வளவுதான் என்றால் சினிமா இப்படித்தான் இருக்கும்.''
-சோவியத் கல்சுரல் சென்டர் திரைப்பட கருத்தரங்கில் ஜெயகாந்தன் பேசியதிலிருந்து. 

பிரமிள் நூலகம்


பிரமிள் நூலகம்
தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்பட மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்காக விரைவில் தனது அலுவலகத்தில் நூலகம் ஒன்றை அமைக்கவிருக்கிறது. இந்த நூலகத்தின் மூலம் விரிவானதொரு வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு கிராமங்கள் தோறும் "வாசிப்பு அனுபவத்தை" ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஏதாவது கிராமத்தில் பிரமிள் நூலக வாசகர் வட்ட வாசிப்பு நிகழ்வுகள் நடத்தப்படும்.
தமிழகத்தில் பரவலான வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், தமிழ் எழுத்தாளர்கள் பற்றி கிராம மக்களும், மாணவர்களும் அறிந்துக் கொள்ள இந்த நிகழ்வுகள் உதவும். தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிளின் பெயரில் இயங்கவிருக்கும் இந்த நூலகத்திற்காக நீங்களும் உங்களிடம் உள்ள புத்தகங்களை கொடுத்து உதவலாம், அது ஒரே ஒரு புத்தகமாக இருந்தாலும் சரி. புத்தகங்கள் தர விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840698236..
வெளிநாடுகளில் வசிப்பவர்களும் புத்தகங்கள் கொடுத்து உதவலாம். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com
http://www.thamizhstudio.com/

புகை பிடிப்பதால் பல நன்மைகள்


புகை பிடிப்பது கேடு என்று நன்றாகத் தெரியும். ஆனால், அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.
 தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைக்காரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும். இதனால் பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது.
 சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.
 சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப்புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.
 சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக் கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
 எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின் வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.
 சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால், தனியாக கொசுவர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
 பிரச்சனைகள் வந்தால் டென்சனே தேவையில்லை. ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம்.
 லொக் லொக்கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை, கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.
 அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும். பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.
  தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.
  இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்க்க வேண்டியதில்லை.
 வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம். எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய்விடும்.
 புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையைப் பார்க்கும்போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக் கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.
 சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைல்களை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.
 வாழ்வின் பிற்பகுதியில் டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.
 நாட்டின் பொறுப்பற்ற மக்களின் ஆயுளைக் குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.
(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது

திங்கள், 24 ஜனவரி, 2011

திங்கள்(மாதம்)களின் சரியான தமிழ் பெயர்கள்


தமிழ் திங்கள்(மாதம்)களின் பெயர்களை சித்திரை, வைகாசி என்று தான் மனனம் செய்திருந்தோம் சிறுவயதிலிருந்தே, ஆனால் அவைகள் எல்லாம் சரியான தமிழ் பெயர்கள் அல்லவாம், மீண்டும் மனப்பாடம் செய்ய வேண்டும்... சரியான தமிழ் திங்கள்களின் பெயர்கள் கீழே


1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி)
3. மீனம் (பங்குனி)
4. மேழம் (சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி)
10. துலாம் (ஐப்பசி)
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

ராசி என்பதன் தமிழ் சொல் - ஓரை

இங்கே படியெடுத்து போட்டதன் காரணம் நானும் ஒரு முறை மனனம் செய்து கொள்ளத்தான் 
நன்றி திரு வெ யுவராசன்

புதன், 19 ஜனவரி, 2011

சாதனைப் பெண்கள்:இளம் விஞ்ஞானி மாஷா

சாதனைப் பெண்கள்:இளம் விஞ்ஞானி மாஷா!


அமைதியாகப் புன்னகைக்கிறார்... அடக்கமாகப் பேசுகிறார், மாஷா நஸீம். ஆனால் அவர் பேசப் பேச, நம்முன் ஒரு சாதனைச் சரித்திரம் விரிகிறது...
Masha Naseem an Young Scientist - Women Secrets of Success
கல்லூரி மாணவியான மாஷா ஓர் இளம் விஞ்ஞானி. பல பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்கி, ஜனாதிபதி முதல் முதலமைச்சர்கள் வரை அனைவரின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் முதலாமாண்டு பயிலும் மாஷாவை, மழை விளையாடிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் சந்தித்தோம்...
எனது சொந்த ஊர், கன்னியாகுமரி மாவட்டம் ரவிபுதூர் கடை. அப்பா என். காஜா நஜீமுதீன், மாவட்டக் கருவூலக் கண்காணிப்பாளராக உள்ளார். அம்மா சுமையா பேகம் இல்லத்தரசி. தங்கை இன்ஷா 5-ம் வகுப்புப் படிக்கிறார். சிறு பள்ளி மாணவியாக இருக்கும்போதே எனக்குள் அறிவியல் ஆர்வ விதை விழுந்துவிட்டது. நான்காம் வகுப்புப் படிக்கும்போது, வீட்டுக்குள் திருடர்கள் புகுந்தால் அலாரம் எழுப்பி உஷார்ப்படுத்தும் 'பர்க்ளர் அலாரத்தை' உருவாக்கினேன். ஆளில்லாத வேளையில் வீட்டுக்குள் யாராவது புகுந்தால் 'சென்ஸார்கள்' மூலம் அதை உணர்ந்து ஒலி எழுப்பும் கருவி அது. பள்ளி புராஜெக்டாக அதை உருவாக்கினேன். அதற்குக் கிடைத்த பாராட்டு, நான் மேலும் மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க உந்துதலாக அமைந்தது.
'பர்க்ளர் அலாரத்தை'த் தொடர்ந்து இதுவரை 8 கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறேன். அவற்றில், 'நெருப்பில்லா முத்திரை வைப்பான்' (பிளேம்லெஸ் சீல் மேக்கர்), 'எந்திர சுமைதூக்கி' (மெக்கானிக்கல் போர்ட்டர்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. முக்கிய கடிதங்கள், ஆவணத் தொகுப்புகளுக்கு 'அரக்கு முத்திரை' வைக்கப்படுகிறது. இந்தியாவில் தினந்தோறும் இப்படி 3 லட்சம் முத்திரைகள் வைக்கப்படுகின்றன. அதற்கு, அரக்கை நெருப்பில் உருக்க வேண்டியிருந்தது. அப்போது உருகும் அரக்கு, ஆடைகளில் பட்டு பாழாக்குவது, உடம்பில் பட்டு புண்ணாக்குவது என்ற நிலை இருக்கிறது. அரசு அதிகாரியாக உள்ள எங்கப்பா, அரக்கு சீல் வைக்கும்போது சுட்டுக்கொள்வதையும், ஆடையில் பட்டு பொத்தலாவதையும் பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன். அப்போதுதான், 'நெருப்பில்லா முத்திரை வைப்பானுக்கான' யோசனை எனக்குப் பிறந்தது. இந்தக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கு நான் முறைப்படி விண்ணப்பித்திருக்கிறேன். தமிழ்நாடு, குஜராத், கேரள அரசுகள் இதை நடைமுறைப் பயன்பாட்டில் கொண்டுவருவது குறித்து ஆர்வம் தெரிவித்திருக்கின்றன.
  
விமான நிலையங்கள், பஸ், ரெயில் நிலையங்கள் போன்றவற்றில் சுமைகளை ஏற்றி இறக்குவது ஒரு கடினமான வேலை. அதிலும் குறிப்பாக, பெண்கள், வயதானவர்களுக்கு. மேலை நாட்டிலும் இதற்கு ஒரு நல்ல வசதியான அமைப்பு இல்லாததை நான் நேரில் கண்டேன். சாதாரண 'லக்கேஜ் டிராலி'கள், பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல மட்டுமே பயன்படுகின்றன. பொருட்களை டிராலியில் ஏற்றிவைப்பது, அதிலிருந்து வாகனத்தில் ஏற்றுவது ஆகியவற்றுக்குக் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். இதுகுறித்து நான் தீவிரமாகச் சிந்தித்தபோது, 'எந்திர சுமைதூக்கி'க்கான யோசனை எனக்குத் தோன்றியது. அதைப் படிப்படியாக மேம்படுத்தி, ஒரு செம்மையான சுமைதூக்கியாக உருவாக்கினேன். இது, ஒரு 'போர்ட்டர்' செய்யும் வேலைகளான, தூக்குவது, சுமப்பது, இறக்குவது ஆகியவற்றைச் செய்யும். இந்த சுமைதூக்கியில் உள்ள பெடலைச் சுழற்றி, 10 வயதுச் சிறுமி கூட 50 கிலோ எடையைத் தூக்க முடியும். சாதாரண டிராலியை விட இதற்கு 700 முதல் ஆயிரம் ரூபாய் வரைதான் கூடுதல் செலவாகும். இந்த சுமைதூக்கி பொதுஇடங்களில் பயன்படுத்தக்கூடியது என்பதால், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மோட்டார் இல்லாமல் இதை உருவாக்கியிருக்கிறேன். சமையல் எரிவாயு சிலிண்டர், குடிதண்­ணீர் கேன் போன்றவற்றை தூக்குவது, வைப்பதற்கு இல்லத்தரசிகளும் இதை எளிதாகப் பயன்படுத்தலாம். அன்னியர்களை வீட்டுக்குள்ளே அனுமதிக்க வேண்டியதில்லை.
புதுடெல்லியில் நடைபெற்ற, 'உலக கழிப்பறைச் சுகாதார மாநாட்டில்' கலந்து கொண்டதையும், அங்கு விருது பெற்றதையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். அதில், நான் உருவாக்கிய 'அதிநவீன ரெயில் கழிப்பறை' அமைப்பை அறிமுகப்படுத்தினேன். தற்போது, ரெயில்கள் ரெயில் நிலையங்களில் நிற்கும்போது பயணிகள் கழிவறையைப் பயன்படுத்துவதால் அசுத்தம் ஏற்படுகிறது. நான் உருவாக்கியிருக்கும் அமைப்பின் மூலம், நிலையத்தில் நிற்கும்போது ரெயில்பெட்டி கழிவறைகளை என்ஜின் டிரைவர் ஒரு சுவிட்சை இயக்கி அடைத்து வைக்கலாம். அப்போதும் கழிப்பறையைப் பயன்படுத்தினால், கழிவுகள் சேகரமாகிக்கொள்ளும். நிலையத்தை விட்டு ரெயில் வெளியேறியதும் என்ஜின் டிரைவரால் கழிப்பறைகளைத் திறந்துவிட முடியும். எனது இந்தக் கண்டுபிடிப்பை சர்வதேச மாநாட்டில் விஞ்ஞானிகள் பெரிதும் பாராட்டினர். அந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த இளவயதுப் பெண் நான்.
மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ், 'நேஷனல் இன்னொவேஷன் பவுன்டேஷன்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் இந்த அமைப்பு நடத்திய தேசிய அளவிலான 'இக்னைட் 2009' போட்டியில் எனது 'நெருப்பில்லா முத்திரை வைப்பானுக்கு' 2-வது பரிசு கிடைத்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கையால் அப்பரிசைப் பெற்றேன். இந்த ஆண்டும் 'இக்னைட்' போட்டியில் எனது 'எந்திர சுமைதூக்கி' முதல் பரிசுக்குத் தேர்வாகியிருக்கிறது. இதுவரை நான் எனது கண்டுபிடிப்புகளுக்காக 1 சர்வதேச விருதையும், 5 தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறேன். தமிழக, கேரள, ஆந்திர, குஜராத் முதல்வர்களையும், ஆளுநர்களையும் சந்தித்துப் பாராட்டையும், பரிசுத்தொகைகளையும் பெற்றிருக்கிறேன். பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இருந்து பாராட்டுக் கடிதம் பெற்றிருக்கிறேன். பெங்களூர் இந்திய அறிவியல் கழகம், பெருமைக்குரிய தேசிய அறிவியல் உதவித் தொகையை எனக்கு அறிவித்துள்ளது.
மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, ஜப்பானுக்கு 10 நாட்கள் கலாச்சார சுற்றுப்பயணம் செய்துவந்தேன். அப்போது ஒரு ஜப்பானிய வீட்டில் தங்கியதும், அங்குள்ள பள்ளிகளுக்குச் சென்றதும் நல்லதொரு அனுபவம். ஐக்கிய அரபு எமிரேட்டின் ஷார்ஜா தமிழ்ச் சங்கம் என்னை அங்கு அழைத்து விருது வழங்கிக் கவுரவித்தது.
நான் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் கற்றிருக்கிறேன். நடனத்திலும், ஓவியத்திலும், ஓட்டப்பந்தயத்திலும் மாவட்ட, மண்டல அளவில் பல பரிசுகளை வென்றிருக்கிறேன். மாடல்களை உருவாக்குவது, வெப் டிசைனிங், 'கேட்' ஆகியவற்றிலும் திறமை உண்டு. பொழுதுபோக்காக இணையத்தில் உலாவுவேன்.
எனது முயற்சிகளுக்கு எல்லாம் தோள் கொடுத்து, தேவையான வசதிகளை செய்துகொடுக்கும் பெற்றோர், படித்த பள்ளி ஆசிரியர்கள், தற்போதைய கல்லூரி முதல்வர் உள்ளிட்ட நிர்வாகம் ஆகியோரே எனது சாதனைகளின் பின்னணி.
அடுத்து ரோபோட்டிக்ஸில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். பொறியியல் படிப்பை முடித்ததும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.) அல்லது ஐ.ஐ.டி.யில் எம்.எஸ். பயிலத் திட்டமிட்டிருக்கிறேன். தொடர்ந்து ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்து, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஆசை!
வெடிகுண்டு வெடிக்காமல் தடுக்கும் கருவியையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் மாஷா. அவசியமான கண்டுபிடிப்பு, சீக்கிரமா கண்டுபிடிங்க!

மாஷாவின் கண்டுபிடிப்புகள்
1. எச்சரிக்கை அலாரம்
2. வி.ஐ.பி. பாதுகாப்பு அமைப்பு
3. ஆட்கள் செல்வதற்கான 'கன்வேயர் பெல்ட்' அமைப்பு
4. அதிநவீன ரெயில் கழிப்பறை
5. பெட்ரோல் நிலையங்களில் குழந்தை பாதுகாப்பு அமைப்பு
6. டிரான்ஸ்பரன்ட் டெஸ்ட் டூல் கிட்
7. நெருப்பில்லா முத்திரை வைப்பான்
8. எந்திர சுமைதூக்கி

வெள்ளி, 14 ஜனவரி, 2011

எப்படி எழுதுவது "ஒள'காரத்தை?

தமிழ் மொழியில் 12 உயிரெழுத்துகள் உள்ளன. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில், "ஒளகார விறுவாய்ப் பன்னீரெழுத்து உயிரென மொழிப' (8) என்ற சூத்திரம் உள்ளது.
ஆனால், தமிழ் வட்டெழுத்தில் பதினோரு உயிரெழுத்து வடிவங்களே கிடைத்துள்ளன. பாண்டிய, சேர நாட்டு தமிழ் வட்டெழுத்தில் "ஒள' வடிவம் இல்லை.
"பண்டைய தமிழ் எழுத்துகள்' என்ற நுõலில், வட்டெழுத்தின் வடிவங்களை தி.நா.சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். அந்த அட்டவணையிலும் "ஒள' எழுத்து வடிவம் இருப்பதாக குறிப்பிடவில்லை.
கி.பி., எட்டாம் நுõற்றாண்டில் இருந்து 17ம் நுõற்றாண்டு வரையில் திருவிதாங்கூர் ராச்சியத்தில் கண்டெடுக்கப்பட்ட வட்டெழுத்துச் செப்பேடுகளையும், கல்வெட்டுகளையும் படித்த கோபிநாதராவ், தாம் வெளியிட்ட வட்டெழுத்து அட்டவணையில் "ஒள' வடிவம் இருப்பதாக குறிப்பிடவில்லை. மேலும், "ஒள' எழுத வேண்டிய இடத்தில் "அவ்' என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
"சேரநாட்டில் தமிழ் வட்டெழுத்து'  தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நுõலில் இருந்து

திராவிட மொழிகள் என்னென்ன?

இந்தியாவில் தற்காலத்தில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர்.
இந்தோ  ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். "திராவிடம்' என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. மொழியியல் அறிஞர் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளை திராவிட மொழிகள் என அழைத்தார். தென்னிந்திய பேச்சு மொழிகளைக் குறிக்கும் போது, வட மொழி ஆய்வாளர்கள் "திராவிடி' என்ற சொல்லால் குறிப்பிட்டனர்.
தற்காலத்தில் 23க்கும் அதிகமான மொழிகள், திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன, 1.தமிழ், 2.மலையாளம், 3.கன்னடம், 4.தெலுகு, 5.கோண்டி, 6.குரூக், 7.துளு, 8.கூயி, 9.பிராகூய், 10.கூவி, 11.கோயா, 12.மால்தோ, 13.குடகு, 14.கோலாமி, 15.பர்ஜி, 16.கொண்டா(கூபி), 17.கதபா, 18.நாயக்கி, 19.பெங்கோ, 20.கோத்தா,21.தோடா, 22.மண்டா, 23.கொரகா என்பனவாகும்.
இவற்றுள், தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா என்ற எட்டு மொழிகளும் தென்திராவிட மொழிகள்; தெலுகு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலமி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டா என்ற 12 மொழிகளும் நடுத்திராவிட மொழிகள்; குரூக், மால்தோ, பிராகூய் என்ற மூன்றும் வட திராவிட மொழிகள் என்ற பகுப்பில் உள்ளடங்குகின்றன.
இந்திய நிலப்பரப்பில் பேசப்படும் இடங்களைக் கொண்டு இந்தப் பகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நன்றி: அரங்க சுப்பையா, நுõல்: "உலக மொழிகளின் வரலாறு'

தமிழின் பெருமை

கணிதத்தில் எண்களுக்கு வரையறை கிடையாது. மற்ற மொழிகளிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே எண்களின் மதிப்பை வரையறுத்து கூற முடியும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எண்களின் வரையறையைக் பார்க்கலாமா!
1 = ஒன்று = one 
10 =பத்து = ten
100 = நூறு = hundred
1000 = ஆயிரம் = thousand
10000 = பத்தாயிரம் = ten thousand
100000 = நூறு ஆயிரம் = hundred thousand
1000000 = பத்து நூறாயிரம் = one million
10000000 = கோடி = ten million
100000000 = அற்புதம் = hundred million
1000000000 = நிகற்புதம் = one billion
10000000000 = கும்பம் = ten billion
100000000000 = கனம் = hundred billion
1000000000000 = கர்பம் = one trillion
10000000000000 = நிகர்பம் = ten trillion
100000000000000 = பதுமம் = hundred trillion
1000000000000000 = சங்கம் = one zillion
10000000000000000 = வெல்லம் = ten zillion
100000000000000000 = அந்நியம் = hundred zillion
1000000000000000000 = அற்டம் = இல்லை
10000000000000000000 = பரற்டம் = இல்லை
100000000000000000000 = பூரியம் = இல்லை
1000000000000000000000 = முக்கோடி = இல்லை
10000000000000000000000 = மகாயுகம் = இல்லை