வியாழன், 18 அக்டோபர், 2012

யோசிக்கலாமே…இனியாவது


ஒவ்வொரு முறையும் சென்னையில் சாலையில் பயணம் செய்யும் போது இருசக்கர வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையான பயணத்தால் கடுப்படையவும், ரௌத்திரம் அடையவும் செய்கிறது. 

ஏன் இப்படி என்று ஒரு நாள் நிதானமாக பார்க்கும் போது, அவசரம் அவசரம் அவசரம் இதுமட்டுமே காரணமாக தெரிந்தது… 

ஆனால் என்ன அவசரம் என்று பார்த்தால் காலையில் அலுவலகம் செல்லவும், மாலையில் வீட்டிற்கு செல்லவும் அவ்வளவு அவசரம்… 

சுடுதண்னீரை காலில் ஊற்றியவர்களைப்போல் இருசக்கர வாகனத்தை உற்..ர் ர்ர் என்று விரட்டி முடிந்த அளவு இடப்பக்கமாகவே சென்று, தோண்டிய கால்வாயில் விழுந்து நேரத்தை வீணாக்கி இருக்கிறார்கள். இடப்பக்கம் ஒரு வாகனம் பழுதடைந்து நின்றிருக்கும் போது இவர்கள் அந்த வாகனத்தை கடக்க பல நிமிடம் காத்திருக்க நேரிடும்… இதை விட ஒரு கொடுமை என்னவென்றால் அவசரத்தில் முன்னால் சென்ற வாகனத்தில் லேசாக உரசியோ முட்டியோ பெரிய வாய் சண்டை போடுவார்கள்… இப்படி நேரத்தை வீணாக்கும் அவசரம் தேவைதானா…. இந்த அவசரக்காரகள் சென்னையில் அதிகம்,,, அது நானாகவோ,,, நீங்களாகவோ,, நமது நண்பர்களாகவோ,, நண்பர்களின் தோழர்களாகவோ இருக்கலாம்… ஆனால் அவசரமு அஜாக்கிரதையும் ஆபத்துதான்..

இதோ சமீபத்தில் வந்த ஒரு புலனாய்வுத்தகவல்

மாநிலம் முழுவதும், ஆகஸ்ட் மாதம் வரையில், நடந்த விபத்துக்களில், 11, 046 பேர் பலியாகியுள்ளனர். கடந்தாண்டு, இதே காலகட்டத்தில், 44 ஆயிரத்து 793 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில், 9,717 விபத்துக்களில், 10 ஆயிரத்து 511 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் உயிரிழப்புகளை பொறுத்தவரை, கனரக வாகனங்களாலும், இருசக்கர வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையாலும், ஏற்பட்ட விபத்துக்களே அதிகமாக உள்ளன.இது தவிர, அரசு பஸ்களால், 10 சதவீதத்திற்கும் அதிகமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன. பள்ளி வாகனங்கள் விபத்துக்கு உள்ளான சம்பவங்களும் நடந்துள்ளன. 
                    -யோசிக்கலாமே…இனியாவது