வியாழன், 2 ஜனவரி, 2014

ஒட்டுதலும் ஒட்டாமையும்: இரண்டு குறள்


வார்த்தைக்கு வார்த்தை உதடுகள் ஒட்டும் ஒரு குறள்: 
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.


ஒரு வார்த்தை கூட உதடுகள் ஒட்டாமல் சொல்லும் ஒரு குறள்:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

2 கருத்துகள்:

 1. 'நோதல்' சொல்லும் போது உதட்டோரம் கொஞ்சம் ஒட்டுறமாதிரி இல்லே...? அதனால் :

  ஒட்டாத மற்றொரு குறள் :

  எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
  செய்தற்கு அரிய செயல்.(குறள் எண் 489)

  ஒட்டும் மற்றொரு குறள் :

  இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
  இடும்பை படாஅ தவர். (குறள் எண் : 623)

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு