ஜனவரி 1 புத்தாண்டு அது மட்டும் தானா....?
1.
மாமேதையின் பிறந்த நாள்
விஞ்ஞானம் , கணித இயற்பியல் போன்றவற்றில் முக்கிய கண்டுபிடிப்புகள் மேற்கொண்டவர் சத்தியேந்திர போஸ் . 1920 களில் குவாண்டம் எந்திரவியலில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்கு போஸ் & ஐன்ஸ்டைன் புள்ளியியல் உருவாக முக்கிய காரணமாக விளங்கின . சத்தியேந்திர நாத் போஸுக்கு சிறுவயதில் இருந்தே கணிதத்தில் தீவிர ஆர்வம் இருந்தது . அதன் காரணமாக கல்லூரியிலும் கணிதத்தில் இளங்கலை , முதுகலை பட்டங்களை மட்டுமே படித்தார் . 1918 ஆம் ஆண்டுக்கு பிறகு இயற்பியல் குறித்து ஆராய்ச்சியில் இறங்கி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தார் .
இது பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டன் உடைய கவனத்தையும் , மற்ற இயற்பியல் விஞ்ஞானிகளின் கவனத்தையும் ஈர்த்தது . இதனால் எக்ஸ்ரே , ஒளியியல் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஐரோப்பிய அறிவியலாளர்கள் அவரை அழைத்தனர் . ஐரோப்பாவில் , மேரி க்யூரி , ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் , லூயி டி பிராக்ளி போன்ற எண்ணற்ற விஞ்ஞானிகளுடன் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் . வங்காளம் , ஆங்கிலம் , பிரெஞ்சு , ஜெர்மன் , சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவரான போஸுக்கு 1954 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தது . ஒளியியல் , ஒளித்துகள் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட போதிலும் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவே இல்லை . இந்தியாவின் மேதையின் பிறந்த நாள் ஜனவரி 1 , 1894 இன்றுதான் . 2. சீனாவில் ஜனநாயக ஆட்சி
இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் முன்னணியில் இருப்பது சீனா . 1644 ஆம் ஆண்டு முதல் 1911 ஆம் ஆண்டு வரையில் சீனாவை சிங் வம்சம் ஆட்சி செய்து வந்தது . சிங் வம்சத்தின் ஆட்சியில் எண்ணற்ற உள்நாட்டு கிளர்ச்சிகள் , வெளிநாட்டு அச்சுறுதல்கள் மூலமாக லட்சக்கணக்கான சீனர்கள் இறந்து போயினர் . இதுமட்டுமல்லாமல் முறையற்ற வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலமாக சீனாகடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருந்தது . இதுதவிர , ஆட்சி அதிகாரம் சிறுபான்மையினராக இருந்த மஞ்சு இன மக்களிடம் இருந்து பெரும்பான்மையினராக இருக்கும் ஹன் சீனர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன .
இதன் காரணமாக சிங் வம்சத்தினர் ஒரு அரசியலமைப்பை 1906 ஆம் ஆண்டு உருவாக்கினர் . ஆயினும் அது சரியாக செயல்பட்டவில்லை . இதனால் எண்ணற்ற புரட்சிக் குழுக்கள் உருவாகின . 1911 ஆம் ஆண்டு சீனா மன்னர் பகுதிகளுக்கும் , புரட்சிக்குழுக்களுக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட்டது . இறுதியாக 1911 ஆம் ஆண்டு சீனாவின் மன்னராட்சி அகற்றப்பட்டது . 1912 ஆம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி , சீனாவில் மக்களாட்சி நிறுவப்பட்டது . அதன் தற்காலிக அதிபராக சென்யாட் சென் அறிவிக்கப்பட்டார் . 3.
டிராவலர்ஸ் செக் அறிமுகம்
இன்று , வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் , தனது பணத்தேவைக்கு கிரெடிட் கார்டு , டெபிட் கார்டு , இன்டர்நெட் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்துவார்கள் . ஆனால் 1990 களுக்கு முன்பாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அனைவரும் பணம் , படுக்கை , பாஸ்போர்ட்டுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமாக எடுத்து செல்லும் சாதனம் டிராவலர்ஸ் செக் . அதிலும் சுற்றுலா பயணிகள் , டிராவல்ஸ் செக் இல்லாமல் பணம் செலவழிப்பது மிகவும் கஷ்டம் . அப்படி முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக கருதப்பட்ட டிராவலர்ஸ் செக் முதன் முதலாக இங்கிலாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது . லண்டன் கிரெடிட் எக்சேஞ்ச் கம்பெனி என்கிற நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வியாபாரிகளுக்காக செக் எனப்படும் இந்த காசோலையை முதன் முதலாக 1772 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் தேதி அறிமுகம் செய்தது . 4. புதிய பேரரசி
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவின் முக்கிய சக்திகளாக மராத்திய , முகலாய , சீக்கிய சாம்ராஜ்ஜியங்கள் திகழ்ந்தன . 1830 களுக்கு பிறகு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்கிற நிறுவனம் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது . 1857 ஆம் ஆண்டு , முதல் இந்திய சுதந்திர போர் நடைபெற்றது . இந்தியாவில் மீரட் நகரில் தொடங்கிய இந்த போர் , உத்திரபிரதேசம் , உத்திரகாண்டம் , வடக்கு மத்திய பிரதேசம் , டெல்லி போன்ற பகுதிகளை மையம் கொண்டிருந்தது . அந்த போரில் இந்திய போராளிகளை கம்பெனி வெற்றிகரமாக வீழ்த்தியது .
இருப்பினும் கம்பெனியின் செயல்முறைகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தவில்லை . அதனால் , இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை நேரடியாக அமல்படுத்தும் முயற்சிகளில் இறங்கியது . அடுத்த சில வருடங்களில் இந்தியா நேரடி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் வந்தது . இருப்பினும் 1877 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரெலி , பேரரசி விக்டோரியாவை , இந்திய பேரரசி என்று அறிவித்தார் . அந்த அறிவிப்பு வெளியான தினம் , 1877 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 தேதி ! 5. அடிமைகளுக்கு விடுதலை
அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்று அமெரிக்க உள்நாட்டு போர் . அமெரிக்க அரசுக்கு எதிராக கன்படரேட் மாநிலங்கள் ஒன்றிணைந்து போரிட்டன . இந்த காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக ஆப்ரகாம் லிங்கன் இருந்தார் . அமெரிக்காவின் பெரும் பிரச்னையாக விளங்கிய இந்த போர் , அமெரிக்க சமூக , பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்திவிட்டது . உள்நாட்டு போர் மூன்று வருடங்கள் நடந்து முடிந்த நிலையில் அதிபர் லிங்கன் , விடுதலை பிரகடனம் ஒன்றை அறிவித்தார் . அதன்படி அமெரிக்காவில் வாழும் கருப்பர் இன அடிமைகள் , அமெரிக்க அரசுக்காக போரிடுவதற்கு வழிவகுத்தது . அதன் மூலமாக அதுவரையில் அடிமைகளாக இருந்த கருப்பர் இன அடிமைகளுக்கு இது பெரும் மகிழ்ச்சியை தந்தது .
ஆயிரக்கணக்கான கருப்பர் இன மக்கள் அமெரிக்கப் படையில் சேர்ந்து கான்படரேட் மாநிலங்களுக்கு எதிராக போரிட்டனர் . அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் மட்டும் 30 முதல் 40 லட்சம் அடிமைகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . அடிமைகளை விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்ட பிரகடனம் , 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் தேதி அறிவிக்கப்பட்டது .
இப்படி வரலாற்றில் ஏராளமான சம்பவங்கள் நடந்தேறிய தினம் ஜனவரி 1.
arumai
பதிலளிநீக்கு