சனி, 20 ஜூலை, 2013

கதை - தயார் செய்வது எப்படி?

கதை: புனைவின் உரைநடை அப்படினு சொல்லலாம். அதாவது கற்பனையா நாம நினைக்கிறது எழுதறதுனு அர்த்தம். இந்த கதையானது ஒரு சின்ன மையக்கருவை அல்லது நிகழ்வை வைத்துதான் பெரும்பாலும் எழுதப்படுகிறது, எழுதிட்டு இருக்காங்க, நீங்களும் இனி எழுதுவீங்க…!
பொதுவா ஒரு கதை தயார் பண்ணனும்னா, முதல்ல நாம நம்மள சுத்தி நடக்குறத சரியா கவனிக்கனும் அப்பதான் கதைக்கான களம், பாத்திரப்படைப்புனு எல்லாத்தயும் முழுசா கொண்டுவர உதவியா இருக்கும்.

கதை  சொல்றதுங்றது நமக்கெல்லாம் புதுசா , சொல்லுங்க. எத்தனை இடத்துல கதைய சொல்லிருப்போம். 

பஸ்ல நல்லா தூங்கிட்டு வந்திருப்போம், அப்படியே கண் முழிச்சி பார்த்தால்  அங்க ஒரே கூட்டம், அத என்னனு எட்டிப்பாத்தா ஒரு மாடு குறுக்க வந்து ஒரு கார் விபத்துக்குள்ளாயிருக்கும். அத நம்ம நண்பர்ட சொல்றப்ப அப்படியேவா சொல்வோம்..?

”நான் பஸ்ல வந்துட்டே இருந்தேன், அப்ப ஒரு மாடு வேகமா ரோட்டத் தாண்டி ஓடி வந்துச்சு அந்த நேரம் பாத்து ஒரு கார் வேகமா வந்து ப்ரேக் போட, அந்த பிரேக்கயும் மீறி மாடு மேல கார் மோத,,, சே…” இப்படி சொல்வோம்ல, இந்த உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுதான் நம் எழுத்திலயும் வரணும்.

ஒவ்வொருவரும் கதை சொல்பவர்கள் தான். ஒரு அனுபவத்தை, ஒரு சம்பவத்தை அல்லது ஒரு செய்தியை விவரிக்க ஆரம்பிக்கும் பொழுதே இது அவர்களிடம் வெளிப்படுகிறது. டெலிவிஷன், ரேடியோ அல்லது குடும்ப நபர்கள் பேசுவதைக் கேட்கும் பொழுது, கதை சொல்லும் இவர்களும் பார்வையாளர்களாகிறார்கள். உலகத்திலுள்ள அத்தனை தகவல் பரிமாற்றங்களும் கதைசொல்வதைச் சுற்றியே உருவாகிச் சுழல்கிறது. கதைகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. அறிவுப்புப் பலகைகளிலிருந்து, பஸ் நிற்குமிடங்கள், ரயில் நிலையங்கள், சினிமா அரங்குகள், வீடுகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நடைபாதைகள், வீதிகள், விளம்பரங்கள், குடும்பங்கள், வேலைசெய்யும் இடங்கள், ஏன், விண்வெளியிலும் கூட கதைகளின் ஆக்கிரமிப்புத்தான். குடும்ப உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நமது அனுபவங்களையும், கடந்த கால நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் பொழுது, அந்த உரையாடல்கள் அத்தனையும் பல கதைகளாகும்

சரி ஒரு நல்ல கதைய எழுதுங்க, அத எப்படி திரைக்கதையாக்குறதுனு பாக்கலாம் அப்பறம்…!
நன்றி
 

1 கருத்து:

  1. இப்பத் தான் ஒரு கதை சொல்லி உள்ளேன்... இனியும் சொல்கிறேன்... விளக்கத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு