வியாழன், 18 ஜூலை, 2013

குறும்படம்- அப்படீனா?

போனவாரம் ஞாயிற்றுக்கிழமை, என் நண்பன் ராஜா என்னைப் பாக்க வந்தான்.  அது ரொம்ப சந்தோஷமான விஷயம்தான். அவன் மனைவிக்கு வளைக்காப்புனு பத்திரிக்கை வைக்க வந்துட்டு , மத்தவங்களோட தொடர்பு எண் எல்லாம் சரிபாத்துட்டு , கொஞ்சம் கதை பேசிட்டு கிளம்பிட்டான். அவன் கிளம்பினதும் பாக்குறேன், அவன் தலைக்கவசம் (ஹெல்மெட்) எங்க வீட்டுல விட்டுட்டு போயிட்டான். அவன் விட்டுட்டு போனத நான் மறுநாள் காலைலதான் பாக்குறேன். அப்ப அவனுக்க்கு போன் பண்ணி சொல்லலாம்னு போன் பண்றேன் அவங்க அப்பா போன எடுத்து பேசுறார். நேத்து ஒரு விபத்துல ராஜாக்கு தலைல அடிபட்ருச்சுனு… எனக்கு மனசே கஷ்டமாயிடுச்சு”
இந்த மாதிரி பல சம்பவங்கள் நடந்திருக்கும் எல்லோர் வாழ்க்கையிலும் அது சோகமா தான் இருக்கனும்னு இல்ல, ஒரு அழுத்தமான பதிவா இருந்தாலே போதும் , அத காட்சிப்படுத்துதலின் மூலமா பதிவு பண்றதுதான் குறும்படம்.
பொதுவா குறும்படம் அப்படினாலே குறும்பாடமா பாக்குறவங்க மனசில் இருக்கும். அதுக்கு முக்கிய காரணமே குறைந்த நேரத்தில் மிக அழுத்தமா பதிய வைக்கிறதுதான் காரணம்.
குறும்படம்- யாரும் எப்பவும் எடுக்கலாம். குறும்படத்தைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிக அளவில் வந்திருக்கிறது. அதுக்கு ஒருவகையில் தனியார் தொலைக்காட்சிகள் இதனை வைத்து பணம் செய்ததும் ஒன்னு. அதே நேரத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியும் முக்கிய பங்களிக்குது. பதிவில் குறும்படத்திற்கான எனது அனுபவத்தையும் , கற்றலையும் உங்களிடம் பகிர ஒரு சிறு ஆரம்பம்தான் இந்த பதிவு
அடுத்ததா ஒரு கேள்வி தானா மனசில் எழும் , ஒரு குறும்படம்னா அது எவ்ளோ மணி நேரம் எடுக்கலாம்னு…. அத பத்தி அடுத்த பதிவில் விரிவா சொல்றேன் !

நன்றி



2 கருத்துகள்: