செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

போஸ்ட் ஃபுரடக்ஷன்


போஸ்ட் ஃபுரடக்ஷன் :-
சி. ஜெ. ராஜ்குமார் 

சினிமா படத் தயாரிப்பில் முக்கியமான கட்டம் 'போஸ்ட் புரோடக்ஷன்' (Post Production) என்னும் இறுதிக்கட்ட தயாரிப்புப் பணி. எடிட்டிங், டப்பிங், ரீ ரிக்கார்டிங், சிறப்பு சப்தம் (Effects Sound). இறுதி ஒலிக்கலவை (Final Sound Mixing), கிரேடிங் (நிறத் தேர்வு) கடைசியாக பிரதி எடுப்பது வரை படத்தொகுப்பாளரின் (Editor) பங்கு முக்கியமானது. இவரது வேலை அட்டவணையைப் பொறுத்தே எல்லா முடிவுகளையும், அடுத்தகட்ட பணிக்கான இலக்கையும் இயக்குனர் தீர்மானிக்க முடியும்.
படத்தொகுப்பு பணியை ஆரம்பிக்க, முதலில் பதிவு செய்யப்பட்ட ஃபிலிம்மானது லேபிள் நெகடிவ்வாக ப்ராஸஸிங் செய்யப்பட்டு இருக்கும். அப்ஃபிலிம் 'டெலி-சினி) என்ற முறைக்கு ஃபிலிம்மிலிருக்கும் 'நெகடிங்' இமேஜ் (Image) பாஸிட்டிவ்வாக வீடியோ டேப்புக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இதுவே இன்று நடைமுறையிலிருக்கும் 'Rushes". (ரஷ்சஸ் - ஒலி இல்லாமல் காட்சிகளை இயக்குனரும் அப்படத்தயாரிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் பார்வையிடுவது). பின்னர் பதிவு செய்யப்பட்ட காட்சிகளானது வீடியோ டேப்பிலிருந்து ரெக்கார்டர் (ரெகார்டர்) உதவியுடன் கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்லப்படும்.
பைநல் கட் ப்ரோ (Final Cut Pro), ஆவிட் (AVID) எடிட்டிங் சாஃப்ட்வேர்களின் உதவியோடு படத்தொகுப்பு முறை ஆரம்பிக்கும். முதலில் காட்சிகளின் வரிசை வரைமுறை செய்யப்படும். படப்பிடிப்பு தளத்தில் 'வசனத்தை' சினிமாவில் தனியாக 'நாக்ரா' கருவி மூலம் பதிவு செய்யப்படுவதால்; படத்தின் மொத்த வசன ஒலியை கம்ப்யூட்டருக்கு மாற்றம் செய்து; படத்தின் மொத்த வசன ஒலியை கம்ப்யூட்டருக்கு மாற்றம் செய்து, க்ளாப் போர்ட் (Clap Board) உதவியோடு அவ்வொலியை காட்சிகளோடு இணைத்த பிறகே, படத்தொகுப்பு - ரஃப்கட் (Rough cut) ஆரம்பிக்கப்படுகிறது.
டப்பிங்கிற்கு முன்னர் எடிட்டிங் செய்யும்போது, படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் இரைச்சல் சம்பதங்களோடு தான் நடிகர்கள் பேசும் வசன ஒலியும் பதிவாகியிருக்கும். ஆதலால் படத்தொகுப்பாளர் டப்பிங் முடிந்த பின்னரே படத்தொகுப்பு சம்பந்தப்பட்ட இறுதி வடிவத்தைக் கொடுப்பார். இதை ஃபைனல் கட் (Final Cut) என்பார்கள்.
டப்பிங் (Dubbing) :-
படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் கேமரா ஃபிலிமில் வசனத்தைப் பதிவு செய்யாது. அதோடு படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் இரைச்சலும், மொழி தெரியாமல் நடிக்கும் நடிகர்களும் இருக்கும் காரணங்களால் படப்பிடிப்புத் தளங்களில் பதிவு செய்யப்படும் வசனங்களை உபயோகப்படுத்த இயலாது.
ஆதலால் வசனங்கள் டப்பிங் தியேட்டரில் மறுபதிவு செய்யப்படுகிறது.
டப்பிங் தியேட்டர் :
டப்பிங் தியேட்டர் என்பது முழுமையாகக் குளிரூட்டப்பட்ட ஒலிபுகா வண்ணம் (Sound Proof) பாதுகாப்பாகக் கட்டப்பட்ட ஓர் அரங்கமாகும். டப்பிங் தியேட்டரில் சவுண்ட் இன்ஜினியரின் நேரடிக் கண்காணிப்பில்தான் டப்பிங் நடைபெறும். இப்போது டப்பிங் முழுக்க முழுக்க கம்ப்யூட்டரின் உதவியோடு நடத்தப்படுகிறது.
ஒரு காட்சிக்குச் சம்பந்தமான டப்பிங் நடக்கும்போது, அக்காட்சியில் நடித்திருக்கும் அனைவரும் டப்பிங் பேச வர வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் வந்து பேசிவிட்டுப் போகலாம். பிறகு எல்லா டிராக்குகளையும் ஒன்றிணைத்து பதிவு செய்யப்படும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக