செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

பிலிம் உருவான சரித்திரம்


பிலிம் உருவான சரித்திரம்:
சி. ஜெ. ராஜ்குமார் 

1727ஆம் ஆண்டில் திரு.ஜொஹன் ஹென்ரிச் ஸ்கல்ஜ் (Johan Henrich schulze) ஜெர்மன் மருத்துவரான அவர் லாப்பில் (டab) சில்வர் (silver), நைட்ரிக் ஆஸிட் (nitric acid), சால்க்பவுடர் (chalk powder) ஆகியவற்றை ஒரு மூடியில் வைத்து சில்வர்நைட்ரேட் (silver nitrate) உருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்த போது, அக்கலவை மீது சூரிய ஒளி படர அக்கலவை வெள்ளை நிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு மாற்றம் கண்டதைப் பார்த்து அதிசயித்த ஜொஹன், உடனடியாக சில ‘கட்வுட்’ (cut-out) செய்து எழுத்துக்களை ‘மூடி’ முன்னர் வைத்து அக்கலவையை பூசி வெளிச்சத்தைப் பாய்ச்ச, அதிசயம் நிகழ்ந்தது. மூடியில் (flask) முன்னர் இருந்த கட்வுட் எழுத்துகள் தெளிவாக மூடியில் பதிவாகியிருந்தது. ஒளிப்படக்கலையின் தோற்றத்தின் முக்கிய கட்டமாக இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், மேலும் 100 ஆண்டுகளுக்கு இக்கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படவில்லை.
பின்னர் 1839 லீயிஸ் டாக்ரே (Louis daguerre) பிரன்ச் ஓவியரான இவர் ‘சில்வர் நைட்ரேட்’ கலவையை ஒரு ‘செப்புத்தகடில்’ பூசி ஒளி படும்படி செய்து ஒளிப்படத்தை ‘செப்புத்தகடில்’ உருவாக்கினார். இதை (wet plate process) வெட் பிளேட் பிராசஸ் என்று கூறினர். பிறகு வில்லியம் பாக்ஸ் தால்பொட் (william Henry Fox Talbot) ‘சில்வர்’ ரசாயனத்தை தகடிற்கு பதிலாக காகிதத்தில் பூசினார். இதன் மூலம் எடுத்த ஒளிப்படத்தை ‘Beautiful picture’ ‘அழகான படம்’ என்று அழைத்தார்.
1889ஆம் ஆண்டில் ஃபிலிம்க்கான முதல் விஞ்ஞான கட்டத்தை ஜார்ஜ் ஈஸ்ட்மென் (George Eastman) உருவாக்கினார். அவர் ‘சில்வர் நைட்ரேட்’ ரசாயனத்தை காகிதத்திற்குப் பதிலாக கண்ணாடி போல உள்ள ஃபிலிம் என்னும் தளத்தில் பூசி உலகம் முழுவதிலும் இன்று வரை பிரபலமாக இருக்கும் கோடாக் என்னும் நிறுவனத்தின் மூலமாக ஃபிலிம் கண்டுபிடிப்பை உணர்த்தி வெற்றி பெற்றார். இங்குதான் புகைப்படக்கலை மற்றும் சினிமாவின் வளர்ச்சி வேகமடைந்தது. 1889ஆம் ஆண்டு ஃபிலிம் கண்டுபிடித்த அந்த வருடத்தில் கோடாக் காமிரா அறிமுகப்படுத்தப்பட்டது.
ஃபிலிம் (film) 
ஒளிப்படக்கலை (photographic) ஃபிலிமானது இரசாயன மாற்றம் ஏற்படும் தன்மையுள்ளது. அம்மாற்றம் ஒளியால் ஏற்படுத்தப்படுகிறது. முறையாக ஃபிலிமைக் கேமராவில் செலுத்தி, நாம் படமெடுக்கும் உருவத்திலிருந்தோ அல்லது இடத்திலிருந்தோ வரும் ஒளியை லென்ஸ் வழியாக காமிராவிற்குள் செலுத்தும்போது அவ்வொளி ஃபோக்கஸ் (focus) செய்யப்பட்டு, சில சமயம் (subject ) சிறிதாக்கவோ அல்லது பெரிதாக்கவோ லென்ஸ் மூலமாக தீர்மானிக்கப்பட்டு காமிராவில் உள்ள சட்டர் (shutter) திறக்க ஒளி ஃபிலிமிற்குச் சென்று பதிவாகிறது. பதிவான அந்த இமேஜ் (image) ‘லெடன்ட் இமேஜ்’ (latent image) என்று அறியப்படுகிறது. பிறகு ஃபிலிமை இரசாயனத்தால் கழுவும் முறை டெவலப்பிங் (developing) என்று அழைக்கப்படுகிறது. டெவலப் செய்த படம் நெகடிவ் (negative) ஆகிறது.
நாம் படமாக்கிய வெளிச்சப்பகுதி இருண்டதாகவும், இருண்டபகுதி வெளிச்சமாகவும் நெகட்டிவில் இருக்கும். நிறத்தன்மையும் அப்படியே நேர் எதிராக பதிவாகி இருக்கும். நெகடிவை மேலும் (film paper) ஃபிலிம் காகிதத்தில் பாசிடிவ் (positive) படமாக செய்யப்படுகிறது.
ஃபிலிம் உருவாக்கம்:
ஃபிலிம் = இரசாயன மாற்றம் தரும் வேதியியல் பொருள் ‘இமல்சன்’ (Emulsion) என்று அழைக்கப்படுகிறது. இரசாயனக் கலவையான ‘இமல்சன்’ ஒரு ப்ளாஸ்டிக் (plastic) தன்மையுடைய மிக மெலிதாக உள்ள தளத்தில் (Base) பூசப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இமல்சன் மற்றும் தளம் எப்படி உருவாக்கப்படுகிறது என்று கீழ்கண்ட வழிகளில் அறிவோம்.
கலர் பிலிம்க்கான வரைபடம்

ஆன்ட்டி ஹலேசன் : (Anti halation)
இப்பகுதியானது ஒளி இரு பக்கங்களிலிருந்து ஃபிலிமுக்கு வராமல் ஒரே பக்கத்திலிருந்து வருவதற்காக உருவாக்கப்பட்ட பகுதி.
நடுப்பகுதி : (Inter layer)
ஒரு வண்ணப் பகுதிக்கும் அடுத்த வண்ணப் பகுதிக்கும் சிறு இடைவெளியை உருவாக்குவதே நடுப்பகுதியின் செயல்.
தளம் : (film base)
ஃபிலிம் தளமானது மிக மிக மெலிதாக தயாரிக்கப்படுகிறது. அதனுடைய அளவு 1/10000 இன்ச். ப்ளாஸ்டிக் போன்று உள்ள இத்தளம் மரத்தின் கலவையிலிருந்து (wooden pulp) தயாரிக்கப்படுகிறது. இதன்மீதுதான் இரசாயணக் கலவையான இமல்சன் பூசப்படுகிறது.
இமல்சன் தயாரிப்பு :
சில்வர் என்ற வேதியியல் பொருள் நைட்ரிக் ஆசிடில் கலக்கப்படுகிறது. அது கரைந்த பின் குளிர்படுத்தி சில்வர் நைட்ரேட் பொடிகளாக (silver nitrate crystals ) மாற்றப்படுகிறது. அது சில்வர் நைட்ரேட் பசைபோல உள்ள ஜெலடினில் (Gelatin ) கலக்கப்பட்டு ஒளிமாற்றம் தரும் ரசாயன கலவையாக தயாரிக்கப்படுகிறது. இமல்சன் ஆக தயாரிக்கப்பட்ட கலவை ஃபிலிம் தளத்தில் மூன்று முறை சீராக பூசப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வண்ணம் இமல்சனோடு “சிவப்பு, பச்சை, நீலம்” நிறத்தில் கவனமாகப் பதிக்கப்படுகிறது.
ரசாயனக் (Emulsion) கலவை தயாரிப்பு


ஃபிலிம் துவாரம் : (perforation)
வண்ண ஃபிலிம் உருவான பிற்பாடு அதன் இருபுறத்தில் துவாரங்கள் போடப்படும். இத்துவாரத்தை பெர்போரசின் (perforation) என்பார்கள். அது ஃபிலிம் காமிராவில் சூழல் வசதிக்காக செய்யப்படுகிறது.
ஃபிலிம் செயல்திறன் : (film speed)
ஃபிலிம் செயல்திறனை நிர்ணயிப்பது இமல்சனில் உள்ள புள்ளிகள்தான். துணியில் உள்ள நூல் போல பிலிமில் உள்ள புள்ளி அதன் தன்மையை உணரப் பயன்படுகிறது. புள்ளியின் அளவு பெரிதாகப் பெரிதாக ஃபிலிமானது அதன் வேகத்தை (ஸ்பீடை) அதிகரிக்கிறது. செயல்திறனும் அதிகரிக்கிறது. ஆதலால் குறைந்த வெளிச்சத்தில் கூட படமாக்கும் தன்மை அடைகிறது. ஆனால் இரசாயனப் புள்ளி அளவு சிறியதாக இருந்தால் அதிக வெளிச்சம் தேவைப்பட்டாலும், நிறத்தன்மை சிறப்பாக இருக்கும். புள்ளியின் அளவு பெரியதாக இருந்தால் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த படமாக்கப்பட்டாலும் , நிறத்தன்மை கொஞ்சம் குறைந்த செயல்திறனிலேயே இருக்கும்.
ஃபிலிமின் ஒளிமாற்றம் ஏற்படும் வேகத்தை ஃபிலிம் ஸ்பீட் (flim speed) என்பார்கள். அதை A.S.A - American Standard Association தீர்மானிக்கிறது.
ஃபிலிமின் செயல்திறன் பல அளவுகோல்களாக கூறப்படுவதுண்டு.
50 A.S.A
100 A.S.A
200 A.S.A
250 A.S.A
500 A.S.A
50 A.S.A slow speed film - (ஒளி குறைந்த வேகத்தில் ஏற்படும் மாற்றம்)
- அதிக வெளிச்சத்தில் படமாக்கப்பட வேண்டும்.
- மிகச்சிறப்பான நிறத்தன்மை.
- வெளிப்புறக் காட்சிகளுக்கு ஏற்றது.
100 A.S.A - 200 A.S.A - Medium speed flim
- மத்திய அளவு
- நல்ல நிறத்தன்மை. வெளிப்புறக் காட்சிகளுக்கும், உட்புறக்
காட்சிகளுக்கும ஏற்றது.
250 A.S.A - 500 A.S.A - High speed flim (அதிவேக ஃபிலிம்)
- குறைந்த வெளிச்சத்தில் படமாக்கப்படும் திறன் கொண்டது.
- ஓரளவு சிறந்த நிறத்தன்மை.
- இரவு / பகல் உட்புறக் காட்சிகளுக்கு ஏற்றது.
ஃபிலிம் வகைகள் ஒளிப்பதிவாளர்கள் அவர்களுடைய ரசனை / அனுபவத்தை வைத்தே முடிவு செய்கிறார்கள்.
ஃபிலிம் அதன் வகை சார்ந்து ஒவ்வொரு குணாதிசயத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு வகைக்கு வெவ்வேறு நிறத்தன்மை, வெளிச்சபகுதி / இருண்ட பகுதியின் அடர்த்தி, ஒளி நிர்ணயிக்கும் திறன். இக்குணாதிசயங்களை முதலில் நாம் முழுமையாகத் தெரிந்து கொண்டு சூழ்நிலைகளும் நம் இரசனைக்கு ஏற்றவாறு பயன்படுத்துவதே சிறந்த கலைக்கான தொழில்நுட்பம்.
சினிமாவில் ஃபிலிம் 'ரா ஸ்டாக்' (Raw stock) என்று அழைக்கப்படுகிறது. ஃபிலிம் படச்சுருளானது ஒளி புகாத படப்பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் 400 அடி அளவு உள்ள வகையில் வைக்கப்பட்டுள்ளது. எப்படி ஒரு புகைப்படச்சுருளுக்கு 36 புகைப்படங்கள் எடுக்க முடியுமோ அப்படி ஒரு பெட்டி 400 அடி அளவிலானது. இருண்ட அறையிலோ அல்லது இருண்ட பகுதி கொண்ட பை பெட்டியை பிரித்து படச்சுருளை காமிராவில் உள்ள மெகசின் ‘magazine’ உள்ளே பொருத்தப்பட்டு பிறகு மெகசின் காமிராவில் பொருத்தப்படும்.
சுமார் ஒரு படத்திற்கு 50,000 அடியிலிருந்து 2 லட்சம் அடிவரை ஃபிலிம் அந்தந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பிற்கேற்ப செலவாகும். ஆனால் ஒரு படத்திற்கு 16ஆயிரம் அடி மட்டுமே கடைசியில் எடிட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.
ஒரு காட்சியைக் காமிராவில் பதிவு செய்யும்போது அக்காட்சி தலைகீழாகத்தான் பதிவாகும். காமிராவில் பதிவான ஃபிலிமை மீண்டும் ஒளி புகாதவாறு பெட்டியில் வைத்து லேபிற்கு அனுப்பி , அங்கு எக்ஸ்போர்டு ஃபிலிம் கழுவி டெவலப் செய்து பாசிடிவ் ஃபிலிம் பதிவு செய்யப்படும்வரை குளிர்செய்யப்பட்ட அறையில் வைத்திருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக