செவ்வாய், 24 செப்டம்பர், 2013

காந்தி கணக்கு என்றால் என்ன ?

ஒருத்தன் ஓசில சாப்பிட்டா, அந்த காசு காந்திகணக்குனு சொல்றோம்…
நிஜமாவே காந்திகணக்குனா என்ன?


காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம்நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்என்றார்களாம் அந்த வியாபாரிகள்.

அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக