வியாழன், 12 ஏப்ரல், 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு 500 புலவர்கள் கூடி கலந்துரையாடி, ஆழமாக விவாதித்து, அப்படி ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்; திருவள்ளுவர் ஆண்டு என்பதும் - ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில்தான் என்றும் முடிவு செய்தனர்.

ஆனால் அதனை மறந்து… இல்லை மறக்கவைத்து சித்திரை முதல்நாளை தமிழ்புத்தாண்டு என்றனர்.
ஆட்சிக்காகவோ இல்லை தமிழுக்காகவோ… இரண்டும் பதவிக்காகத்தான் என்றாலும் கலைஞர் ஒரு அரசு சட்டத்தைக்கொண்டுவந்து தமிழ் புத்தாண்டு இனி தை முதல் நாள் என்று அறிவித்தது. மறைமலையடிகள் தலைமையில் நடந்ததை மக்கள் மறந்து கலைஞர் சொல்லியது என்று பேசத்துவங்கியதால் இப்போது அதிமுக அரசின் ஆதிக்கம், அதனை மறுபடியும் மாற்றி சித்திரை முதல்நாளில் கொண்டாட சட்டத்திருத்தம் செய்துவிட்டனர்.
தமிழர்களின் உயிர்களைப் பற்றிய கவலையின்றி…  தமிழர்களின் வாழ்வியலைப் பற்றிய அக்கரையின்றி….. இருக்கும் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு தேவையா …? தேவைதான் என்று கொண்டாடும் என் இனிய தமிழ் மக்களே…  இனிய, கசப்புடன் கூடிய புளிப்புச்சுவையில் துவர்ப்புடன் உவர்ப்பும் கார்ப்பும் கலந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக