வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தமிழுக்காக என்று அரசியல் செய்யும் திருடர்களில்...




நட்பின் உள்ளங்களுக்கு இனிய வணக்கம்….!

திராவிட மொழிகளில் முதன்மையானதாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் 
துளு போன்ற மொழிகள் கருதப்படுகின்றன.
இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது.  திராவிட என்ற சொல் தமிழ என்ற சொல்லில் இருந்துதான் வந்திருக்க முடியும் என்பதை இனவியல் கட்டுரை (இயல்06) சுட்டிக்காட்டியுள்ளது.
திராவிடர் என்றால் தென்னாட்டு பிராமணர் என்று பொருள் என காஷ்மீர வரலாற்று நூலான இராஜதரங்கினி சொல்வதாக போராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். 
மு. வரதராசனார் கூறுவதை இனிபார்ப்போம். இந்திய நாடு முழுவதும் பழங்காலத்தில் ஒரே மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட மொழி ((Proto Dravidian) என்று கூறுவர். பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் தோன்றின. அந்த நிலையிலும் சிற்சில பகுதிகளில் பழைய திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழி பலவகை மாறுதல்கள் பெற்றது.
அந்த நிலையிலும் சிற்சில பகுதிகளில் பழைய திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்தன. அந்த மொழிகளைப் பேசிய மக்கள் மற்றவர்களோடு கலக்காமல் தனித்து வாழ்ந்த காரணத்தால் அவை திராவிட மொழிகளாகவே ஆங்காங்கே நின்று விட்டன. கோமி, பார்ஜி, நாய்கி, மால்டா, ஓரொவன், கட்பா, குருக், பிராகூய் முதலான மொழிகள் இன்றும் திராவிட மொழி இனத்தைச் சார்ந்த வைகளாக இருப்பதற்குக் காரணம் அதுவே 
இப்படி என்னதான் திராவிடம் பற்றி இருந்தாலும் தமிழின் பெயரால் திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கு அடுத்ததாக தமிழுக்காக என்று அரசியல் செய்யும் பா.ம.க கட்சியின் நிறுவனர் செய்தியாளரிடம்
திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம் என பா.. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
திருடர்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்து, மரங்களை வெட்டினாலும் பசுமைத்தமிழகமாக மாற்றுவோம் என்று வெட்கமில்லாமல் கூறிவரும் இவர்களுக்கு கெட்ட வார்த்தையுடன் சகவாசம் ஏன்?
தி.மு.க வில் இருந்து அதே குடும்ப அரசியலினை கையாளும் இவரும் அவர்களுடன் சேர்ந்தவர் தானே… என்ன அங்க குடும்பம் பெருசு இங்க சிறுசு… ! வெக்கம் கெட்ட அரசியல்வாதியாகத்தானே எல்லோரும் இருக்கீங்க. மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சேனு பீபீபீ…த்திக்கிறாங்க வெளக்கெண்ணைங்க. ஆட்டோ க்கு தானி நு கண்டுபிடிச்ச உங்க தமிழ் நுட்பம் தெரியாதா எங்களுக்கு? (ஆட்டோமேட்டிக் அப்படினா தானியங்கி – ஆட்டோ வ தானினு சொல்றாங்க தமிழோசையில்) இப்ப திராவிடம் என்பதை கெட்ட வார்த்தைங்கிறீங்க, அட எதுவா இருந்தாலும் நீங்க கருதுங்க... காரி துப்புங்க , மக்களிடம் தப்பா கொண்டுபோகாதீங்க நண்பரே…!

3 கருத்துகள்:

  1. தமிழ் - திரமிள - திராவிட என்று சொல்லாக்கம் பெற்றதாக படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆனால் ராமதாசு படிக்க மறந்திருப்பாரு இல்ல படிச்சத மறந்திருப்பாரு...சாம்.

    பதிலளிநீக்கு
  3. இப்படி நச்சென மூஞ்சியுள் அடி விழிகிற மாதிரியாக தமிழர்கள் தங்களின் செயல் பாடுகளை வைத்துகொண்டால் த்மிழ் என சொல்லிக்கொண்டு இப்படி பட்ட தனல பேர்வழிகள் வெளிவர முடியாது இடுகைக்கு பாராட்டுகள் நன்றி

    பதிலளிநீக்கு