செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

சினிமாட்டோ கிராஃபி காமிரா


சினிமாட்டோ கிராஃபி காமிரா
சி. ஜெ. ராஜ்குமார் 

சினிமாக்கலையின் அசையும் காட்சிகளை பதிவு செய்யும் கருவியை சினிமாட்டோ கிராஃப் காமிரா (Cinematograph Camera) பிலிம் காமிரா (Film Camera) என்று அழைக்கப்படுகிறது.
பிலிம் காமிரா அசைவுகளை தொடர் நிழற்படங்களாகவே (Serious of Images) பதிவு செய்யப்படுகிறது.
காமிராவின் முக்கிய பாகங்கள்:

1) பிலிம் மகசின் (Film Magazine)
2) காமிரா அறை (Camera Body)
3) லென்ஸ் (Lens)
4) வியு ஃபைன்டர் (View Finder)
5) டிரைவ் (Drive)
6) மெட் பாக்ஸ் (Matte Box)
பிலிம் காமிராவில் பயணிக்கும் முறை தொடர்ந்து செல்வது போல நமக்கு தோன்றினாலும் பிலிம் பயணிக்கும் தன்மையை நின்று செல்லும் முறை என்று அழைக்கப்படுகிறது. இதை இன்டர்மிடன்ட் மோஷன் என்று அழைக்கப்படுகிறது.
இன்று நடைமுறையில் இருக்கும் காமிராக்கள் வசன உச்சரிப்பு முறைக்கு 1 நொடியில் 24 ப்ரேம்கள் பதிவு செய்கிறது. அந்த 24 ப்ரேம்கள் ஒவ்வொன்றும் பிலிம் கேட் என்ற இடத்தில் கனநொடியில் நின்று விட்டு தான் காட்சியை பதிவு செய்துவிட்டு பின் நகர்கிறது.
பிலிம் மகசின்:
காமிராவுக்கு வெளியே இருக்கும் பிலிம் மகசின் - ஒளி புகாதவாறு அதன் உள்ளே இரண்டு அறைகள் கொண்டது. ஒன்று டேக் - ஆப் (Take-Off) இன்னொன்று டேக் அப் (Take-up) உள்ளே பதிவு செய்யப்படாத (Unexposed) பிலிமை டேக் ஆஃப் (Take-Off) அறையில் வைத்து பிலிம் நுணியை அடுத்த அறையான டேக் அப் சொருக வேண்டும், இங்கே தான் பதிவு செய்யப்பட்ட பிலிம் தங்கும் இடம்.
பிலிம் மகசின் கீழே சுழற்சிப்போல உள்ள பிலிமை மகசின்னோடு காமிரா அறையில் செலுத்த வேண்டும்.
காமிரா அறை:
பிலிம்மானது காமிரா அறையில் உள்ளே சுழல வசதியாக ரோலர்களும் மற்றும் ப்ரேம் நகர கோக்கிகள் உள்ளது. காமிரா அறையில் பிலிம்கேட் என்னும் இடத்தில் நின்று காட்சிகள் பதிவாகும். பிலிம் கோக்கி மூலமாக இழுக்கப்பட்டு பிலிம்கேட்டில் நிற்கும்போது பிலிம் அதிர்வுகள் இல்லாமல் இருக்க அச்சமயத்தில் பிலிம்மில் உள்ள துவாரத்தில் ரேஜிஸ்டிரேஷன் பின் இயங்கி, பிலிம் நகரும்போது விடுவித்துக்கொள்ளும்.
காமிரா அறையில் பிலிம் பிலிம்கேட்டில் நின்று பதிவாகும் அதே நேரத்தில் காமிரா சட்டர் திறந்தே இருக்கும் பிலிம் அவ்விடத்தை விட்டு நகரும்போது சட்டர் ஒளியை பிலிம்மில் பதிவாகாதவாறு மூடிக்கொள்ளும். ஆகையால் ஒவ்வொரு ப்ரேம்முக்கும் அடுத்தற்கும் ஓர் கறுப்புக்கோடு இருக்கும்.
வியு ஃபைன்டர்:
காட்சிகளை பதிவு செய்யப்படும் முன்னும் செய்யும்போதும் காமிரா வாயிலாக நம் கண்கள் பார்க்கப்படும் பாகம்தான் வியு ஃபைன்டர். காமிரா பெட்டி இடது புறத்தில் அமைந்திருக்கும். வியு ஃபைன்டர் பார்க்கும்போது செவ்வகத்திரை போல இருக்கும். அதிலிருந்துதான் லென்ஸ் மூலமாக போகஸ் செய்வதும், காட்சிகளை பதிவு செய்வதற்கு வியு ஃபைன்டர் மூலமாகவே தான் பார்த்து காமிரா இயக்கப்படுகிறது.
இன்று பெரும்பான்மையான நவீன காமிராக்கள் ரிப்லக்ஸ் வியுஃபைன்டர் தான் பயன்படுத்தப்படுகிறது.
காமிராவில் உள்ள சட்டர் கண்ணாடித் தன்மையுடன் 45 டிகிரி ஒளி புகும் பாதையில் பிலிம்மிற்கு முன் வைக்கப்பட்டு அதிலிருந்து நிறப்பிரிகை மூலமாக வியுஃபைன்டரில் காட்சிகள் தெரிய வருகிறது.
டிரைவ் (இயக்கம்):
காமிரா மோட்டார் 12 வோல்ட்டிலிருந்து 24 வோல்ட் மின் சக்தியில் இயக்கப்படுகிறது.
மெட்டி பாக்ஸ் (Matte Box)
லென்ஸ் முன்னர் பில்டர் பொருத்துவதற்கும், லென்ஸ் மீது ஒளிச்சிதறல் ஏற்படாமல் தடுக்கவும் மெட்டி பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
காமிராவும் திரையிடப்படும் முறைகளும்:
இன்று 35 எம் எம், சூப்பர் 35 எம் எம், 16 எம் எம், சூப்பர் 16, சினிமாஸ்கோப், 70 எம் எம் ஆகிய முறைகளில் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.
35 எம் எம்
35 எம் எம் காமிராவும், 35 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது.
16 எம் எம்
16 எம் எம் காமிராவும் 16 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது
சினிமாஸ்கோப் (அகன்ற திரை)
அகன்ற திரை முறையான சினிமாஸ்கோப்பிற்கு 35 எம் எம் காமிராவும், 35 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது. கூடவே அகன்றதிரை முறைக்கு அனமார்ஃபிக் லென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அனமார்ஃபிக் லென்ஸ் அகன்ற பார்வையை 35 எம்எம் பிலிம்மில் சுருக்கி பதிவு செய்யும் தன்மைக் கொண்டது.
தியேட்டரில் அனமார்ஃபிக் லென்ஸ் பொருத்தப்பட்ட திரையிடும் கருவியில் திரையிடும்போது சுருக்கப்பட்ட காட்சி அகன்ற பார்வை கொண்ட காட்சியாக விரிந்து திரை முழுவதும் ஆக்கிரமித்து திரையிடப்படுகிறது.
70 எம் எம் 
இந்த அகன்ற திரைவடிவ முறைக்கு 65 எம் எம் காமிராவும் 65 எம் எம் பிலிமும் பயன்படுத்தப்படுகிறது.
சூப்பர் 16 
சூப்பர் 16 வகை காமிராக்களில் 16 எம் எம் பிலிமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாம் அகன்ற திரை வடிவில் திரையிடுதல் முறைக்கு ஏற்றவாறு காமிராவில் பிலிம் கேட்டில் சில மாறுதல் செய்யப்படுகிறது. இம்முறையில் 16 எம்எம் முறையில் பதிவு செய்யப்பட்டாலும் லாப்பில் அகன்ற வடிவில் பிரிண்டிங் செய்யப்படும்
சூப்பர் 35 எம் எம் 
இன்று பல ஒளிப்பதிவாளர்கள் மிகவும் விரும்பும் ஒளிப்பதிவு முறை சூப்பர் 35 எம் எம் அகன்ற திரை வடிவத்திற்கு சினிமாஸ்கோப் போல அனமார்ஃபிக் லென்ஸ் பயன்படுத்தப்பட வேண்டியதில்லை. சூப்பர் 35 எம் எம் முறையில் குறுகிய அறைகளில் கூட சிறப்பாக இமேஜ் கம்போஸ் செய்ய முடியும். ஸ்பேரிகல் லென்ஸ் பயன்படுத்தப்படுவது, சூப்பர் 35 எம் எம் காமிராவில் அகன்ற வடிவத்திற்கு ஏற்ப பிலிம் கேட் மாறுதல் செய்யப்பட்டு 35 எம் எம் பிலிம், பதிவு செய்யப்பட்ட பின் டிஜிட்டல் நிறத் தேர்வு முறையில் அகன்ற வடிவத்திற்கு பிரிண்ட் செய்யும் நவீன முறை இன்று பலரால் பின்பற்றப்படுகிறது.
இந்தியாவில் பிரபலமாக நடைமுறையில் இருக்கும் காமிராக்கள் ஆரிஃப்பலக்ஸ் (ARRIFlex) ஜெர்மன் நாட்டுத் தயாரிப்பு
35 எம்எம் காமிராக்கள்:
ஆரி (ARRI) III
ஆரி (ARRI) BL4
ஆரி (ARRI) 435
ஆரி (ARRI) 235
ஆரி (ARRI) 535
16 எம் எம் காமிராக்கள்:
ஆரி (ARRI) 16 SR 2
ஆரி (ARRI) 16 SR3
ஆரி (ARRI) 416
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக