செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஃபிலிம் ப்ராஸஸிங்


ஃபிலிம் ப்ராஸஸிங்
சி. ஜெ. ராஜ்குமார் 

ஃபிலிம்மானது பதிவு செய்யப்பட்டவுடன் பாதுகாப்பாக ஒளி புகாதவாறு பேக்கிங் (Packing) செய்யப்படும். பின்னர் ஒளிப்பதிவு குறிப்புகள் எழுதப்படும்.
படப்பிடிப்பு முடிந்தவுடன் அன்றைய தினமே ஃபிலிமை ப்ராஸஸ் செய்வது பாதுகாப்பானது. ஒருவேளை வெளி மாநிலமோ வெளிநாடுகளில் படிப்பிடிப்பு நடந்தால், பதிவு செய்யப்பட்ட ஃபிலிம்மானது குளிரூட்டப்பட்ட அறைகளில் பத்திரப்படுத்த வேண்டும். பிறகு படப்பிடிப்பு முடிந்து திரும்பியவுடன் லாப்பில் ஃபிலிமை ப்ராஸஸிங் செய்து விட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட ஃபிலிம்மானது லாப்பிற்கு வந்தவுடன் அதை டார்க் ரூம் (Dark Room) எடுத்துச் சென்று ஃபிலிமை முழுமையாக சோதனை செய்து ஃபிலிம் சுருள்கள் ஒவ்வொன்றாக இணைப்பார்கள். இணைப்பானது 1200 அடியாக முறைப்படுத்தபடும். பிறகு டேவலப்பிங் அறைக்கு அனுப்பப்படும்.
டேவலப்பிங் பெரும்பாலான லாப்புகளில் ஈ.சி.என். (E.C.N.) 'ஈஸ்ட்மேன் கலர் நெகடிங் ஃப்ராஸஸ்' (Eastman Colour Negative) முறையில் செய்யப்படுகிறது.
'டேவலப்பிங்'ல் பல நிலைகள் உள்ளன.
பீரி பாத் (Pre bath) :
ஃபிலிம்மில் இரு பக்கம் உள்ளது. ஒன்று, இமெல்ஷன் மற்றும் ''கிலேஸ்ட் சைட் (Glazed side). இங்கே ஃபிலிம்மிலிருக்கும் 'கிலேஸ்ட்' பக்கத்தில் ஆன்ட்டிஹலேஷன் லேயர் (Anti Hallation Layer) 'பிரீபாத்தில் அகற்றப்படுகிறது.
'இமெல்ஷன்' பக்கமானது 'ஒளி' பதிவாகும் பகுதி. 'ஆன்ட்ஹலேஷன்' பகுதியானது தேவையில்லாத ஒளியைத் தடுக்கும் பகுதியாகும். ஆதலால் 'பிரிபாத்' முறையில் இப்பகுதியை அகற்றிய பின்னரே (Develope) டேவலப்பிங் ஆரம்பமாகும்.
டேவலப்பர் (Developer) :
இரண்டாம் கட்டமான இங்கு ஃபிலிம்மில் இருக்கும் எமல்சன் பகுதியானது 'டேவலப்பர்' மூலமாக ஒளிப்பட்ட பகுதியான சில்வர் ஆலைட்ஸ் (Silver Hallides) 'மேடாலிக் சில்வராக' (Mettallic Silver) மாற்றப்படுகிறது.
ஸ்டாப் பாத் (Stop bath) :
டேலப்பிங் செய்த பின்பு இக்கட்டத்தில் மேலும் ரசாயண மாற்றம் ஏற்படாமலிருக்க 'ஸ்டாப் பாத்' செய்யப்படுகிறது.
கழுவுதல் (Wash) :
இப்பகுதியில் ஃபிலிம்மானது சுத்தமான தண்ணீரால் கழுவப்படுகிறது.
ப்ளீச் (Bleach) :
ஃபிலிம்மில் இருக்கும் தேவையில்லாத சில்வர் அகற்றப்படுகிறது.
கழுவுதல் (Wash) :
ஃபிலிம்மில் இருக்கும் 'ப்ளீச்' ரசாயனத்தை கழுவுதல்.
ஃபிக்ஸிங் (Fixing) :
இந்த கட்டத்தில் ஃபிலிம்மிலிருக்கும் 'சில்வர்' பிரித்து எடுக்கப்பட்டு கடைசியில் 'டை இமேஜ்' (Dye image) மட்டுமே இருக்கும்.
மீண்டும் ஃபிலிம் கழுவப்பட்டு 'Drying' (டிரையிங்) ஃபிலிம்மில் இருக்கும் தண்ணீர் முழுவதுமாக உறிஞ்சப்படுகிறது. பிறகு உலர வைக்கப்படுகிறது.
இப்போது ஃபிலிம்மானது 'நெகடிவ்வாக' ஆன பின் மீண்டும் சோதனை செய்யப்பட்டு லாப்பில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக