போஸ்ட் ஃபுரடக்ஷன் :-
ரீ - ரிக்கார்டிங் (Re-Recordning) : இறுதிக்கட்ட படத்தொகுப்பான Final Cut முடிந்து பிறகு, கம்ப்யூட்டரிலிருந்து எடிட் செய்யப்பட்ட காட்சிகளை ஒரு டேப்பில் அல்லது DVD-ல் டைம் கோடு (Time Code) உதவியுடன் பிரதி எடுத்து அப்படத்தில் இசையமைப்பாளருக்கு பின்னணி இசை சேர்க்க கொடுக்கப்படும்.இசையமைப்பாளர் அவரது ஸ்டுடியோவில் காட்சிகளின் (Time Code) டைம் கோடைப் பார்த்து ரீல் வாரியாக காட்சிகளுக்கேற்றவாறு, பின்னணி இசையைச் சேர்ப்பார். அதை இறுதிக்கட்ட ஒலிக்கலவைக்கு ஏற்ப டேப்பிலோ அல்லது CD-யிலோ (Audiographer) ஆடியோகிராஃபரின் தேவைக்கேற்ப வேறெந்த வடிவத்திலோ கொடுப்பார். சிறப்பு சப்தம் (Effects) : ஒவ்வொரு காட்சிக்கும் சிறப்பு சப்தம் அவசியமாகிறது ; அந்தந்த காட்சியின் தன்மைக்கேற்ப, அக்காட்சியில் இடம்பெறும் பொருட்களின் சப்தங்கள் உதாரணமாக, தொலைபேசி அழைப்பு, அழைப்பு மணி, காலடி ஓசை, மின்விசிறி சப்தம், மேஜை மீது வைக்கப்படும் பொருளின் ஓசை, ரயில், பேருந்து சப்தம் போன்ற காட்சிகளின் Timingகிற்கு ஏற்றவாறு சிறப்புச் சப்தங்கள் இணைக்கப்படுகிறது.மிக்ஸிங் (Mixing) : திரைப்படத்தின் வசனம், பின்னணி இசை, சிறப்புச் சப்தங்கள் போன்ற ஒலிகள் தனித்தனியாக பல டிராக்குகளாக இருக்கும். இதை ஆடியோகிராஃபரானவர், அக்காட்சியின் தன்மைக்கேற்றவாறு ஒலியின் அளவைத் தீர்மானிப்பார். உதாரணமாக ஒரு காட்சியில் பின்னணி இசை தேவையில்லையென்றால் அதை இயக்குநரின் ஒப்புதலோடு ஃபைனல் மிக்ஸிங்கில் நீக்கவும் முடியும்.இவ்வாறு வசனம், இசை, சிறப்புச் சப்தம் அனைத்தையும் ஒன்று சேர்த்து மேக்னடிக் டேப்பில் (Magnetic Tape) பதிவு செய்யப்படும். பின்னர், அந்த டேப்பை (Sound Negative) சவுண்ட் நெகடிவாக சவுண்ட் லேபில் உருவாக்குவார்கள். அப்படத்திற்கு (Dolby) டால்பி (DTS) டி.டி.எஸ்., போன்ற விசேஷ ஒலி நிர்ணயம் செய்ய வேண்டுமென்றால், இதற்குப் பின்னர் நடைபெறும். நெகடிங் கட்டிங் (Nagative Cutting) : இன்றைய நவீன காலகட்டத்தில் திரைப்படத்தை முன்காலத்தைப் போல பிரிண்ட் போடப்பட்டு மூவியிலோ அல்லது ஸ்டீன் பேக் (Steen Back) கருவியில் எடிட் செய்யப்படுவதில்லை.மொத்தப் படத்தின் படத்தொகுப்பும் கம்ப்யூட்டரிலேயே நடைபெறுவதால் லாப்பிலிருந்து படத்தின் நெகடிவை வரவழைத்து கம்ப்யூட்டரிலிருந்து ஃபைனல் கட் முடிந்த பின், அப்படத் தொகுப்பாளர் 'கட் லிஸ்ட்' (Cut List) எடுத்து அதை வைத்து நெகட்டிவை கட் செய்து இணைப்பார். | ||
சித்திரன் என்ற நான் படித்தையும் படைத்ததையும்... பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன் உங்களிடம்! அசாத்தியம் என்ற சொல் என் அகராதியில் கிடையாது' அசாத்தியம் என்ற ஒன்றே கிடையாது! எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!
செவ்வாய், 1 பிப்ரவரி, 2011
போஸ்ட் ஃபுரடக்ஷன் :-
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக