கலர் டெம்பரேச்சர் மற்றும் ஃபிலிம் வகைகள்
சி. ஜெ. ராஜ்குமார் |
ஃபிலிம் பல ஸ்பீட் A.S.A (American Standards Association) களில் தயாரிக்கப்பட்டாலும் அனைத்து ஸ்பீட் வகைகளிலும் இரண்டு முக்கிய டெம்பரேச்சர்களில் தாயாரிக்கப்பட்டு வருகிறது.
‘T’ ஃபிலிம் மற்றொன்று ‘D’ ஃபிலிம்
‘T’ என்றால் -டங்க்ஸ்டன் (Tungsten) ஃபிலிம்
‘D’ என்றால் -டேலைட் (Day Light) ஃபிலிம்
டேலைட் (D) வகையானது பகல் வெளிச்ச வெப்பத்திற்கு உட்பட்டது.
டங்க்ஸ்டன (T) வகையானது இரவு அல்லது வீட்டில் உள்ளே பயன்படும.
உதாரணத்திற்கு:
குண்டு பல்ப் வெப்பத்திற்கு உட்பட்டது.
ஃபிலிம் தயாரிப்பில் இவ்விரு Kelvin (டிகிரி கெல்வின்) கலர் டெம்பரேச்சர் வெப்பத்திற்கு தயாரிக்கப்படுகிறது.
கலர் டெம்பரேச்சர் எப்படி அறியப்படுகிறது என்றால்?
ஓளிப்படக்கலை ஆய்வாளர்கள் ஒரு இரும்புத்துண்டை(Blackrod) சூடாக்கிக்கொண்டே இருக்கும் போது வெப்பத்தின் அளவு (Kelvin) அதிகரித்துக்கொண்டிருக்கும். அப்போது கருப்பு இரும்புத்துண்டு மெல்ல நிறம் மாறிக்கொண்டிருப்பதைக் கண்டு வெப்பத்திற்கு நிறத்தன்மைக்கும் இருக்கும் தொடர்பினை அறிந்தனர்.
பின்னர் கருப்பு (Blackrod) நிறத்துண்டானது சூடாக சூடாக சிகப்பு நிறமாகவும் மஞ்சளாகவும் ஆரஞ்சு நிறமாகவும் மற்றும் நீல நிறமாகவும் மிகுந்த வெப்பத்தில் மாறும் வெந்நிறத்தோற்றத்தை கண்டு பிடித்து இதற்கு ஒரு வரையறை ஒன்றை ஏற்படுத்தினர்.
அதை கலர் டெம்பரேச்சர( Color Temperature) என்றும் அதை அளவிட டிகிரி கெல்வின் (Kelvin) முறையைப் பயன்படுத்தினர்
கலர் டெம்பரேச்சர் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரித்தனர்:
1. பகல் வெளிச்ச்த்தை -5500K டிகிரி கெல்வின் (ஐந்து ஆயிரத்து ஐநூறு டிகிரி கெல்வின்) என்றும்
2. டங்க்ஸ்டன் செயற்கை ஒளியை -3200K டிகிரி கெல்வின் (மூவாயிரத்து இருநூறு டிகிரி கெல்வின்(Tungsten) என்றும் வகைப்படுத்தினர்.
ஒளிப்படக்கலை ஆரம்பத்தில் புகைப்படம் மற்றும் சினிமா ஒளிப்பதிவு செய்ய இரண்டு முக்கிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி பதிவு செய்தனர்.
ஓன்று இயற்கை ஒளி சூரிய வெளிச்சம்-5500டிகிரி கெல்வின் , மற்றொன்று செயற்கை ஒளி அன்று பெரும்பாலான வெளிச்ச கருவிகளில் (Light) உள்ள பல்புகளில் டங்க்ஸ்டன் ஃபிலமெண்ட் ( Tungsten Filament ) டை பயன்படுத்தினர் (-3200டிகிரி கெல்வின்).
பின்னர், இன்று பார்த்தால் டியூப்லைட் பல வெளிச்ச கருவிகள் (Tube Light) அன்றாட வாழ்க்கையிலும் சினிமாவிலும் வந்துள்ளது. ஆதலால் ஃபிலிம் தயாரிப்பில் இன்றுவரை இரண்டு கலர் டெம்பரேச்சரில் தயாரிக்கின்றனர். ஓன்று ‘D’ என்ற டேலைட் (Daylight) அடுத்து 'T' என்ற டங்க்ஸ்டன் (Tungsten). சினிமா ஒளிப்பதிவுத்துறையில் பயன்படுத்தப்படும் வெளிச்ச கருவிகளும் (Lights) இவ்விரு கலர் டெம்பரேச்சர்களுக்கு ஏற்ப இருவகையான லைட் கருவிகளும் இருக்கின்றன.
ஃபிலிமில் ஸ்பீட் உடன் ’T’ அல்லது ’D’ என்ற முத்திரை இருக்கும்.
உதாரணத்திற்கு:
100 T நூறு ASA ஸ்பீடில் lq;f;];ld; வகையான ஃபிலிம்
ASA 100 D நூறு ஸ்பீடில் டேலைட் (பகல் வெளிச்ச) வகையான ஃபிலிம்
ASA பயன்பாடு
டங்க்ஸ்டன் (Tungsten) தன்மையுடைய ‘T ’ ஃபிலிமை பயன்படுத்தும் போது அதற்கேற்ப டங்க்ஸ்டன் வெப்பத்தன்மையுடைய வெளிச்சத்தைப்பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் விரும்பும் சரியான நிறத்தன்மை, (Natural tone) நேச்சுரல் டோன் கிடைக்கும்.
டங்க்ஸ்டன் ’T’ ஃபிலிமை பய்னபடுத்தி டங்க்ஸ்டன் வெளிச்ச கருவிகளை பயன்படுத்தாமல் வேறு வெளிச்சத்தன்மையுடைய லைட் (Lights) கருவிகளை பயன்படுத்தினால் சரியான நிறத்தன்மை கிடைக்காமல் வேறு நிறம் பதிவு செய்யப்பட்டுவிடும்.
கீழே உள்ள அட்டவணை முலம் ’T’ ’D’ ஃபிலிமுக்கு எந்த வெளிச்சம் பயன்படுத்தினால் என்ன நிறத்தன்மை கிடைக்கும் அதை சரி செய்ய காமிராவில் என்ன பில்டர் (Filter) பயன்படுத்தி சரியான நிறத்தன்மை பெறலாம் என்பதை அறிவோம்.
மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தீர்கள் என்றால் காமிராவில் டங்க்ஸ்டன் (T) ஃபிலிம் பயன்படுத்தி முதல் கட்டத்தை நோக்கி டங்க்ஸ்டன் வெளிச்சத்தை பயன்படுத்தினர். சரியான நிறத்தன்மை (Natural tone) கிடைக்கும்.
இரண்டாவது கட்டத்தை பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் படமாக்கும் போது பதிவு செய்யப்பட்ட படம் முழுக்க நீலத்தன்மை வந்து விடும். இதை சரி செய்ய அதாவது காமிராவில் டங்க்ஸ்டன் ஃபிலிமை பயன்படுத்தி சூரிய வெளிச்சத்திலோ அல்லது அதன் சார்புடைய வெளிச்ச கருவிகளை கொண்ட லைட் ( Light) பயன்படுத்தி படமாக்கும் போது அந்த நீலநிறத்தன்மையை சரி செய்ய சொல்லப்பட்ட பில்டர் 85 (Filter 85 ) படமாக்கும் போதே காமிராவின் லென்ஸ் முன்னர் அப்பில்டர் (Filter) பயன்படுத்தினால் நீலத்தன்மை போக்கி சரியான நிறம் வந்து விடும்.
மேலே உள்ள அட்டவணையைப்பார்த்தால் டேலைட் (D) ஃபிலிம் சூரிய பகல் வெளிச்சத்தன்மைக் கொண்ட ஃபிலிமைக் காமிராவில் பயன்படுத்தும் போது இயற்கை ஒளியில் சூரிய ஒளியாலோ அல்லது சூரிய ஒளித்தன்மையுடைய லைட் (Light) பயன்படுத்தினால் சரியான நிறத்தன்மை (Natural Tone) கிடைக்கும். ஆனால் டேலைட் ஃபிலிம் (Day Light Film) காமிராவில் பயன்படுத்தி டங்க்ஸ்டன் ஒளி (Tungsten Light) காட்சிகளை பதிவு செய்தால் அப்பதிவில் மஞ்சள் நிறமாக மொத்த படம் இருக்கும். இதை சரி செய்ய வேண்டும் என்றால் காமிராவில் டேலைட் ஃபிலிம் இருந்து டங்க்ஸ்டன் ஒளியில் படமாக்கும் போது காமிரா லென்ஸ் முன்னர் ஃபில்டர் எண் 80 (Filter no 80) பயன்படுத்தினால் மீண்டும் சரியான நிறத்தன்மைக்கிடைக்கும்.
பில்டர் (Filter)
பில்டர் என்றால் அதன் பெயருக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒளியை மட்டுமே வடிகட்டி அவ்வொளியை லென்சுக்குள் அனுப்புவதே பில்டர் (Filter) வேலை. கண்ணாடி போல் உள்ள பில்டர் வட்டமாகவோ அல்லது உருண்டை வடிவத்தில் தயாரிக்கப்படும் பில்டர் லென்ஸ் முன்னர் வைத்து பயன்படுத்தப்படும்.
பில்டர்கள் ஒளிப்பதிவாளரின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்படுகின்றன. பில்டர்கள் நிறத்தன்மையை மாற்றுவதற்கும் (Color Filters) உருவம் பல உருவமாய் மாற்றுவதற்கும் மல்டி இமேஐ பில்டர் ( Multi Image Filters ) பயன்படுத்தப்படுகிறது. சாப்ட் பில்டர் (Soft Filters) படமாக்கும் முகமோ அல்லது இடமோ மென்மையாகத்தெரியவைக்க உதவுகிறது.
பில்டர் (Filters)
பில்டர் கண்ணாடியில் ஒளி புகும் தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது. காமிரா லென்ஸ் (Camara lens) முன்னர் வைத்து உபகோகிக்கப்படும் பில்டரானது ஒளியின் தன்மையை மாற்றி அமைக்கும் தன்மை வாய்ந்தது.
ஓளிமாற்றம் அடையும் போது ஒளிப்படத்தின் இமேஐ மெருகேற்றப்படுவதே பில்டர்களின் முக்கிய செயல் பில்டர்கள் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. ஓவ்வொரு பில்டர்கள் ஒவ்வொரு குணாதிசியங்களை கொண்டது. சில பில்டர்கள் நிறத்தன்மை மாற்றி அமைக்கும் தன்மை கொண்டது. ஓளியின் அளவை குறைக்கும் பில்டர்கள் காண்ராஸ்ட் (Contrast) ஒளிப்படத்தில் கருநிறப்பகுதியும் வெளிச்சப்பகுதிகள் உள்ள வேறுபாடு இவ்வேறுபாட்டை மாற்றி அமைக்கும் காண்டராஸ்ட் பில்டர்கள் இப்படி பல வகையான பில்டர்கள் உள்ளன.
Natural Density Filter (N.D) நேச்சுரல்டென்சிட்டி பில்டர்
என.டி (N.D) என்று அழைக்கப்படும் ஒளியை குறைக்கும் பணியைச்செய்கிறது.
ஓளியைக்குறைக்கும் போது நிறத்தன்மையில் எந்த மாற்றமும் அடையாமல் செய்வதுதான் இவ்வகை பில்டர்களின் சிறப்பு.
என்.டி (N.D) பில்டர்கள் மூன்று வகைகளாக உள்ளது.
ND3 என்.டி3 1STOPS
ND6 என்.டி6 2STOPS
ND9 என்.டி9 3STOPS
என்.டி-3 பில்டர் 1STOPS (பகுதி) ஒரு பகுதி வெளிச்சத்தைக்குறைக்கிறது
என்.டி-6 பில்டர் 2STOPS இரண்டு பகுதி வெளிச்சத்தைக் குறைக்கிறது.
ஏன்.டி-9 பில்டர் 3STOPS மூன்று பகுதி வெளிச்சத்தைக்குறைக்கிறது.
போலரைசர் (Polarizer)
வெளிச்சக்கதிர்களானது பல வழிகளில் பிரிவடைந்து செல்கிறது. வெளிச்ச கதிர்களானதை போலரைசர் பில்டர் வழியாகச்சென்றால் ஒரே பாதையில் செல்லும் தன்மை பெற்றுள்ளது.
காமிரா லென்ஸ் முன்னர் போலரைசர் பில்டர் பொருத்தினால் நாம் தண்ணீர், கண்ணாடி போன்றவற்றிலிருந்து ஏற்படும் ஒளிச்சிதறல் (Glar) அகற்றி தெளிவான பிம்பத்தை பதிவு செய்யலாம். சில பாத்திரங்களில் அல்லது பெயிண்டிலிருந்து ஒளிச்சிதறல் ஏற்பட்டு தெளிவல்லாத இமேஐ கிடைக்க வாய்ப்புண்டு அச்சமயங்களில் போலரைசர் பயன்படுத்தினால் தெளிவான படம் பதிவாகும்.
சில குறிப்பிட்ட நேரங்களில் போலரைசர் பயன்படுத்தினால் கூடுதல் நிறத்தன்மை கிடைக்கும். பகல் நேரங்களில் குறிப்பிட்ட கோணத்தில் போலரைசர் பில்டர் வைத்து பதிவு செய்தால் வானம் நல்ல நிறமாக மாற்றம் ஏற்படும்.
ஸாஃப்ட் பில்டர் (Soft Filter)
ஸாஃப்ட் பில்டரானது மென்மையான ஒளிப்படத்தை உருவாக்கும் தன்மை கொண்டது. நடிப்பவர்கள் முகத்தில் உள்ள கோடுகள் போன்றவற்றை அகற்றி அழகாக்கும் தன்மைக்கொண்டது. இவ்வகைப்பில்டர்களை ஒளிப்பதிவாளர்கள் க்ளோசப் ( Close-Up) காட்சிக்கும் தேவைக்கும் ஏற்ப பயன்படுத்துவது வழக்கும்.
பில்டர் குறியீடு (Filter factor)
பில்டரை காமிரா லென்ஸ் முன் பயன்படுத்தும் போது ஒளியின் அளவு குறைகிறது. ஆதலால் லென்ஸ் உள்ள அப்பேரசர் (Aperature) மூலமாக ஒளியின் அளவை கூட்டவேண்டும். எவ்வளவு ஒளி குறைந்துள்ளது? எவ்வளவு ஒளி கூட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்க பில்டர் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
பில்டர் குறியீடு பில்டரின் தன்மைக்கு ஏற்ப 1.2.3.4.5.6 என்று அமைக்கப்பட்டுள்ளது.
பில்டர் குறியீடு 1.5 என்றால் பகுதி (1/2 Stops) ஒளியை லென்ஸ் உள்ள அப்பரேச்சர் அதிகரிக்க ஒளியின் அளவை அதிகரிக்க வேண்டும.
வண்ண ஒளிப்பதிவிற்கு
பில்டர் வகை
(Filter No)
அதன் பயன்கள்
80A D ஃபிலிம் பயன்படுத்தும் போது 'T' டங்ஸ்க்டன் ஒளி 3200 டிகிரி கேல்வின் தன்மை மாற்றுவது
80B D ஃபிலிம் பயன்படுத்தும் போது 'T' டங்ஸ்க்டன் ஒளி 3400டிகிரி கேல்வின் தன்மை மாற்றுவது.
81B மஞ்சள் நிறத்தன்மைக்கு (Yellowish)
82B அடர்த்தியான மஞ்சள் நிறத்தன்மைக்கு (more warming than 81)
குளிர்ச்சியான நிறத்தன்மைக்கு
85 'T' டங்ஸ்டன் ஃபிலிம் பயன்படுத்தி சூரிய ஒளிக்கு 5500 டிகிரி கெல்வின் தன்மை மாற்றுவது
FLB டியூப்லைட் வெளிச்சத்தில் (Fluorescent) படமாக்கும் போது வரும்
நீல-பச்சை நிறத்தை அகற்றுவதற்கு
Netural Density (N.D) அதிக ஸ்பீடு பயன்படுத்தும் (High Speed) போது எந்த நிறமாற்றமும் இல்லாமல் அதிக வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த
CORAL மிதமான சிகப்பு நிறத்தன்மைக்கு கதாபாத்திரங்களின் (Skin Tone)
கூடுதல் நிறத்தன்மைக்கு
FOG பனிமூட்டம் போல ஒளிப்படத்தன்மைக்கு
HAZE மலைப்பகுதிகளில் படமாக்கம் போது உருவாகும் அதிக
நீலநிறத்தை கட்டுப்படுத்த
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக