செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கேமிரா இயக்குவதற்கு முன்பு


கேமிரா இயக்குவதற்கு முன்பு
சி. ஜெ. ராஜ்குமார் 

முக்கிய உபகரணங்கள் - பெயர் பட்டியல்
Spreader (விரிப்பு)
Stand (ட்ரைபாட் ஸ்டேண்ட்)
Head ((ஹெட்)
Camera (காமிரா)
Power line (மின்சார இணைப்பு)
Megazine (மேகஸின்)
Lens (லென்ஸ்)
Filter (ஃபில்டர்)
Film Raw stock (ரா ஸ்டாக்)
Camera Report (காமிரா அட்டவணை)
Film changing Bag (ஃபிலிம் பை)
Empty film can (ஃபிலிம் பெட்டி)
* காமிரா ஃபிலிமோடு பதிவு செய்வதற்கு முன்பு, அதன் இயக்கத்தன்மையை சரிபார்க்க முதலில் ஃபிலிம் மேகஸின் - ஐ பொருத்தாமல் வெறும் காமிராவை மட்டும் இயக்கிப் பார்க்க வேண்டும்.
* குளிர் பிரதேசமென்றால் காமிராவை ஃபிலிம் இல்லாமல் சில நிமிடங்களுக்கு அதிகாகவே ஓட்டிப்பார்ப்து பாதுகாப்பானது.
*ஃபிலிம்- ஐ மேகஸினோடு காமிராவில் பொருத்திய பின்பு காமிரா அறையை மூடாமல் ஒரு சில நிமிடங்கள் காமிராவை ஓட்டிப் பார்த்துவிட்டு பிறகு ஃபிலிமில் ஏதாவது கோடுகள் தெரிகிறதா அல்லது சரியாக கொக்கிகளில் பொருந்துகிறதா என்று பார்த்தபின்பே காமிரா அறையை மூடி காட்சி பதிவு செய்ய தயாராக வேண்டும். இக்காரியத்தை தினமும் ஆரம்ப நேரங்களில் மட்டும் செய்தால் போதும்.
1. Spreader (விரிப்பு)

காமிரா பொருத்தப்படும் ஸ்டேண்ட் (Stand) ஆனது ட்ரைபாட் (Tripond) என்று அழைக்கப்படும். இந்த சாதனத்தின் கால்களின் இறுதியில் கூர்மையாக இருக்கும். அது சமவெளியாக இல்லாத மண் குழிகளில் நிறுத்த உதவும். அதுவே சமவெளி தரையில் வைத்தால் வழுக்கிவிடும், ஆதலால் ட்ரைபாட்டை (Spreader) மேல் வைத்து பயன்படுத்துவார்கள்.
2. ட்ரைபாட் ஸ்டேண்டு (Tripond stand)

காமிரா வைத்து இயக்குவதற்கு பயன்படும் ட்ரைபாட் ன்று கால்கள் கொண்டது. அம்மூன்று கால்களை வைத்து உயரத்தை கூட்டவும் குறைக்கவும் முடியும்.
சராசரியாக ட்ரைபாட் வைத்து இயக்கப்படும் உயரமானது மனிதனின் கண்களை மையப்படுத்தியே உள்ளது.
3. ஹெட் (Head)

காமிராவை ட்ரைபாட் (Tripond) மீது வைப்பதற்கு பல வகையான ஹெட் (Head) பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹெட்டின் முக்கியமான பணி காமிராவில் பான் (Pan) அன்ட் டில்ட் (Tilt) நகர்வுகளை செய்யவும் சில அதிர்வுகளை மட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
ஹெட் வகைகள்
Geared Head
Fluid Head
Crank Head
4. மின்சார இணைப்பு (Power line )
காமிரா இயக்குவதற்கு தேவையான மின் சக்தி 12 வோல்டிலிருந்து 24 வோல்ட் பாட்டரிகள் (Batteries) உதவுகிறது.
படப்பிடிப்பு சமயங்களில் இப்பாட்டரிகள் முபமையாக சார்ஜ் (charge) செய்யப்பட்டிருக்க வேண்டும்,
(குறிப்பு : இரண்டு பாட்டரிகள் அவசியம்)
5. மேகஸின் (Megazine)
பிலிம் மேகஸின் 400 அடி கொண்டவை இரண்டு மேகஸின்கள் அவசியம். ஒன்று ஃபிலிமோடு காமிராவில் பொருத்தி இயக்குவதற்கும்; மற்றொன்று முடிந்தவுடன் உடனடியாகப் பொருத்துவதற்கும்.
6. லென்ஸ் ஃபில்டர்கள்
அன்றைய காட்சிக்கு அல்லது ஒளிப்பதிவாளரின் பயன்பாட்டிற்கு தேவையான லென்ஸ் ஃபில்டர்கள் உள்ளதா என்று சரி பார்த்துவிட்டு அதில் தூசி, கை ரேகை போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்யவேண்டும், அதற்கு தேவையான (லென்ஸ் க்ளினர்) (lens cleaner) பயன்படுத்த வேண்டும்.
7. ரா ஸ்டாக் (Raw stock)

ரா - ஸ்டாக் என்றால் பதிவு செய்யப்படாத ஃபிலிம் பெரும்பாலான ரா ஸ்டாக் 400அடி பெட்டிகளில் வருகிறது.
சினிமா ஒளிப்பதிவிற்கு பயன்படும் ஃபிலிம்கள் நீண்ட நாட்கள் கழித்து உபயோகப்படுத்தக் கூடாது. அன்றைய பணிக்கு அன்றைய தினமோ அல்லது முன் இரவோ வாங்கி, குளிர் அறைகளில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
நாம் பயன்படுத்தப்போகும் ஃபிலிம் ஸ்டாக் வகைகளில் சில அடிகளை படப்பிடிப்பு நடக்கும் முன்பு ஃபாக் டெஸ்ட் (Fog Test) லாப் (Lab) செய்வது பாதுகாப்பானது.
ஃபாக் டெஸ்ட் என்பது ஃபிலிம் சரியான நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளும் முறை
8. காமிரா அட்டவணை (Camera Report)
ஒளிப்பதிவு இயக்குனரின் கீழ் பணிபுரியும் உதவி ஒளிப்பதிவாளர்கள் இக் காமிரா ரிப்போர்ட் எழுதவேண்டும்.
ஒவ்வொரு காட்சிக்கு என்னென்ன
லென்ஸ் (Lens)
ஃபிலிம் (Film)
எக்ஸ்போஸர் (Exposer )
ஃபில்டர் (Filter)
வெளிப்புறக்காட்சியா உட்புறக்காட்சியா (Exterior /Interior)
காமிரா FPSஎவ்வளவு ஃப்ரேம்களில் இயக்கப்படுகிறது
லைட்டிங் (Lighting)
போன்ற தகவல்களை காமிரா ரிப்போர்டில் குறித்துக் கொள்வது முக்கியம். இத்தகவல்கள் படப்பிடிப்பு முடிந்த பின்னர் லாபில் (Lab) கிரேடிங் (Grading) செய்யும்போது ஒளிப்பதிவாளருக்குத் தேவைப்படும்.
9. ஃபிலிம் பை (film changing bag)
கறுப்பு நிறத்தில் இருக்கும் இப் பையானது ஒளி புகாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புற படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே ஃபிலிமை இப்பை (film changing bag) மூலம் ஃபிலிம் மாகஸினுக்கு (Film Magazine) மாற்றம் செய்யலாம்.
10. ஃபிலிம் பெட்டி (Film empty can)
ஃபிலிம் பதிவு செய்யப்பட்டுவிட்ட பின்னர், ஃபிலிம் மாகஸினுள்ளிருந்து ஃபிலிம் பெட்டிக்கு மாற்றம் செய்துவிட்டு; அப்பெட்டியின் மூடியை சுற்றி ஒளிபுகாதவாறு டேப்பை வைத்து சீல் செய்ய வேண்டும்
காமிரா இயக்குவதற்கு மேலும் தேவைப்படும் இதர பொருட்கள்
டெய்லர் டேப் (Measuring Tape)
ஃபோகஸ் காமிராவிலிருந்து கதாபாத்திரங்களின் தூரத்தை அறிந்து லென்சில் ஃபோகஸ் நிர்ணயிப்பதற்கு உதவும்.
கத்திரிகோல் (Scissors)
திருப்புளி (Screw driver)
கறுப்புத்துணி (Black cloth)
வெள்ளை பென்சில் (White pencil)
ரப்பர் பேண்ட் (Rubber band)
மேற்கண்ட பொருட்களை வைக்க இதற்காகவே காமிரா பேக் (camera bag) தயாரிக்கப்படுகிறது.
அதில் பொருட்களை பெயர்ப் பட்டியலோடு வைத்துக் கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக