செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

சினிமாட்டோ கிராஃபி காமிரா


சினிமாட்டோ கிராஃபி காமிரா
சி. ஜெ. ராஜ்குமார் 

கேமராவின் அதி முக்கியமான பாகம் லென்ஸ். கான்கேவ் (concave) கான்வெக்ஸ் (convex) கண்ணாடி இணையும்போது லென்ஸ் ஆக உருவாக்கப்படுகிறது.
லென்சை காமிராவின் முன் பக்கம் பொருத்துவதற்கு தேவையான இணைப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்திற்கு மவுண்ட் (Mount) என்று பெயர்.
லென்ஸ் - இரண்டு முக்கியமான பணியைச் செய்கிறது. ஒன்று ஒளியை தேவைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவதற்கு அப்ரேச்சர் என்றொரு திறப்பு இதில் உண்டு. இதை அட்ஜஸ்ட் செய்வதன் மூலம் லென்ஸ் வழியாக செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
அப்ரேச்சர் ஒளி அளவை மதிப்பீடு செய்ய `T’ அல்லது `F’ என்கிறக் குறியீட்டு எண் பயன்படுத்தப்படுகிறது. லென்சில் குறைந்த எண் இருந்தால் அதுவே அதிக வெளிச்சத்தை காமிராவில் செலுத்தும், அதே லென்சில் அப்ரேச்சரில் அதிக எண் இருந்தால் அதுவே குறைந்த வெளிச்சத்தை கேமிராவிற்கு அனுப்பும்.
உதாரணமாக லென்சில் உள்ள அப்ரேச்சர் எண்கள்:
F/1.8, F/2, F/2.8, F/4, F/5.6, F/8, F/11, F/16, F/22 ( இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்).
மேல் குறிப்பிட்ட எண்கள்– அதிக வெளிச்சத்தை அனுப்பும் குறைந்த ஒளியில் படமாக்க பயன்படுத்தப்படும் எண்.
F/22 குறைந்த அளவு வெளிச்சத்தை அனுப்பும். அதிக வெளிச்சம் இருந்தால் பயன்படுத்தப்படவேண்டிய எண் அளவு..
2) லென்ஸ் ஃபோக்கஸ் (focus) வளைவு உள்ளது அதை திருப்பினால் காமிராவில் வியுஃபைண்டர் வழியாக நாம் எந்த பொருளோ, பகுதியோ தெளிவாக பதிவு செய்ய வேண்டுமோ அப்பகுதி தெளிவாக பதிவு செய்யும் முக்கியமான ஒளிப்பணி ஃபோக்கஸ் ஆகும்.
லென்ஸ் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது, அதை மூன்று வகைகளாக பிரிக்கலாம்:
1) நார்மல் லென்ஸ் (Normal)
2) வைட் ஆங்கிள் லென்ஸ் (Wide Angle)
3) டெலி லென்ஸ் (Tele Lens)
நார்மல் லென்ஸ்
நார்மல் லென்ஸ் என்பது மனிதனுடைய கண்களில் உள்ள படியே இருக்கும் கவரேஜ் ஒட்டிய தொழில்நுட்பத்தோடு தயாரிக்கப்படுகிறது.
ஆங்கிள் கவரேஜ் - படமாக்கம் பரப்பு – 45டிகிரி
35 எம் எம் காமிராவுக்கு – 50 எம் எம் நார்மல் லென்ஸ்
வைட் ஆங்கிள் லென்ஸ்
இவ்வகை லென்ஸ் பயன்படுத்தப்படும்போது காட்சியின் பரப்பு விரிந்து காணப்படும். அதிகமான ஏளீயா கவரேஜ் செய்யும் வல்லமை வாய்ந்தது. ஆனால் நாம் படமாக்கும் இடமோ பொருளோ வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படுத்தும்போது அதனுடைய அளவு சுருக்கப்படும்.
35 எம் எம் காமிராவுக்கு – 40 எம் எம் , 32 எம் எம் , 24 எம் எம் , 20 எம் எம் , 15 எம் எம் ஆகியவை வைட் ஆங்கிள் லென்ஸ் படமாக்கும் பரப்பு 60 டிகிரி முதல் 120 டிகிரி வரை.
டெலி லென்ஸ்
டெலி லென்ஸ் பயன்படுத்தப்படும்போது அக்காட்சியில் உள்ள பொருளோ அல்லது படமாக்கும் இடமோ பெரிதாக (enlarged vision) பதிவாகும். வெகு தூரத்தில் இருக்கும் நடிகர்களோ, பொருளோ இருந்தாலும் அருகில் பார்ப்பது போல பதிவாகும் தன்மை வாய்ந்தது. ஆனாலும் காட்சியின் பரப்பு சுருங்கும் (narrow angle of vision).
35 எம் எம் காமிராவுக்கு :- 75 எம் எம், 100எம் எம் , 300 எம் எம், 400எம் எம் ஆகியவை டெலி லென்ஸ் ஆகும். படமாக்கும் பரப்பு – 30 டிகிரி – 4 டிகிரி வரை.
ஜும் லென்ஸ் (Zoom Lens)
ஜும் லென்ஸ் - வாரி ஃபோகல் லென்ஸ் (Vari focal lens) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் பல லென்ஸ் செயல்பாடுகள் இணைந்தது தான் இதனுடைய தனிச்சிறப்பு ஒரே லென்சில் வைட் ஆங்கிள், நார்மல் மற்றும் டெலி லென்ஸ் இணைந்தே இருப்பது தான் ஜும் லென்ஸ். சில சமயம் நார்மல் லென்சிலிருந்து டெலி லென்சாகவும் இருக்கும்.
திரைப்படத்தில் (ஜும் லென்ஸ்) மூலமாக காமிரா அசைவுகள் வடிவமைக்கப்படுகிறது.
1) Zoom in - ஜும் இன்
2) Zoom Out - ஜும் அவுட்
Zoom in :- குறிப்பிட்ட கதாபாத்திரமோ இடமோ நோக்கி செல்வது.
Zoom Out : - குறிப்பிட்ட இடத்திலிருந்து விலகி அகல பார்வைக்கு வருவது.
சினிமாவில் பயன்படுத்தப்படும் சில பிரபலமான லென்ஸ் வகைகள்:
35 எம் எம் வடிவமைப்புக்கு :- கார்ல் ஜீஸ் (Carl zeiss) உபயோகப்படுத்தும், அல்ட்ரா ஃபைரம் (Ultra prime) லென்ஸ் கம்பெனியின் பெயர், குக் (Cooke).
சினிமாஸ்கோப் - வடிவத்திற்கு உட்படும் அனைத்து தயாரிப்பு லென்ஸ்கள் அன மார்ப்பிக் (Anamorphic) என்ற தொழில்நுட்ப வடிவுடன் தயாரிக்கப்படுகிறது.
கோவா (Kowa) லென்ஸ்
சினிவிஷன் (Cinevision) லென்ஸ்
எலைட் (Elite)
ஆஃக் (Hawk)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக