செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஒளிப்பதிவாளர் திரு. சி. ஜெ. ராஜ்குமார்


சி.ஜெ. ராஜ்குமார் இவர் P.S.G கல்லூரியில் மெக்கானிக்கல் பட்டயப் படிப்பு படிக்கும்போதே ஒளிப்படக் கலை மீது ஆர்வம் கொண்டு கல்லூரியின் மூலமாகவே பல போட்டிகளில் கலந்துக் கொண்டு தேசிய அளவிலான ஒளிப்படப் போட்டிகளில் பரிசுகளை வென்றதோடு உடன் படித்த மாணவர்களையும் ஒளிப்படக் கலை மீது ஆர்வம் கொள்ள செய்தார். பின்னர், திரைப்பட ஒளிப்பதிவை பெங்களூரில் S.J.P. கல்லூரியில் மூன்றாண்டுகள் படித்து முடித்தார்.
பின்னர், ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானிடம் "காதல் கோட்டை" படத்திலிருந்து "பாண்டவர் பூமி" படம் வரை சுமார் பதினைந்து படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.
இவர் ஒளிப்பதிவு செய்த "ஆயிஷா" திரைப்படம் லண்டன் மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. மேலும் தேசிய விருது பெற்ற "ஜானகி விஸ்வநாதன்" இயக்கிய "கனவு மெய்ப்பட வேண்டும்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்து விருதுகளும் பெற்றுள்ளார்.
இவர் ஒளிப்பதிவு செய்த மற்றொரு திரைப்படமான "மண்" இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் எடுக்கப்பட்ட முதல் படம். ரா. புதியவன் இயக்கிய இப்படம் பரவலான பாராட்டைப் பெற்றது. பெரியார் படத்தில் முக்கியமானக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தது இவரே.
சமீபத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த "என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்" எனும் குறும்படம் "பெர்லின் திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் பங்கேற்றுள்ளது. இது வரை வேறெந்த தமிழ் படங்களும் இப்பெருமையை பெற்றதில்லை. மேலும் இப்படம் உலக பல விருதுகளை பெற்றுள்ளது.
நம்முடைய தமிழ் ஸ்டுடியோவிற்காக திரு. சி.ஜெ. ராஜ்குமார் அவர்கள் கற்றுக் கொடுக்கும் இந்த ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தின்பாடத்திட்டங்கள்:
1. ஒளிப்படம் மற்றும் திரைப்படக் கலை வரலாறு.
2. கேமரா வகைகள்
3. பிலிம் தோற்றமும் வளர்ச்சியும்
4. பிலிம் வகைகள்
5. கேமராக் கோணங்களும், அதனை இயக்குதலும்
6. லென்ஸ் வகைகளும், அதன் செயல்பாடுகளும்
மேலும், திரைப்படத் தயாரிப்பின்
முன்னேற்பாடுகள் (Pre-Production)
படப்பிடிப்பு (Shooting)
இறுதிக் கட்டப் படப்பிடிப்பு (Post Production)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக