செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

சினிமா- தோற்றமும் அதன் தொழில் நுட்பமும்


சினிமா- தோற்றமும் அதன் தொழில் நுட்பமும்
சி. ஜெ. ராஜ்குமார் 

சினிமா தோன்றலுக்கு ஆரம்ப விதையான 'புகைப்படக் கலை' மற்ற எல்லாக் கலைகளைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது. காரணம் அது எப்படி உருவானது என்கிற விஞ்ஞானப் பூர்வமான பதிவுகள் நம்மிடையே இருப்பதே.
புகைப்படக்கலைக்கு அடிப்படை தத்துவமான ‘காட்சிப்பதிவு’ அது ஒளியின் மூலமாக எப்படி உருவானது என்பதை 6-ஆம் நூற்றாண்டிலேயே ‘அரிஸ்டாட்லி’ என்ற அறிஞர் மூலமாக உலகிற்கு தெரிய வந்தது. அவர் ஓர் இருண்ட அறையில் முன்னே ஓர் ‘துவாரத்தின்’ வாயிலாக வெளியே இருந்த (Subject) காட்சிகள் இருண்ட அறையில் தலைகீழாக, மங்கலாக உருவெடுத்ததை கண்டார். இதுவே வருங்காலங்களில் உலகின் மிகச்சிறந்த கலைவடிவத்தின் விஞ்ஞான புரட்சிக்கு வித்திட்டது.
பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ‘மங்கலாக’ தெரிந்த அல்லது உருவான ‘காட்சிகளை தெளிவாக்க முயற்சியில் ஈடுபட பின்னர், அச்சிறு துவாரத்தின் ‘லென்ஸ்’ (Lens) பொருத்தப்பட்டபோது இருண்ட அறையில் தெளிவான காட்சி பிம்பம் (Image) உருவானது. அதன் அடிப்படையில உருவானதுதான். ‘காமிரா அப்ஸ்குரா’ (Camera Obscura) -Lens என்பது Convex கண்ணாடியும் Concave கண்ணாடியும் இணைத்து வடிவமைக்கும் போது உருவானது. லென்ஸ் பொருத்தி 1670 ல் ‘ராபர்ட் பாய்லி’ ‘காமிரா அப்ஸ்குரா’ உலகின் முதற் புகைப்படக் காமிராவானது.
இதற்கு முன்னர் Lens இல்லாமல் ‘இருண்ட அறை’ யை ஒரு பெரிய பெட்டி (Box) போன்ற வடிவத்தில் அதன் நடுவில் ஒரு சிறிய துவாரத்தை ஏற்படுத்தி உள்ளே ‘கண்ணாடிக் காகிதம்’ (Tracing Sheet) வைத்து காட்சிப்பிம்பத்தை உருவாக்கினார் ரோம் நகரில் ‘கிர்சர்’ என்ற விஞ்ஞானி. இது நடந்தது. 1646.
‘OBSCURA’ என்றால் லதீன் மொழியில் ‘இருண்டஅறை ‘என்றே பொருள். இருண்ட அறையில் உருவான காட்சிப்பிம்பத்தை’ எப்படி, எதன் மூலமாக பதிவு செய்வது என்று பல நாட்டைச் சார்ந்த பல விஞ்ஞானிகள் நீண்ட வருடங்களுக்கு பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்தன.
ஏறத்தாழ 200 வருடங்களுக்கு பிறகு நவீன புகைப்படக்கலையின் சரித்திரம் தோன்றியது. 1839 ஆம் ஆண்டு ‘டாக்ரே’ மற்றும் ‘வில்லியம் ஹென்றி’ ‘பாக்ஸ் தால் போட்’ இவ்விரு விஞ்ஞானிகள் இன்று நடைமுறையிலிருக்கும் புகைப்படக்கலையின் செயல் முறை தத்துவத்தையும் அறிவித்தனர்.
அவர்கள் காமிராவில் காட்சியை பதிவு செய்து அது ‘புகைப்படமாக’ உருவாக்கத்திற்கு மூன்று முக்கிய முயற்சிகளை உருவாக்கினர்.
1, ‘Silver Halide’ ரசாயனத்தை காகிதத்திலோ, பிலீமிலோ (Film) தடவி (இருண்ட அறையில்) அதை காமிராவில் வைத்து ‘ஒளியால்’ Expose செய்து ஒளி லென்ஸின் வழியாக பிலிம் மீது காமிராவில் படும் போது மாற்றம் ஏற்பட்டு ஒரு காட்சிப்பதிவு (Image) உருவாகி இருப்பதை ‘Latent Image 'என்று கூறுகிறோம்.
2, பிலிமில் பதிவான காட்சி பிம்பத்தை இருண்ட அறையில் Image Developer ரசாயணத்தால் (Photo Chemicals) Develop செய்வது.
3, Developing என்ற முறையை நிறுத்தி அதன் மூலமாக உருவான Image ‘Fixing’ என்ற முறையால் மேலும் தேவைக்கேற்ப உருவான காட்சியை (image) அதற்கு மேலும் ரசாயண மாற்றம் ஏற்படாமல் Image Fixing செய்வது.
இந்த தொழில் நுட்பம் மிகப்பெரிய விஞ்ஞான புரட்சிக்கு வித்திட்டது. புகைப்படக்கலை இதிலிருந்து பெரிய மாற்றத்தை கண்டு வேகமாக, மக்கள் கலையாக உருவெடுத்தது.
அதற்கு முக்கியமானவர் Kodak நிறுவனர் George Eastman ஆவார். ஆரம்பத்தில் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் பல மணி நேரம் ஏதொ பொருளோ அல்லது மனிதர்களோ அசையாமல் இருக்க வேண்டும். அதற்கு காரணம் புகைப்படம் எடுக்க தேவையான ரசாயன பொருட்கள் (Silver Halides) மிகவும் குறைந்த செயல் திறன் கொண்டது. மேலும் ‘காமிரா’ மிகவும் பெரிதாகவும் ஒரு குதிரை வண்டியில் ஏற்றி செல்லும் அளவிற்கும் இருந்தது.
George Eastman: ஒளி மாற்றம் ஏற்படும் ரசாயன (Silver Halide) திறனை அதிகரித்து ‘Film’ என்னும் மீடியத்தில் அதைக் கொண்டு உருவாக்கி காமிராவின் அளவை கைக்கு அடக்கமாக கொண்டு வந்து நீங்கள் காமிராவின் பொத்தானை கிளிக் செய்யுங்கள் மற்றவைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று வாசகத்தை விளம்பரமாக மக்களிடம் புகைப்படக்கலையை கொண்டு சென்றார்.
அதற்கு முன்னர் புகைப்படம் எடுப்பவர்களே போட்டோவை இருண்ட அறையில் கழுவி-Developer மூலமாக Image உருவாக்கி அவர்களே Print செய்து கொள்ள வேண்டும்.
Photo Lab ஐ George Eastman உலகம் முழுவதும் பல இடங்களில் அமைத்தார்.
புகைப்படக்கலையின் ஆரம்பத்தோற்றத்தைப் பற்றி தெரிந்து கொண்ட நாம் ‘சினிமா’ என்னும் மாபெரும் கலையின் உருவாக்கத்தைப் பார்ப்போம்.
உலகின் மாபெரும் சக்திவாய்ந்த கலையான ‘சினிமா’ 19 ஆம் நூற்றாண்டில் பல ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டு ‘லூமியா’ சகோதரர்கள் ஃபிரான்ஸ் நாட்டை சார்ந்த இவர்களால் முக்கிய கட்டத்தை அடைந்து, ‘சினிமா” தொழில் நுட்பம் வடிவம் அடைந்து பிறந்தது. சினிமா என்பது கினிமா (Kinema) என்கிற கிரேக்க சொல்லில் இருந்து பிறந்தது. இதன் அர்த்தம் ‘அசைவு’ சினிமா ‘Persistence of Vision’ அடிப்படையில் இயங்குகிறது. Motion Picture என்றால் காமிராவில் பதிவு மற்றும் Projector மூலமாக தொடர் Still Images மூலமாகவே அசைவுகளை Motion Pic காமிராவில் பதிவு செய்து, Projector மூலமாக திரையில் பார்க்கிறோம்.
இதன் அடிப்படை என்ன என்றால், நம் கண்களில் பார்க்கும் ஒவ்வொரு காட்சிகளை 1/8 அதிகமான நொடி நேரத்துக்கு தக்க வைத்துக் கொள்கிறது. இப்படி ஒவ்வொரு காட்சி விழித்திரையில் ஏற்கனவே பதிவான நொடிக்கு (1/16) அது மறைவதற்கு முன் அடுத்த காட்சி நம் விழித்திரையில் பதிவானால் அவை ‘தொடர் காட்சிகளாக’(Serious of Still Images)) பதிவாகி ஒவ்வொன்றிலும் இன்னொரு பதிவிற்கும் சிறிதாக உள்ள வேறுபாடு அடிப்படையில் ‘அசைவுகளாக’ மாறுகிறது.
இதன் அடிப்படையிலேயே சினிமா காமிராக்கள் உருவானது. ‘சினிமா’ பிறக்க பலர் தங்களுடைய ஆராய்ச்சியை தொடர்ந்தாலும்’தாமஸ் ஆல்வா எடிசன் கண்டு பிடித்த ‘கைடைஸ் கோப்’ (Kinetascope) தான் அசையும் உருவங்களாக துண்டு படங்களை ‘லென்ஸ்’ வழியாக பார்க்க உதவியது.
இப்போது, தொடர் Still காட்சிகளாக பதிவு செய்த பிலிம்களை, படங்களாக ஆக்கும் ‘கருவி’ (Projector) அறிமுகமாகி மக்களிடம் மிகப் பெரிய ஆச்சர்யத்தை உருவாக்கியது. மெல்ல சினிமா ஒரு நிமிடமாக 5 நிமிடமாக பல நாடுகளுக்கு சென்றது.
சினிமா ஆரம்பதத்தில் ஊமைபட்படங்களாகவே அறிமுகமானது. மக்களிடம் சினிமா மோகம் ஆரம்பிக்கும் முன்னர் பலர் அதை ‘விசித்திர பொருளாகவே’ பார்தனர். மெல்ல மெல்ல ‘சினிமா’ தன் தொழில் நுட்பத்தாலும் வளர்ந்தது. அமெரிக்காவில் ‘இரயில் அதன் ஸ்டேசனை” நோக்கி வருவதை திரையரங்கில் திரையிட்டபோது அப்பொது அந்த ரயில் தங்கள் மீது மோத வருகிறது என்று எண்ணி திரையரங்கை விட்டு ஓடிய நிகழ்ச்சி இன்றும் சினிமாவின் தோற்றத்தைப் பற்றி பேசுபவர்களிடம் மிகவும் பிரபலம்.
சினிமா காமிராவானது ஆரம்பத்தில் ஒரு நொடிக்கு ‘16’ ஃபிரேம் (Frame) களை பதிவு செய்யும் தொழிற்நுட்பத்துடனே இருந்தது. ஆதலால் கதாபாத்திரங்கள் கொஞ்சம் இயல்பை மீறி செய்ல்படுவது போலவே இருக்கும்.
பொழுதுப் போக்குத் திரைப்படத்தின் ஆரம்பமே அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ‘எட்வின்.S.போர்டர்’; இயக்கிய ‘தி கிரேட் டிரெயின் ராபரி’. இப்படம் சாகசத்திரைப்படங்களுக்கான அனைத்து அம்சங்களும், பெரிய வெளிப்புற காட்சிகளும் தொடர்ந்து கதை நிகழ்வுகள் கொண்ட திரைப்படமானது. ரயிலில் திருடர்கள் கொள்ளை அடிக்க அத்திருடர்களை போலீஸ் எப்படி பிடிக்கிறார்கள் என்பதே இதனுடைய கதை அம்சம்.
இப்படத்தின் சிறப்பு காமிரா ஒரு காட்சியை பல கோணங்களிலிருந்து படமாக்கும் முறையையும் அதை சரியான தொடரில் படத்தொகுப்பும் -அறிமுகமானது.
‘The great train robbery’ மக்களிடம் மிகப்பெரிய ஆச்சர்யத்தையும், அசையும் காட்சிகள், வேகமாக நகரும் ரெயில்கள், துப்பாக்கிச்சண்டை, என்று உலகில் இருவரை காணாத புதுமையான அனுபவங்களையும் மக்களுக்கு இத்திரைப்படம் கொடுத்தது. சாகசக்காட்சிகள் நிறம்பியிருந்தாலும் அப்படத்தில் சின்ன கதையம்சமும் கலந்தே இருந்தது. ‘கொள்ளையர்கள் ரெயிலில் கொள்ளை அடிப்பதை பார்ப்பது ஒர் ‘சிறுமி’. அச்சிறுமியின் புகாரின் அடிப்படையிலே போலீஸின் துரத்தல் ஆரம்பிப்பது போன்ற சம்பவமும் அன்று ‘சினிமா’ புதிய தளத்திற்கு செல்ல வித்திட்டது.
ஒரு சமூகத்தின் புரட்சியும் யதார்த்த சினிமாவிற்கு ஆரம்ப விதை ‘தி பெர்த் ஆஃப் நேஷன்’ (The Birth of Nation) திரைப்படம். இப்படத்தை இயக்கியவர் சினிமாவின் தந்தையாக கருதப்படும் மாமேதையான ‘D.W. கிரிஃபித்’.
இன்று நடைமுறையில் இருக்கும் சினிமாவிற்கு ‘காட்சி மொழி’ யை உருவாக்கியதாலும் சினிமா நுட்பத்தில் இன்றும் கதைச்சொல்லியான ‘க்ளோசப்’ ( Close-up ) படத்தொகுப்பு முறை, காட்சிகளில் உள்ள வேருபாடுகளான மிட் ஷாட்(Mid Shot), லாங் ஷாட்(Long shot), அதீத லாங் ஷாட்(Ext. Long Shot) போன்ற பல கேமிரா கோணங்களால் ‘ஒரே காட்சியை’ எடுத்து அதை சீராக தொகுத்து சினிமாவிற்கான அடிப்படை ‘காட்சி மொழி ’ (Film Language) உருவாக்கியதாலும் நவீன சினிமாவிற்கான ஆரம்பமாகவே இப்படம் கருதப்பட்டது.
‘D.W. கிரிஃபித்’, தொடர்ந்து பல சிறந்த படங்களை இயக்கினார் அவற்றில் ‘இன் டாலரன்ஸ்’ உலகின் மிகச்சிறந்த சினிமாக்களில் ஒன்று தொடர்ந்து ரசியா ( Russia ) தன் பங்கிற்கு சினிமா வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது. புடாவ்கின் (Pudavkin) இன்ஸ்சன்டைன்’ ஆகிய கலைஞர்கள் அன்றைய அரசியல் சூழலை மையமாக வைத்து திரைப்படங்களை உருவாக்கினார், இவர்கள் படத்தொகுப்பில் பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டார்கள் குறிப்பாக ‘ மதர்’ (Mother) திரைப்படத்தில் ஒருவன் நீண்ட நாட்களாக சிறையிலிருக்கும் அனுபவத்தையும் அவனுக்கு நாளை சிறையிலிருந்து ‘ விடுதலை’ என்ற செய்தி கூறப்படும் போது அவனுடைய உணர்வுகள் எப்படி இருக்கும்? அவனுடைய முகபாவங்கள் மூலமாக அவனுடைய உணர்வுகள் சொல்லாமல், (Montage ) மான்டேஜ் காட்சி உத்திகளை பயன் படுத்தினார் இயக்குனர். அசையும் மரங்கள் அப்படியே Freeze ஆகி மீண்டும் அசைவது. கடல் அலை பாறை மீது பட்டு Freeze ஆகி மீண்டும் அலையடிப்பது இப்படி திரைப்பட பார்வையாளர்களுக்கு சினிமாவில் Montage) மான்டேஜ் என்றால் படத்தொகுப்பின் மூலமாக புதிய சிந்தனைகளையும் காட்சி மொழியையும் உருவாக்கினார்.
சினிமாவில் ‘ஒலி இல்லாத காலகட்டத்தில் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றனர்.அதில் உருவான மாபெரும் கலைஞன் ‘சார்லி சாப்ளின்’ அவருடைய படங்களில் நகைச்சுவை காட்சிகளோடு மனதை தொடும் ‘ மெலோ டிராமா” அடங்கிய சிறந்த கதைகளும், காட்சிகளும் இருந்தன.அவரே உலகம் முழுவதும் பிரபலமாகி நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் மாபெரும் கலைஞர் ஆவார்.
சினிமா மௌனப்படங்களாக தொடர்ந்தாலும் அன்றைய சூழலில் நாடகமே பிரதான பொழுது போக்கான சினிமாவிற்கு சவாலாக இருந்தது.
1927- ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் தயாரித்த ‘ஜாஸ் சிங்கர்’ (Jaaz singer)– முதல் பேசும்படமாக வந்தது- 1929 ல் ‘ஆன் வித்தி ஷோ’ முதல் வண்ணப்படமாக வெளிவர சினிமா அசுர வளர்ச்சியடைந்தது ‘ஒலி’ அமைப்புடன் வசன உச்சரிப்பை பதிவு செய்ய சினிமா காமிராவில் நொடிக்கு 24 Frame என்ற அடிப்படைக்கு மாற்றம் கண்டது.
சினிமாவின் அடிப்படை தொழிற் நுட்பமும் அதைப் பற்றிய செயல்பாடுகளும் இனி வரும் வாரங்களில் படிப்போம்
1. ஃபிலிம்- அடிப்படைத்துவம்
2. புகைப்படக்காமிரா- செயல்பாடுகள்
3. சினிமா காமிராவும் அதன் லென்ஸ் பற்றிய விரிவான கட்டுரை
4. காமிரா கோணங்கள்
5. காட்சிகளின் வகைகள் (Different types of Shots
6. 35 MM / Cinemascope / 70 MM / 16 MM பற்றிய குறிப்புகள்
7. லைட்டிங் / கருவிகள் / கலர் டேம்பர்ரேச்சர் ( Colour Temprature)
8. படப்பிடிப்பிற்கு முன் தயாரிப்பு பணி ( Pre Production)
9. படப்பிடிப்பு ( Shooting)
10. இருதி கட்டப் பணி ( Post Production)
சில முக்கியமான வரலாற்றுப் பதிவுகள் 1900 - 1910 வரை
1. Sharkey மற்றும் Jeffries என்ற குத்துச் சண்டை வீரர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியை நான்கு மூவி கேமரா, நானூறு (400) விளக்குகளைக் கொண்டு படமாக்கிய நிகழ்ச்சியை "British Journal" என்ற பத்திரிகை ஒளிபரப்பியது. இதுவே அதிக நீளமான படக்காட்சியாக லண்டனில் அறிவிக்கப்பட்டது.
2. Eugunelauste தனது ஆப்டிகல் சௌன்ட் ரெகார்டிங் (Optical Sound Recording) அமைப்புக்காக காப்புரிமை பெற்றார்.
3. கட்டிட வல்லுநர் மாலோ (Malo) வடிவமைத்த நிரந்தர சினிமா அரங்கம் பாரிசில் வின்டெர் சர்க்கஸ் (Winter Circus) எனுமிடத்தில் உருவாக்கப்பட்டது.
4. Louis Lumiere வண்ணப்படங்களை ப்ராசெஸ் (Process) செய்யும் முறைகேற்ப மூன்று வண்ண ஸ்க்ரீன் சிஸ்டத்தை உருவாக்கினர்.
5. 1907 ல் திரைப்படங்களை திரையிடும்போது காட்சிகளுக்கிடையில் டைட்டில் கார்ட் போடும் முறை ஏற்படுத்தப்பட்டது. இது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
6. திரையரங்குகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இத்தாலியில் 500 திரையரங்குகளும், இந்தியாவில் ஒரு திரையரங்கும் உருவானது.
7. தணிக்கை முறை முதன்முதலாக சிகாகோ நகரில் போலீசாரால் கொண்டுவரப்பட்டது.
8. இங்கிலாந்தில் "Kinemathographer Film Maker Association" உருவானது.
9. 1906 ல் உலகின் முதல் முழு நீளத் திரைப்படமான "Story of the Gilli Gang" எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடக்கூடியது.
10. 1910 வரை சினிமாவில் இயக்குனர்களின் பங்கு முக்கியமாக இருந்தது. 1920 களில் அமெரிக்காவின் சினிமா படப்பிடிப்பு முறையும், அத்துறையின் வளர்ச்சியும் உலகம் முழுதும் பரவத் தொடங்கியது. ஒரு வருடத்தில் 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக