கேமிரா இயக்குவதற்கு முன்பு
Start காமிரா.... முன்பு ஒளிப்பதிவு இயக்குனர் எழுத்தாளரின் வார்த்தைகளை, இயக்குனரின் கற்பனைக் கேற்ப காட்சிகளாய் பதிவு செய்யும் முன்பு அன்றைய தினம் எவ்வளவு காட்சிகள், அதற்கேற்ப ப்லிம் °டாக் வெளிச்ச கருவிகள், காமிராவின் இயக்கம் மற்றும் லைட் பில்டர்கள் இப்படியான அடிப்படை விஷயங்களை தேர்வு செய்து விட்டு இயக்குனரின் திரைக்கதை முழுவதுமாக உள் வாங்கி காமிராவை இயக்குவதற்கு முன்பு இங்கே சில முக்கியமான கேள்வி அட்டவணையை ஒளிப்பதிவாளர் தன் மனதில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். * இயக்குனர் காட்சியை விளக்கிய பிறகு ஒளிப்பதிவாளருக்கு தோன்ற வேண்டிய முக்கியமான இக்கேள்வி முறை ஓர் சிறந்த காட்சிபடுத்தும் வித்தைக்கு பயிற்சியாகும். * காமிராவை movement-ல் கதாபாத்திரங்களுடன் ஒன்றி அவர்களின் அசைவுகளுக்கு ஏற்ப பின் தொடர்கிறதா? * Establishment-ல் காமிரா எப்படி “புவியியல் அமைப்பு” மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த கோணத்தில் பார்வையாளர்களுக்கு பதிவு செய்து காட்ட வேண்டும்? * காட்சியில் டிஜிட்டல் மூவ்மெண்ட் அமைக்கும்போது எந்த தருணத்திலிருந்து நகர்வை (movement) ஆரம்பிக்க வேண்டும், பிறகு மூவ்மெண்டில் அருகாமைக்கு செல்கையில் பார்வையாளரின் பார்வையில் பொருளை நோக்கியா அல்லது கதாபாத்திரத்தை நோக்கியா அந்த நகர்த்தல் முடியவேண்டும்? * காட்சியில் காமிரா ( truck-back) பின் நோக்கி பயணிக்கும்போது அது கதாபாத்திரத்தின் பார்வையை விட்டு அகலப் பார்வைக்கு எப்போது செல்லவேண்டும்? * காமிரா நகர்கையில் காட்சியில் தேவையான பிற முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்துகிறதா? * காமிராவின் மூவ்மெண்ட் புதிய கதாபாத்திரங்களின் புதிய கோணத்தில் பிரேமுக்குள் compose செய்வதற்கா? * காட்சியில் காமிரா எப்பொழுது (character point of view) கதாபாத்திரத்தின் பார்வையில் செயல்படவேண்டும். * பார்வையாளர்களுக்கு காட்சியில் காமிரா வாயிலாக கதாபாத்திரத்தின் தன்மையை நேரடியாக எந்த ஷாட்டில் தொடர்பு ஏற்படுத்த போகிறோம்? * ஒரு காட்சியை பல (character point of view) மூலமாக பதிவு செய்யும்போது, அதில் காமிராவின் உயரம் மாறுபடுகிறதா? எவ்வாறு அவ்வுயரம் அந்த பார்வை தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது? * காமிரா அசைவுகளை (smooth) மூவ்மெண்டில் அமைப்பதா அல்லது (hand held camera) வகையான சில அதிர்வுகளோடு மூவ்மெண்டை அமைக்கப் போகிறோமா? * மேலே குறிப்பிட்ட அனைத்து கேள்விகளும் ஒளிப்பதிவு செய்யும் முன்பு இயக்குனரின் திரைக்கதைக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவாளர் தன் மனதில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். | ||
சித்திரன் என்ற நான் படித்தையும் படைத்ததையும்... பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன் உங்களிடம்! அசாத்தியம் என்ற சொல் என் அகராதியில் கிடையாது' அசாத்தியம் என்ற ஒன்றே கிடையாது! எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!
செவ்வாய், 1 பிப்ரவரி, 2011
கேமிரா இயக்குவதற்கு முன்பு-
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக