திங்கள், 1 ஆகஸ்ட், 2011

வாகை விருது


        கல்வியில் சாதித்த மாணவர்களுக்கு எத்தனை எத்தனையோ விருதுகள் வழங்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் கற்பித்த ஆசிரியருக்கோ , ஒத்துழைத்த பெற்றோர்களுக்கோ விருது என்பது யாரும் எதிர்பாராத ஒன்று. அப்படி ஒரு விருதளிக்கும் கலைவிழாதான் காஞ்சிபுரத்தில் அண்ணா அரங்கில் 31.07.2011 மாலை 6மணிக்கு நடந்தது.

       விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்து மாணவர்களுக்கு விருது அளித்தவர், திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இவர் நிகழ்ச்சியை பாராட்டியதோடு இந்த நிகழ்வில் காஞ்சி முத்தமிழ்ச்சங்கம் சார்பாக கொடுத்த காஞ்சி கவியரசு என்ற விருதையும் பெற்றுக்கொண்டு நாசூக்காக மறுத்துவிட்டார், பட்டப்பெயர் வேண்டாம் பட்டமும் வேண்டாம் என்று இருக்கின்றேன் என்று வலியுறுத்தினார். மேலும் வாகை(வெற்றி பெற்றோர் சூடும் மலர்) விருதை பள்ளியில் முதலிடம் பெற்ற மாணாக்கருக்கு வழங்கி பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் சால்வை அணிவித்தார்.
           நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றவர் காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ திருநாவுக்கரசு ஆவார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ கணேசன், செங்கை தொகுதி எம்.எல்.ஏ முருகேசன் போன்றோர் வந்திருந்தனர்.
            தமிழ்க் கலைகளை நிகழ்ச்சியில் காணமுடிந்தது. நடனப்பள்ளி மாணவிகள் பரத நாட்டியத்தை பல்வேறு பாடல் மூலம் அரங்கேற்றினர். தப்பாட்டமும் கருத்துமிக்க பெண்கள் விழிப்புணர்வுப் பாடலும் மேடையினை விழிப்புணர்வுமிக்க ஊடகமாக்கின.
         இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து நடத்திவந்த முத்தமிழ்ச்சங்க நிறுவனர்&இயக்குநர் லாரன்ஸ் அவர்கள், தமிழைக்குறித்து ஓர் பாடலைப் பாட ஆரம்பித்ததும் விழா ஆரம்பித்தது. பாடலுடன் குத்துவிளக்கும் ஏற்றப்பட்டது.
ஆடல் பாடல் கொண்டாட்டம் என்று இருந்தாலும் தமது சொந்த ஊரிலே காஞ்சி மண்ணில் கலைத்துறையில் அறிஞர் அண்ணாவிற்கு அடுத்து சாதித்து நிற்கும் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் கரங்களில் பள்ளி மாணாக்கர் , பெற்றோர் , ஆசிரியர், மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் போன்றோர் விருது வாங்கியதை பெருமையாக பேசியது காஞ்சி மண்.

பின் குறிப்பு: இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து இந்த விழாவை தனி ஆளாக அலைந்து திரிந்து ஸ்பான்சர் பிடித்து நடத்தியவர் நண்பர் லாரன்சு அவர்கள். ஆனால் மேடையை அலங்கரிக்கும் தமிழ்வாதிகளும் மேடைப்பேச்சு மட்டுமே கலையாக கொண்டுவாழும் அரசியல்வாதிகளும் காஞ்சி முத்தமிழ்ச்சங்கத்தின் மூலம் பெருமையடைந்தனர். ஆனால் இளையோர்களுக்கான களத்தை அடையாளப்படுத்துவது எப்போது? லாரன்சு ஆர்வமுடன் இருக்கிறார். உதவ அல்லது இணைய
சூ.லாரன்சு, முத்தமிழ்ச்சங்க இயக்குநர், காஞ்சிபுரம்.1
9382821978. Muthamizhsangam@gmail.com 

6 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அருமை ,பகிர்வுக்கு நன்றி நண்பரே .

    பதிலளிநீக்கு
  3. வாகை சூடிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வரவேற்கிறேன் ராஜராஜேஸ்வரி அவர்களே...

    பதிலளிநீக்கு