திங்கள், 8 ஆகஸ்ட், 2011

ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

             அரசியலுக்கும் திரைப்படத்துறைக்கும் இணைபிரியா உறவு உண்டு.    அதனால் தான் முதல் அமைச்சராக அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் வந்தார்கள், வென்றார்கள் , மக்கள் பணத்தை தின்றார்கள்… தின்றுகொண்டே இருக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் நம் ரசிக சிகாமணிக்கள் திரைப்படத்தைப்பார்த்து ரசிப்பதைவிட , அந்த நடிக்கருக்காக தீக்குளிப்பதையும் , நடிகைக்காக கோவில் கட்டுவதையும் அதிக கவனத்துடன் செலுத்தினார்கள். தனக்கு ஒரு தலைவன் வேண்டும் என்றும் தன் கோபத்தை ஒருவர் திரையில் தணிக்கிறார், தவறு செய்தவனை ஓங்கி அரைய வேண்டும் என்று நினைத்த போது தன் தலைவன் அவனைத்தூக்கி பந்தாடுகின்றானென்றும் நினைத்து பெருமிதப்படுகிறான்.
        இதனைப்போன்ற நிகழ்வுகளே ரசிகனை பித்தனாக்கி ரசிகர் மன்றம் வைத்து, போஸ்டர் அடித்து , முதல்காட்சிக்காக பணம் செலவழித்து, திரையில் தோன்றியதும் மலர் தூவி ஆரவாரம் செய்துகொண்டும் இருக்க காரணமாகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் உடல் நலம் பெறவேண்டும் என்ற ரசிகர்களின் வெளிப்பாடாக இருந்த யாகம், அன்னதானம் , வேண்டுதல் போன்றவையும் பார்த்துகொண்டு இருக்கிறோம். சிலர் ரசிகர்மன்றம் என்பதனை மாற்றி நற்பணிமன்றம் என்ற பெயரில் பெயரளவில் மாற்றம் கொண்டு செயலளவில் துற்நாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

தனது பிள்ளைகளுக்கு புத்தகம் வழங்கவில்லை, ஆனால் தேர்வு நடக்கிறதே எப்படி என்று சிந்திக்க நேரம் இருக்குமா ரசிகர்களுக்கு?

முதல்நாள் பேனர் வைத்தும், அதிக விலைகொடுத்தும் படம் பார்க்கும் ரசிகர்கள் தங்களது சொந்த சகோதர சகோதரிகளுக்கு
குறைந்த விலையிலாவது ஏதாவது செய்திருப்பார்களா?

பாலாபிஷேகம், திரையில் வந்ததும் மலர்தூவுவது , படப்பெட்டியை மேளதாளத்துடன் கொண்டுவரும் ரசிகர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் முதியோர்களையும் ஆதரவற்ற பிள்ளைகளையும் நினைத்துப்பார்த்திருப்பார்களா?

இளைஞர்களின் சக்தியானது அணு போன்றது, இந்த சக்தியைக் கொண்டு ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் நம் சமுதாயத்தை.

சமீபத்தில் அஜீத் தனது ரசிகர்மன்றத்தை கலைத்தார். காரணம் எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் தற்போது ஒரு காரணம் சொன்னார்….

ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!

இவரின் இந்த பதிலை மற்ற தலைவர்கள் விஜய், ரஜினி, கமல், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லை ஏற்காமல் ரசிகர்களைக் கொல்வார்களா?
- சித்ரவேல் 

6 கருத்துகள்:

  1. கண்டிப்பா ஏற்று கொள்ள மாட்டார்கள், என்ன இவங்க பொழப்பு பாதிக்குமே அதனால

    பதிலளிநீக்கு
  2. ஆமாங்க அய்யம்மாள்....! சரியா சொல்றீங்க.

    பதிலளிநீக்கு
  3. i like this post very much............they will never accept?????????????????????congrats

    பதிலளிநீக்கு
  4. சின்ன வேண்டுகோள், hightlighting இனைக் குறையுங்கள். அது உங்கள் பதிவுகளை distract செய்கிறது.

    பதிலளிநீக்கு
  5. அத்தோடு word verification இனை எடுத்தால் என்ன ?

    பதிலளிநீக்கு