வியாழன், 4 ஆகஸ்ட், 2011

சிம்பு தொலைக்காட்சி விரைவில்…


செய்தி : சிம்பு தொலைக்காட்சி விரைவில்…  
விசித்திர லொல்ளு பார்வை: chithiran-vel.blogspot.com
விரைவில் வம்பு தொலைக்காட்சி சாரி சாரி… சிம்பு தொல்லைக்காட்சி… அய்யோ மறுபடியும் சாரிங்க….., சிம்பு தொலைக்காட்சி விரைவில்… அதுவும் இந்த வருட இறுதிக்குள்ளாம். அட என்ன கொடுமைடானு நினைச்சி , குளிக்கறப்ப அழுதுகொண்டிருந்த சில பேரிடம் கருத்து கணிப்பு நடத்துனப்ப…
நடத்துனப்ப…
 அட கீழ நீங்களே படிங்க, என்னால முடியல….

கருத்து கண்ணப்பன்: நம்ம டி ஆர் நல்லவருங்கோ, அரசியல்வாதி எல்லோரும் டிவி வச்சி கட்சி பெருமைய போடுறப்ப இவரும் ஆரம்பிக்கறது மக்கள்ட வெறுப்பாதாங்க சே..சே.. வரவேற்பாதான் இருக்கும்னு தோணுதுங்கோ.
திருட்டு முன்னேற்ற கழகத்தின் தலைவர் : கழகத்தின் மூலம் தொழில் கற்று , சினிமா சறுக்கியபோது அரசியலில் எழ நினைத்த என் ஆறாத உயிர் ராஜேந்திரின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். என்னை ஆழ்துயரக்கடலில் தள்ளி என் கட்டுமரத்தை பிடுங்கி  வேறொரு திருட்டு கழகத்திற்கு கொடுத்த மக்களுக்கு தாய்கழகத்தின் மூலம் கொடுக்கும் தண்டனையாக இருக்கலாம்.
கேப்டன் விசிறிகாந்த் (பரிசல் துறை): தமிழ்நாட்டுல மொத்தம் (ஒன்னு ரெண்டு இருபத்தி மூனு…. அட எண்ணிட்ருக்கறதுக்குள்ள கேப்டன் சண்டை சேனல் வந்திடும்) சேனல் இருக்கு இதுல கட்சிக்காரங்க அவங்க கட்சியில் ஊழல் இல்லைனு சொல்றதுக்காக (அதுல நான் இல்லைங்க)  வச்சிருக்குற சேனல் அதிகம். ஆனா தனது மகன ஒரு எம்.ஜி.ஆர் ஆக மாத்த நினைச்சி ஒரு சேனல் ஆரம்பிக்கிறது எனக்கு பயமா இருக்கு, ஏன்னா நானே அவர் பேர சொல்லிதான் பொழப்ப நடத்துறேன். அட பரிசல் ஓட்றத சொல்றேன்பா…

சுவாமி நித்திகுட்டி : பரவால்ல.. தேசத்துக்காக செய்ற நல்லவிஷயம் தான் ஆனா இதுல என் ஆன்மீக நிகழ்ச்சிய அதாங்க பூச்சாண்டி வேலைய காட்டுனா நான் பச்சைகொடி காட்டி , ஓ எங்கிட்ட காவி தான் இருக்குல, சரி காவிகொடி காட்டி தொடங்கி வைக்கிறேன் கூடவே சிஷ்யை ரஞ்சிகுட்டியும் வருவாங்க.

zoo அதிகாரி :  மக்கள் 40சதவீதம் பயப்படற மாதிரி நடக்க போகுதுங்கறதுக்காக , அவர உடனடியா அடைச்சிவைக்கலாம் நு யோசிக்கிறேன். அதுக்குள்ள கொரில்லா சேட்டை ஆரம்பிச்சிடுவாரோனு பயமா இருக்கு…!
ரசிகன் : டேய் டண்டணக்கா… டணக்கணக்கா… கொதிக்க வச்ச தண்ணில வர்றது ஆவி… எங்க தலைவர் ஆரம்பிக்க போறார் சிம்பு டிவி…! ஓடிப்போங்கடா எங்கயாவது தாவி..!
ஒரு பதிவர் : அட போப்பா எத்தன தடவதான் யூடியூப் ல பாக்குறது. ஒரு மாற்றத்துக்கு அவரே சேனல் ஆரம்பிச்சா முழுக்க முழுக்க பாத்து சிரிக்கலாம். ஆனா பசங்க இல்லாதப்பதான் பாக்கனுமே. பயந்துடுச்சிங்கண்ணா… பள்ளிக்கூடம் போகமுடியாதுல, ஏதோ இப்பதான் பாடபுத்தகம் இல்லாம உருப்படியா பசங்க படிக்குறாங்க அத கெடுக்க கூடாது நு ஒரு நல்ல எண்ணத்துல தான் சொன்னேங்க.

இப்படி பலபேர் சொன்னாலும் நாமும் சீரியல் பாத்து அழுதது போதும் இனி  சிம்புவின் லீலைகள் சாரிங்க மறுபடியும் மறுபடியும்.. சிம்புவின் வேலைகள் எல்லாமே புரோகிராமா பாக்க காத்திருக்கலாம். டிஆரின் அடுக்கு மொழிவசனத்தோடு காமெடி பண்ணாலும் வடிவேலு சந்தானம் போன்றோர்க்கு அடுத்தபடியா நல்ல பொழுதுபோக்குதானுங்கோ...!
ஒரு சந்தேகம்... இது காமெடிசேனலா... இல்லை சிம்பு சேனலா. ஓ ரெண்டும் ஒண்ணுதானு சொல்றீங்களா... !




3 கருத்துகள்:

  1. சொம்பு தொலைவு காட்சியும் வருமுங்கோ! எங்கும் போயிடக்கூடாது. அதுக்காகத்தான் இவவோளோ தொல்லைக்காட்சிங்க

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பா நண்பரே... எல்லாத்தயும் தாங்கும் இதயமும் வெணும்

    பதிலளிநீக்கு
  3. பாடப்புத்தகம் இல்லாமல் உருப்படியாகப் படிக்கும் பிள்ளைகளுக்குப் பாராட்டுக்கள்.

    புத்தகங்களே ஜாக்கிரதை!
    பிள்ளைகளைக் கிழித்துவிடாதீர்கள்.

    பதிலளிநீக்கு