சனி, 6 ஆகஸ்ட், 2011

பாமாக வின் அதிரடியான காமெடி அறிவிப்பு


பாமாக வின் அதிரடியான காமெடி அறிவிப்பு ஒன்றை நண்பர் ராமதாசு வெளியிட்டார். அது இன்னானா…..
"தமிழகம் முழுவதும் பா... சார்பில் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.
அட படிச்சதும் சிரிச்சா என்ன அர்த்தம்? ஏன் அய்யா டாஸ்மாக் வேணாம் அடிக்கணும்ணு அவ்ளோ கோவமா சொல்றாங்கணு யோசிக்க வேண்டாமா? திருட்டுக் கழகங்களுடன் கூட்டணி இல்லை நாங்க தனியா திருட கத்துக்கிட்டோம் மக்கள் வாய்ப்புக்காக நாங்க காத்துக்கிட்டு இருக்கோம் என்று ராமதாஸ் சொல்றப்ப அவங்க மாறி மாறி குடிமக்களை உருவாக்கி வர்றத எதிர்க்கிறதா எப்பவும் போல விடற டுபாகூர் தான் இதுவும். ஒரு கற்பனையாக இவங்க திருவண்ணாமலை பக்கம் போய் டாஸ்மாக் எல்லாம் அடிச்சி நொறுக்கினா… நொறுக்கிய பாட்டாளிகளுக்கு மாலையில் சர்க்கு பார்ட்டி மாவட்ட செயலாளர் வைக்காம இருப்பாரா?
இவரது கட்சியில் குடிப்பவர்கள் அனைவரையும் நீக்க சொன்னோம்னா… அய்யா கதி ? யாரும் இல்லணு தெரியும், அவருக்கும்... படிக்கிற உங்களுக்கும்.... நம்ம பாட்டாளி மக்களுக்கும்.
2011 ல் பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெறுவோம் விரைவில் ஆட்சி அமைப்போம் என்றெல்லாம் பீட்டரோ பீட்டர் விட்ட நண்பர் ராமதாசு 2016ல் பாமகா ஆட்சி அமைக்கும் என்று தனது பீட்டரை தொடர்ந்துள்ளார்.
சில மக்களை ஏமாற்றும் செய்திகள்
திருவண்ணாமலை: தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டேன் என்பதை நிரூபிக்க தீக்குளிக்கவும் தயார் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்
தமிழகத்தில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தக் கோரி பாமக சார்பில்  தமிழகத்தின் வட பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. டாக்டர் ராமதாஸ், திண்டிவனத்தில் போராட்டம் நடத்தி கைதானார். பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.
அய்யா… இலவசமா தினமும் ஒரு கிராமத்துல வைத்தியம் பாருங்க மருத்துவர் ராமதாசா மக்கள் கிட்ட போகலாம்… பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாசா பீட்டர் விடாமலும், தன் மகனுக்காக உழைக்கும் அரசியல்வாதியா இல்லாமலும் இருங்க… ஆட்சிய மக்களே கலைச்சி உங்கள முதல்வரா ஆக்குவாங்க… ..
ஆனால் முடியுமா நம்ம நண்பர் ராமதாசு அவர்களால….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக