தாய் மொழி வழிக்கல்வி சிறந்ததா? அந்நிய மொழிவழிக்கல்வி சிறந்ததா? இந்த மாதிரி பேசிட்டு இருந்த நம்ம ஆளுங்க இப்ப… அய்யா ஏதாவது ஒரு கல்விய குடுங்கய்யா, எங்க புள்ளைங்க படிச்சா போதும்ணு கெஞ்ச வச்சிட்டாங்க இந்த அண்ணா திராவிட கழக மாமேதைகள். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் எதிர்கட்சியாக இருக்கும் அண்ணன் விஜயகாந்த் என்னடானா, அவங்க பையன ஹீரோ வா ஆக்க முயற்சிபண்ணிட்டு இருக்காராம். என்னக் கொடுமைடா சாமி! புரட்சிக்கலைஞர் என்று திரைப்பட ரசிகர்களால் அழைக்கப்படும் ஓர் திரைப்பட நடிகர் கட்சி ஆரம்பித்து , கூட்டணி வைத்து , எதிர்கட்சியாக வந்து மக்கள் பிரச்சனையைப் பற்றி சிறிதளவும் கவலையின்றி தனது கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சுயநலமான தன்மை சிந்திக்க வைக்கிறது ஓட்டுப்போட்ட மக்களை.
மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்ட தி.மு.க கூட தாம் ஆட்சி செய்தபோது மக்களுக்காக செய்த ஒரே நல்ல காரியம் என்பதால் மானம் காக்க அறப்போராட்டம் என்று அக்கப்போராக நடத்தியது. ஆனால் கேப்டன்.... கேப்டன்... என்று அழைக்கப்படும் அண்ணன் விஜயகாந்த் ஏன் அமைதியாக உள்ளார்? உள்ளாட்சித்தேர்தலை கணக்குப் போடுகிறாரோ? உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் தேமுதிக கட்சித்தலைவர் சொன்னது என்னன்னா மக்களே,
எதிர்க்கட்சி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல என்று தற்போதைய சமச்சீர் கல்வி குறித்து எதிர்க்கட்சி & தேமுதிக தலைவர் குட்டிசுவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்
சொன்னதுக்கப்பறமா ஆளயே காணோமே , கழுதையை வாங்கித்தர நீங்களும் குரல் கொடுக்கலாமே கேப்டன். ஆனால் கேப்டன் பிரபாகரனில் நடித்ததை விட கேப்டனாக நன்றாக நடிக்கிறீர்கள்….
கேப்டனின் சாதனையாக உள்ளது என்னதெரியுமா
இந்த ‘கேப்டன்’ இதுவரை சரக்கு அடிக்காமலேயே சட்டமன்றம் சென்று வருவதை அவரது கட்சிக்காரர்களே வியப்பாக பார்க்கிறார்களாம். இதுதான் தே.மு.தி.கவின் தற்போதைய சாதனை!
யாரை நம்பி இனி நான் ஓட்டுப்போட… அட போங்கப்பா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக