இந்தியாவில் தற்காலத்தில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர்.
இந்தோ ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். "திராவிடம்' என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. மொழியியல் அறிஞர் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளை திராவிட மொழிகள் என அழைத்தார். தென்னிந்திய பேச்சு மொழிகளைக் குறிக்கும் போது, வட மொழி ஆய்வாளர்கள் "திராவிடி' என்ற சொல்லால் குறிப்பிட்டனர்.
தற்காலத்தில் 23க்கும் அதிகமான மொழிகள், திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன, 1.தமிழ், 2.மலையாளம், 3.கன்னடம், 4.தெலுகு, 5.கோண்டி, 6.குரூக், 7.துளு, 8.கூயி, 9.பிராகூய், 10.கூவி, 11.கோயா, 12.மால்தோ, 13.குடகு, 14.கோலாமி, 15.பர்ஜி, 16.கொண்டா(கூபி), 17.கதபா, 18.நாயக்கி, 19.பெங்கோ, 20.கோத்தா,21.தோடா, 22.மண்டா, 23.கொரகா என்பனவாகும்.
இவற்றுள், தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா என்ற எட்டு மொழிகளும் தென்திராவிட மொழிகள்; தெலுகு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலமி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டா என்ற 12 மொழிகளும் நடுத்திராவிட மொழிகள்; குரூக், மால்தோ, பிராகூய் என்ற மூன்றும் வட திராவிட மொழிகள் என்ற பகுப்பில் உள்ளடங்குகின்றன.
இந்திய நிலப்பரப்பில் பேசப்படும் இடங்களைக் கொண்டு இந்தப் பகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நன்றி: அரங்க சுப்பையா, நுõல்: "உலக மொழிகளின் வரலாறு'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக