ஒவ்வொரு முறையும் சென்னையில் சாலையில் பயணம் செய்யும் போது இருசக்கர வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையான பயணத்தால் கடுப்படையவும், ரௌத்திரம் அடையவும்
செய்கிறது.
ஏன் இப்படி என்று ஒரு நாள் நிதானமாக பார்க்கும் போது, அவசரம் அவசரம் அவசரம்
இதுமட்டுமே காரணமாக தெரிந்தது…
ஆனால் என்ன அவசரம் என்று பார்த்தால் காலையில் அலுவலகம்
செல்லவும், மாலையில் வீட்டிற்கு செல்லவும் அவ்வளவு அவசரம்…
சுடுதண்னீரை காலில் ஊற்றியவர்களைப்போல்
இருசக்கர வாகனத்தை உற்..ர் ர்ர் என்று விரட்டி முடிந்த அளவு இடப்பக்கமாகவே சென்று,
தோண்டிய கால்வாயில் விழுந்து நேரத்தை வீணாக்கி இருக்கிறார்கள். இடப்பக்கம் ஒரு வாகனம்
பழுதடைந்து நின்றிருக்கும் போது இவர்கள் அந்த வாகனத்தை கடக்க பல நிமிடம் காத்திருக்க
நேரிடும்… இதை விட ஒரு கொடுமை என்னவென்றால் அவசரத்தில் முன்னால் சென்ற வாகனத்தில் லேசாக
உரசியோ முட்டியோ பெரிய வாய் சண்டை போடுவார்கள்… இப்படி நேரத்தை வீணாக்கும் அவசரம் தேவைதானா….
இந்த அவசரக்காரகள் சென்னையில் அதிகம்,,, அது நானாகவோ,,, நீங்களாகவோ,, நமது நண்பர்களாகவோ,,
நண்பர்களின் தோழர்களாகவோ இருக்கலாம்… ஆனால் அவசரமு அஜாக்கிரதையும் ஆபத்துதான்..
இதோ சமீபத்தில் வந்த ஒரு புலனாய்வுத்தகவல்
-யோசிக்கலாமே…இனியாவது
சிந்தித்து நடைமுறைப்படுத்தினால் விபத்தின்றி சிறக்கலாம் .....
பதிலளிநீக்குமிக்க நன்றி தனபாலன் சார்...
பதிலளிநீக்கு