செவ்வாய், 19 நவம்பர், 2013

இன்றைக்கு உலக கழிப்பறை தினம்.... கொஞ்சம் நேரம் இருந்தா மூக்க மூடாம படிங்க பாக்கலாம்…!



·          உலகில், 250 கோடி மக்கள், கழிப்பறை சுகாதாரம் குறித்த விஷயத்தில், அக்கறை இல்லாமல் உள்ளனர். 


·         உலகில் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவோரில் 58 சதவீதம் பேர் இந்தியர்கள்


·          இந்தியாவைப் பொறுத்தவரை 28 சதவிகித மக்கள் மட்டுமே நல்ல கழிப்பறை வசதியோடு வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.


·         சரியான கழிப்பறை வசதியில்லாத காரணத்தால் பெண்களின் கல்வி, ஆரோக்கியம், கௌரவம் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகின்றன. குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்கள் படிப்பை தொடராமல் இடைநிறுத்தம் செய்வதற்கு தாங்கள் பயிலும் பள்ளியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.


·         பெரும்பாலான மேலை நாடுகள் ஆண்களுக்கு ஒரு கழிப்பிடம் கட்டினால் அந்த இடத்தில் பெண்களுக்கு இரண்டு கழிப்பிடங்கள் கட்ட வேண்டும் என சட்டம் இயற்றி உள்ளன.


·         59% இந்தியக் குடும்பங்களில் கைப்பேசி உண்டு. ஆனால், 47% குடும்பங்களில்தான் கழிப்பறைகள் உள்ளன.


·         இந்தியாவில் மக்கள் தொகையில் 120 கோடியில் 50 % சதவித மக்களின் விடுகளில் கழிப்பறை இல்லை.(2011 census)

·         நமது தமிழத்தில் 60 % சதவிதம் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை.


·         இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து வீடுகள் ஒரு கழிப்பறை பெற வேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயல்பட்டு , இந்த ஆண்டு இறுதிக்குள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லை என்ற நிலையை அடைய உள்ளது.


·         இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் கழிப்பறை வசதிகளின்றி, காலைக்கடன்களை கழிக்க மறைவான வெளியிடங்களுக்குச் செல்வதாலேயே பெரும்பாலான பெண்களும் சிறுமியரும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக காவல்துறையினரும் சமூக ஆர்வலர்களும் தெரி்விக்கின்றனர். ·         மக்களும் ,அரசாங்கமும் இணைத்து செயல்பட்டால் மட்டுமே இந்த அசிங்கத்தில் இருத்து இந்த தப்பிக்கும்.கழிவறைகள் தான் முக்கிய சுகாதார பிரச்னை.நோய் பரப்பும் இந்த சுகாதார பிரச்னை திர்க்கவிட்டால் ...பல புதிய நோய்களுக்கு வழிவக்கும்.

நமக்கு சரியான தீர்வுகள் தரமுடியவில்லையா? அப்பொழுதும் கவலைப்படத் தேவையில்லை. இருக்கவே இருக்கின்றது Bio-Technology. கிருமிகளற்ற, நாம் விரும்பும் மலர்களின் மணத்தோடு மலமும், சிறுநீரும் கழிக்க மாத்திரை கண்டுபிடிக்காமலா போய்விடுவார்கள்?

வெள்ளி, 1 நவம்பர், 2013

விக்கல் ஏன் வருகிறது?

திடீரென விக்கல் வருகிறது. தண்ணீர் குடித்ததும் காணாமல் போகிறது. அது எப்படி என்று யோசித்திருக்கிறீர்களா?
இந்த விக்கல், தும்மல், கொட்டாவி, பசி, பட்டினி, தூக்கம்... இதெல்லாம் எப்போ வரும்னு தெரியாது. வந்தாலும் ஏன்னு கேட்க முடியாதுஎன்று முத்து படத்தில் ரஜினி வசனம் பேசியது போல, விக்கல் எப்போது வரும் என்று யூகிக்க முடியாது. நம் உடலில் வயிற்றையும், மார்பையும் இணைக்கும் பகுதிக்கு உதரவிதானம் என்று பெயர். இந்தப் பகுதியில்ப்ரெனிக் நெர்வ்ஸ்’ (Phernic nerves) என்ற நரம்புகள் உள்ளன. இதேபோலடயாஃப்ரம்’ (Diaphragm) என்ற தோல் போன்ற ஒரு தசையும் நம் மார்பக பகுதியில் உள்ளது.ப்ரெனிக்ஸ் நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவிதஎரிச்சல்’ (irritation) காரணமாக டயாஃப்ரம் திடீரென்று வேகமாகச் சுருங்கும். அப்போது அதிகப்படியான காற்று நுரையீரலுக்குள் செல்கிறது. இதனால் டயாஃப்ரம் தசை இழுத்துக்கொள்கிறது. இதன் காரணமாக ஏற்படுவதே விக்..விக்.. என்ற ஓசையுடன் நாம் உணரும் விக்கல்.விக்கலை நிறுத்த தண்ணீரையோ ஒரு பிடி உணவையோ விழுங்கும்போது மேற்சொன்ன செயல்பாட்டில் தடங்கல் (Distraction) ஏற்பட்டு ப்ரெனிக்ஸ் நரம்புகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதால் விக்கல் நின்றுவிடுகிறது.